Header Ads



முஸ்லிம்களின் மனதில் வாழும், பதியுதீன் மஹ்மூத்

- பரீட் இக்பால் -

இலங்கையின் அரசியல் வரலாற்றில் தீர்க்கதரிசனமும் செயல்திறனும் மிக்கசுயலாபம் கருதாத முஸ்லிம் தலைவர்களில் ஒருவர் கலாநிதிஅல்ஹாஜ் பதியுதீன் மஹ்மூத் ஆவார். எஸ்.எல்.எம். நெய்னாமுஹம்;மத் பாத்துமாநாச்சியார் தம்பதிகளின் புதல்வராக பதியுதீன்; முஹம்;மத் வெலிகமையில் 1904 ஆம் ஆண்டு ஜ˜ன் மாதம் 23 ஆம் திகதிபிறந்தார். ஆரம்பக் கல்வியைமாத்தறையில் உள்ளபுனித ஜோசப் கல்லூரியிலும் அடுத்துகொழும்புவெஸ்லிகல்லூரி,மருதானை ஸாஹிராக் கல்லூரி என்பவற்றிலும் பயின்றுஉயர் கல்வியை இந்தியஅலிகார் சர்வகலாசாலையில் பயின்றுமுதுமானிப் பட்டத்தையும் பெற்றார். பன்மொழிகளிலும் அவர் பாண்டித்தியம் பெற்றார்.

பதியுதீன் மஹ்மூத் அலிகார் சர்வகலாசாலையில் கல்விகற்றகாலத்தில் இந்தியாவின் இரு பெரும் சுதந்திர இயக்கதலைவர்களான ஜவஹர்லால் நேரு,முஹம்மத் அலி ஜின்னாஆகியோர்களுடன் நெருங்கிப் பழகும்வாய்ப்புகிடைத்தது. அத்தோடுபதியுதீன் மஹ்மூதீன் செயற்திறனும் பேச்சுவன்மையும் அவரைதமதுசகமாணவர்களிடையேபுகழும் மதிப்பும் உடையவராகஆக்கியது. எனவே,லக்னோநகரில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டஅகில இந்தியமாணவர் சம்மேளனத்தின் தலைவராகஅவர் ஏகமனதாகதெரிவுசெய்யப்பட்டார். அதன் ஆரம்ப கூட்டத்தின் போதுமேடையில் பதியுதீன் மஹ்மூத் தலைமைவகிக்கஅவரது இரு புறங்களிலும் இரு பெரும் தேசியதலைவர்களான ஜவஹர்லால் நேருவும் முஹம்மதுஅலி ஜின்னாவும் அமர்ந்திருந்ததுகுறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் பதியுதீன் மஹ்மூத் அவர்கள் ஆப்கானிஸ்தான் மன்னரின் விருந்தினராகஅந்நாட்டிற்குவிஜயம் செய்தார். அத்தோடுமலேஷியா,பர்மா (மியன்மார்) ஆகியநாடுகளிலும் சொற்பொழிவாற்றுவதற்காகஅழைக்கப்பட்டார். அவரதுபேச்சினால் ஆத்திரமுற்றஅக்காலபிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவரைமலேஷியாவில் இருந்தும் பர்மாவில் இருந்தும் உடனடியாகவெளியேறுமாறுஉத்தரவிட்டதுகுறிப்பிடத்தக்கது.

இலங்கைதிரும்பியதும் அவர் கம்பளை ஸாஹிராகல்லூரியின் அதிபராகபதவியேற்றார். நான்குவகுப்பறைகளைகொண்டஒருகொட்டிலாகஆரம்பிக்கப்பட்டிருந்தஅப்பாடசாலைஓர் உன்னதகலைக்கூடமாகமாற்றியமைத்தபெருமை பதியுதீன் மஹ்மூத் அவர்களையே சாரும். தனது இறுதி மூச்சுவரைகம்பளை ஸாஹிராகல்லூரியின் மீதுஅளவிலாபற்றும் கரிசனையும் உடையவராகவேஅவர் விளங்கினார்.

