அபாயா அணிந்து பணிக்குவந்த முஸ்லிம், சகோதரிகளுக்கு எதிராக சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம்
அபாயா அணிந்து பணிக்கு வந்த முஸ்லிம் ஊழியர்களுக்கு எதிராக, கண்டி பாததும்பர பிரதேச செயலக பெரும்பான்மை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நான்கு முஸ்லிம் பெண்கள் கண்டி பாததும்பர பிரதேச செயலகத்தில் பணியாற்றும் நிலையில் இன்று காலை -21- அவர்கள் பணிக்கு வந்தபோது சக ஊழியர்கள் இவர்களுக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் அலுவலகத்திற்கு வெளியே சென்று பணி பகிஶ்பரிப்பில் ஈடுபட்டதாக இது தொடர்பில் மடவளை நியுசுக்கு கருத்து வெளியிட்ட பிரதேச செயலக முஸ்லிம் ஊழியர் ஒருவர் குறிபிட்டார்.
அதனை தொடர்ந்து முஸ்லிம் பெண் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள இரண்டாம் நிலை உயரதிகாரி குறித்த ஊழியர்களை அரை நாள் விடுமுறையில் செல்லுமாறு யோசனை முன்வைத்துள்ளார்.
அவ்வாறு செய்யாத விடத்து அலுவலக பணிகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்படும் என்பதை தெளிபடுத்தியுள்ள குறித்த அதிகாரியின் யோசனைக்கு அமைவாக முஸ்லிம் ஊழியர்கள் 4 பேரும் அரை நாள் விடுமுறையில் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட ஊழியர்கள் குறிப்பிட்டனர்.
abaya அணிந்து வந்த நான்கு பெரும் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்தார்களா? அப்படி இல்லை என்றால் உடனடியாக அதை செய்யவும் அப்படி இல்லை என்றல் கீழுள்ள இரண்டில் ஒன்றை செய்யவும்
ReplyDelete1 - சேலை அணிந்து வருதல்
2 - தொழிலை ராஜினாமா செய்தல்
எது மிகப்பொருத்தமோ அதை தெரிவு செய்யலாம்