கோத்தபாய போட்டியிட்டாலும் அவருக்கு இருக்கும், இனவாதத்தினால் அவரால் வெற்றி பெற முடியாது
மகிந்த ராஜபக்ஷ இருக்கும் வரை கோத்தபாய ராஜபக்ஷவிற்கு ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் சந்தர்ப்பம் கிடைக்காது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது. உங்களுடைய நிலைப்பாட்டின் படி அவர் போட்டியிட சாத்தியப்பாடு இருக்கிறதா என இதன்போது கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு அவர் பதிலளிக்கையில், அது எப்போதும் இடம்பெறாது. மகிந்த ராஜபக்ஷ இருக்கும் வரை கோத்தபாய ராஜபக்ஷவிற்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்காது.
கோத்தபாய, தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளுக்கு நீதிமன்றத்திற்கு கொடுக்கும் அழுத்தமாகவே இவ்வாறான பிரச்சாரங்களை முன்னெடுத்து செல்கின்றார்.
இருப்பினும் அவர் போட்டியிட்டாலும் அவருக்கு இருக்கும் இனவாதத்தினால் அவரால் வெற்றி பெற முடியாது என தெரிவித்துள்ளார்.
Post a Comment