கொழும்பு ஸாஹிராகல்லூரியில் கல்விகற்கும் காலத்திலேயே எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவுடன் தொடர்புஏற்பட்டது. அத்தொடர்பானதுபிற்காலத்தில் மிகநெருங்கியநட்பாகமாறியது. பண்டாரநாயக்காவின் அரசியல் வாழ்க்கையில் மிகவிசுவாசத்திற்குரியதோழராகவும் ஆலோசகராகவும் பிரச்சினைதீர்ப்பவராகவும் ஆற்றல் மிக்கபிரச்சாரகராகவும் பதியுதீன் மஹ்மூத் விளங்கினார்.

1956 இல் பண்டாரநாயக்க ஏனையகட்சிகளுடன் கூட்டணிஅமைத்துதேர்தலில் அமோகவெற்றிபெறுவதற்குபின்னனியில் நின்றுஉழைத்தவர்களுள் பதியுதீன் மஹ்மூத் மிகவும் பிரதானமானவர். எனவேதான் பண்டாரநாயக்கதனதுஅமைச்சரவையைதெரிவுசெய்தபோதுபதியுதீன் மஹ்மூதைமாத்திரமேதன் அருகில் ஆலோசகராக இருத்திக்கொண்டார். அச்சந்தர்ப்பத்தில்உருவானஅரசாங்கத்தில் கல்விஅமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறுபண்டாரநாயக்கபலமுறைவற்புறுத்தியும் கூட பதியுதீன் மஹ்மூத் எவ்விதபதவிகளையும் ஏற்றுக்கொள்ளமறுத்துவிட்டார். பின்னர் ஐ.நா சபைக்கான இலங்கை தூதுக் குழுவின் உறுப்பினராகபணியாற்ற ஒப்புக்கொண்டார். 1959இல் பண்டாரநாயக்ககொலைசெய்யப்பட்டதன் பின்னர் இலங்கைதிரும்பியபதியுதீன் மஹ்மூத். ஸ்ரீமாவோபண்டாரநாயக்கஅம்மையாரின் அரசியல் பிரவேசத்திற்குமிகமுக்கியகாரணகர்த்தாகவும் உறுதுணையாகவும் இருந்தார். 1960 இல் ஸ்ரீமாவோஅம்மையார் அமைத்தஅரசாங்கத்தில் கல்வி,ஒலிபரப்புத் துறைஅமைச்சராகபதியுதீன் மஹ்மூத் நியமிக்கப்பட்டார். சுகாதார,வீடமைப்புஅமைச்சராகவும் சிறிதுகாலம் பணியாற்றினார்.

யாழ்ப்பாணம் சோனகத்தெருவில் ஆரம்பகாலங்களில் யாழ் மஸ்ற உத்தீன் பாடசாலை (புதுப்பள்ளி) முஹம்மதியாகலவன் பாடசாலை (அல்லாபிச்சைபள்ளி) வண்மேற்கு முஸ்லிம் பாடசாலை (மண்ப உல் உலூம் மத்ராஸா) ஆகிய மூன்றுகனிஷ்ட பாடசாலைகளிலும் கல்;விகற்றமாணவர்கள் மேற்படிப்பைதொடர்வதற்காகயாழ். வைத்தீஸ்வரா,யாழ் மத்தியகல்லூரி,யாழ் இந்துக் கல்லூரி போன்றபாடசாலைக்குசென்றனர்.

எனினும் அக்காலத்தில் வசதிகுறைந்தவர்கள் கனிஷ்ட பாடசாலைகளிலிருந்துமேற்படிப்பைதொடரமுடியாமல் படிப்பை இடைநடுவில் விட்டுவிட்டுவேறுதொழில்களைநாடுபவர்களாக இருந்தனர். இதுகவலைக்குரியவிடயமாக இருந்தது.

