முஸ்தபா என்ற, சத்தாம் ஹுசைனின் பேரன்
2003 இல் ஈராக் தேசத்தின் முன்னால் ஜனாதிபதி சதாம் ஹுசைன் அவர்கள் அமெரிக்க ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.அப்போது அமெரிக்காவின் புலனாய்வுப்பிரிவின் (CIA) மூத்த உருப்பினராக இருந்தவரும் சதாம் ஹுசைன் அவர்களை விசாரணை செய்தவருமான நிக்சன் ஜோன் என்பவர் “De briefing the president” எனும் நூலை 2016 இல் வெளியிட்டார்.
அந்நூலின் ஆரம்பத்திலேயே “ புதிய ஈராக்கை கட்டியெழுப்புவதற்காக அமெரிக்கா செலவிட்ட அதன் வீரம்மிக்க இளைஞர் யுவதிகளின் உயிர்களும் மூன்று டிரிலியனை விடவும் அதிகமான அமெரிக்க டொலர்களும் வீனானவை, அமெரிக்கா சதாம் ஹுசைன் பற்றியும் அவர் அரபு இஸ்லாமிய உலகில் செழுத்திய செல்வாக்கு, குறிப்பாக சுன்னி முஸ்லிம்களின் தீவிரவாத எழுச்சிபற்றியும் கொண்டிருந்த எண்ணம் மிகவும் தவரானது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஈராக்கை அழிப்பதற்காக அமெரிக்காவும் மேற்கத்தேய மீடியாக்களும் சொன்ன செய்திகளை சிறிதும் இசகாமல் பிசகாமல் ஏனைய ஊடகங்கள் வெளியிட்டன. அவர்களால் சதாம் ஹுசைனின் கைதும் மரணதண்டனையும் நியாயப்படுத்தப்பட்டன. ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் காலையில் அவருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தி இன்னும் என்காதுகளில் ஒலிக்கின்றன. அப்போதும் முஸ்லிம்களின் ஒரு பெருந்தலைவர் அநியாயமாகக்கொல்லப்படுகிறார் என்ற எண்ணமே எனக்கு இருந்தது,இப்போது அது நிருபணமாகியிருக்கின்றது.
சதாம் ஹுசைனைப்பற்றி பிழையான விம்பத்தை மக்கள் மத்தியில் ஊடகங்கள் உருவாக்கின என்பதனை அன்று நம்பாவிட்டாலும் கடந்த சில மாதங்களாக இலங்கையிலுள்ள ஊடகங்களின் நடவடிக்கையிலிருந்து பொய்யான செய்திகள் எவ்வாறு மக்களை சென்றடைகின்றன என்பதனை அறிவோம்.
ஈராக் யுத்தத்தினால் அப்பாவி மக்கள் பத்து இலட்சம் பேர் கொல்லப்பட்டனர்.இது பற்றி கருத்துத்தெரிவித்த முன்னால் பிரிடிக்ஷ் பிரதமர் “நாம் பிழை செய்துவிட்டோம்”.
இந்த பீடிகையுடன சதாம் ஹுசைன் அவர்களின் பேரர்களின் ஒருவரான முஸ்தபா சதாம் ஹுசைன் அவர்களின் கடைசி மணித்தியாலங்கள் பற்றிய வீரதீர செயலை பகிர்ந்து கொள்கின்றேன்.
அப்போது 14 வயதே நிரம்பியிருந்த முஸ்தபா சதாம் ஹுசைன் அவர்களுக்கு சொந்தமான ‘சிக்ரிட்டில்’ அமைந்திருந்த ‘செய்க் நவாஜ்பா” எனும் மாளிகையில் தனது தந்தை குசை,சித்தப்பா உதய் மற்றும் மெய்பாதுகாவலர் அப்துல் சமத் ஆகியோருடன் இருக்கையில் 400 பேர் அடங்கலான அமெரிக்க ரானுவத்தினால் சுற்றிவலைக்கப்பட்டனர்.
மாளிகை வாசலை உடைத்துக்கொண்டு ராணுவத்தினர் உள்ளே நுழைந்தபோது என்ன நடந்தது என்று அமெரிக்க வீரர் ஓருவர் பின்வருமாறு குறிப்பிட்டார்.
“முஸ்தபா ஹுசைனின் கண்ணெதிரிலேயே அவரின் தந்தை,சித்தப்பா,மெய்பாதுகாவலர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.சற்று நேரத்தில் குறிதவறாமல் சுடும் ஸ்னிபர் துப்பாக்கியினால் எம்மீது வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.இதனால் எம்மில் 14 பேர் கொல்லப்பட்டனர்.ஆறு மணி நேரமாக நடைபெற்ற சமரின் பின் முஸ்தபா சத்தாம் கொல்லப்பட்டார்.சமரில் ஈடுபட்டது 14 வயது நிரம்பிய சிறுவன் என்பதனைக்கண்டபோது ஆச்சரியமடைந்தோம்”.
இதுபற்றி நிவ்யோக் டைம்ஸ் இன் பத்திரிகையாளர் ரொபட் எய்ஸ்க் எழுதும்போது “இதுபோன்ற ஒரு சிறுவன் எமக்கிருந்த்திருந்தால் சந்திக்கு சந்தி சிலை வைத்திருப்போம்” என்று குறிப்பிட்டார்.
இந்த சஹீதுகளின் பாவங்களை அழ்ழாஹ் மன்னிப்பானாக.
Aameen!
ReplyDelete