Header Ads



முஸ்லிம் அமைச்சர்களுடைய இராஜினாமா, பயங்கரவாதிகள் தப்பிக்க வாய்ப்பாக அமைகிறது - சார்ள்ஸ்

முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா ஒற்றுமையை வெளிப்படுத்தினாலும் பயங்கரவாதிகள் அல்லது நேரடியாக குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதிகள் தப்பித்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையுமென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

வவுனியா ஓமந்தை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வசந்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டி வைத்ததன் பின் கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசியல் சூழ்நிலையானது அரசாங்கத்தினுடைய ஸ்திரமற்ற தன்மை காரணமாக மக்களுடைய பாதிப்பை நிவர்த்தி செய்யக்கூடிய வகையிலே அரசாங்கத்தினுடைய கவனம் மக்களுடைய கவனத்தில் செல்லவில்லை.

பயங்கரவாதத் தாக்குதலின் பிற்பாடு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தாக்குதலின் பிற்பாடு அரசாங்கத்தில் இருக்கின்ற பங்காளி கட்சிகள் அதைவிட பலருடைய கருத்து அந்த தாக்குதலை மையப்படுத்தியதாகவே இன்றுவரை இருக்கின்றது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படிப்பட்ட உதவிகளை செய்ய வேண்டும் என்பதில் தற்பொழுது ஒரு ஸ்திரமற்ற தன்மையிலேயே அரசாங்கம் இருக்கின்றது.

குறிப்பாக வன்னிப் பிரதேசத்தில் கடும் வரட்சியால் மக்கள் நேரடியாக பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தவிதமான அவசரமாக வழங்கக்கூடிய உதவிகள் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்படவில்லை என்பது தான் என்னுடைய கருத்தாகும்.

முஸ்லிம் அமைச்சர்கள் அவர்களுடைய இராஜினாமாவை செய்திருந்தார்கள் குறிப்பிட்ட மூன்று நபர்கள் மீதான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

அப்படியான சூழ்நிலையில் ஒரு தனிப்பட்ட ரீதியில் செய்யவேண்டிய விடயத்தை ஒரு சமூகம் சார்ந்து அவர்கள் செய்திருப்பது அவர்களுடைய ஒற்றுமையை வெளிப்படுத்தினாலும் பயங்கரவாதிகள் அல்லது நேரடியாக குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதிகள் தப்பித்து கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைகிறது.

குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள் இரண்டு ஆளுநர்கள் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டுக்கள் இருந்தபோதும் சகல அமைச்சர்களும் ஒன்றாக ராஜினாமா செய்ததன் பிற்பாடு அவர்கள் ஒரு குறிப்பிட்ட நபர்களை காப்பாற்றுவதற்காக அவர்கள் ஒற்றுமையாக எடுத்த இந்த தீர்மானம். ஒன்று பயங்கரவாதத்திற்கு அவர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். அல்லது ஒரு சிலரை தண்டிப்பதை அவர்கள் விரும்பவில்லை.

அப்படி ஒன்றாக ராஜினாமா செய்ததன் பிற்பாடு அந்த ஒரு சிலரில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடைபெற வில்லை. அவர்கள் ராஜினாமா செய்யாமல் மூன்று நபர்களையும் விசாரிக்க முயற்சித்திருந்தால் கூடுதலான விசாரணைகள் நடைபெற்றிருக்கும்.

தற்பொழுது ஒரு சமூகம் சார்ந்த பிரச்சினையாக அது பார்க்கப்படுகிற காரணத்தினால் விசாரணைகள் எந்த அளவுக்கு நடைபெறும் அதில் எவ்வளவு உண்மை தன்மை இருக்கின்றது என்பது எனக்கு சந்தேகம் தான்.

தற்போது இலங்கையில் ஒரு அரசாங்கம் ஸ்திரமற்ற தன்மையில் தான் இருக்கின்றது.

அரசாங்கத்தினுடைய பார்வையானது பயங்கரவாத தாக்குதலையும் ஜனாதிபதித் தேர்தலையும் நோக்கமாக தான் இருக்கின்றது.

மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய சூழ்நிலை தொடர்பாக அரசாங்கம் கூடிய கவனம் எடுக்கவில்லை. அது தொடர்பாக எனி வருகின்ற பாராளுமன்ற அமர்வுகளில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவோம் என மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இது தானடா.

    ReplyDelete

Powered by Blogger.