இக்காலகட்டத்தில் இலங்கையின் தேசியவீரரும் சிறந்தகல்விமானும் கொழும்பு ஸாஹிராகல்லூரி அதிபருமாகியஅல்ஹாஜ் ரி.பி.ஜாயா அவர்களின் தலைமையிலான குழு 1938 இலும் 1942 இலும் விஜயம் செய்தது. யாழ் முஸ்லிம் மாணவர்கள்; கல்வியில் தலைசிறந்துவிளங்கவேண்டுமென்பதேகுறிக்கோளாக இருந்தது. அதனால் யாழ்ப்பாணத்திலும் கொழும்பு ஸாஹிராகல்லூரியின் கிளையொன்றுநிறுவப்படவேண்டும் என்பதில் அக்கறைசெலுத்தினர். எதிர்காலத்தில் முஸ்லிம் சமுதாயம் கல்வியில் மேலோங்கிகாணப்படவேண்டும்  என்றும்அதற்கானஅடித்தளத்தைகாலதாமதமின்றிஆரம்பிக்குமாறுஎடுத்து கூறிவிட்டுசென்றார்.

யாழ் முஸ்லிம் முக்கியஸ்தர்களின்முயற்சியால் கல்லூரியின் கட்டிடம் மேலெழத் தொடங்கியது. ஸாஹிராகல்லூரிஎன்றபெயரிலேயே இருந்தது. 1962 ஆம் ஆண்டுடிசம்பர் மாதத்திலேயே 6ஆம் வகுப்பிற்குமேற்பட்டமாணவர்களை ஸாஹிராகல்லூரியில் சேர்;ப்பதற்கானவிண்ணப்பங்கள் கோரப்பட்டன.
அக்கட்டத்தில் அமைச்சர் அல்ஹாஜ் பதியுதீன் மஹ்மூத் அவர்களுக்குகல்விஅமைச்சர் பதவியும் கிடைத்தது. ஆரம்பத்தில் கல்லூரியின் கட்டிடவேலைகளுக்குஆலோசனைகளையும் உற்சாகமொழிகளையும் வழங்கியஅவருக்குகல்விஅமைச்சர் பதவிகிடைத்ததும் கல்லூரி மீதிருந்தஅக்கறைபன்மடங்காகபெருகியது.
கல்லூரியைஅபிவிருத்திசெய்வதில் பெரும்பங்குவகித்தார். அவர் கல்லூரிக்குசெய்தஉதவிகளைமறைக்கவோமறக்கவோமுடியாது.

1963 ஆம் ஆண்டுகட்டிடம் கல்லூரியாகமாறியது. 1963 ஆம் ஆண்டு ஜனவரிமாதம் 5 ஆம் திகதியாழ் முஸ்லிம் சமூகத்திற்குஒருநன்னாள்.அந்தநாள் அன்றுதான் டாக்டர் அல்ஹாஜ் பதியுதீன் மஹ்மூத் அவர்கள் ஸாஹிராகல்லூரி என்றுநாமம் 'ண்டிருந்த இக்கல்லூரியை உத்தியோகப'ர்வமாகதிறந்துவைத்தார். யாழ்ப்பாணமேயர் திரு.அல்பிரட் துரையப்பாவும் கலந்துசிறப்பித்தார்.

ஸாஹிராகல்லூரி என்றபெயரளவில் தீர்மானிக்கப்பட்டிருந்தும் அத்திறப்புவிழாவின் போதுடாக்டர் அல்ஹாஜ் பதியுதீன் மஹ்மூத் அவர்கள் இஸ்லாத்தின் மூன்றாம் கலீபாவாகிய உஸ்மான் (ரழி) அவர்களைநினைவுபடுத்துமாக ஒஸ்மானியாகல்லூரி என்றநாமத்தை சூட்டினார். அன்றிலிருந்து இன்றுவரைஒஸ்மானியாகல்லூரி என்றபெயருடனேயேதலைநிமிர்ந்துநிற்கிறது.

இவரதுகாலத்தில் இலங்கையின் கல்வித்துறையில் பலபுரட்சிகரமானமாற்றங்கள் ஏற்பட்டன. தனியார் பாடசாலைகள் பலஅரசுடையமையாக்கப்பட்டன. இவற்றில் முக்கியமானது இவரதுகாலத்திலேதான் இலங்கைவானொலி முஸ்லிம் சேவைபகுதியொன்றுஉருவாக்கப்பட்டது. ஸ்ரீலங்காசுதந்திரகட்சியைபிரதானமாகக் கொண்டஐக்கியமுன்னனிஅரசாங்கம் 1970இல் பதவிக்குவந்தபோதுகலாநிதி; பதீயுதீன் மஹ்மூத் மீண்டு;ம்கல்விஅமைச்சராகநியமிக்கப்பட்டார். பதவிக்காலத்தில் இலங்கையின் கல்வி,உயர் கல்வித் துறைகளில் பாரியமாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.கட்டுபெத்ததொழில்நுட்பக் கல்லூரி பல்கலைக்கழகமாகதரமுயர்த்தப்படல்,யாழ்ப்பாணபரமேஸ்வராகல்லூரிபல்கலைக்கழகமாகமாற்றப்படல், 1972 இல்கல்விச் சீர்த்திருத்தம் என்பனஅவற்றில் சிலவாகும்.

அதுவரைகாலமும் நியமனஎம்.பி. ஆக நாடாளுமன்றத்தில் இடம்பிடித்துவந்தபதியுதீன் மஹ்மூத், 1977 இல் மட்டக்களப்புதேர்தல் தொகுதியில் போட்டியிட்டபோதுதோற்கடிக்கப்பட்டார். அதன் பின்னர் தீவீரஅரசியலில் இருந்துஒதுங்கிவாழ்ந்தபோதிலும் இலங்கையின் இனப் பிரச்சினையைதீர்ப்பதுதொடர்பானஆரம்பகாலப் பேச்சுவார்த்தைகளில் உற்சாகமாகக் கலந்துகொண்டார்.

இறுதிக்காலத்தில் நோயினால் அவதிப்பட்டபோதிலும், இறக்கும்வரைபதியுதீன் மஹ்மூத் 1997 ஆம் ஆண்டு ஜ˜ன் மாதம் 16 ஆம்; திகதி இறையடிசேர்ந்தார். மர்ஹ˜ம் கலாநிதிஅல்ஹாஜ் பதியுதீன் மஹ்மூதைத் தொடர்ந்துமர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் இலங்கைவாழ் முஸ்லிம்களுக்குவிடிவெள்ளியாகத் திகழ்ந்தார். இவர்களுக்குஅடுத்தபடியாகஒரேகுடையின் கீழ் முஸ்லிம் சமுதாயத்தைஒன்றுதிரட்டகூடியதிராணிமிக்கதலைவர் ஒருவர் இனிமேலாவதுதோன்றுவாரா?

4 comments:

  1. IPPOLUZU ULLA MUSLIM ARASIAL
    WAZIHAL,SHIIIIIII, IWARHAL, ALLAH WUKKU
    PAYANDAWARHALA.
    MUSLIMKALAI EMATRUHIRARHAL. POI SHOLHIRARAHAL. KODUTHA WAKKAI THATTIKALIKKIRARAHAL.
    IWARHALUKKU, YARUDAYA ADAYALAM IRUKKIRAZU, ENBAZAI HADEESHAL MOOLAMAHA, ARIHIROM.

    ReplyDelete
  2. A great person. We never forget him.

    ReplyDelete
  3. The best Muslim politicians, Sri Lanka ever seen. He never go behind any body.

    ReplyDelete

Powered by Blogger.