Header Ads



"முஸ்லிம் அரசியல்வாதிகள் பிக்குகளின் கைகளில், பிரச்சினையை ஒப்படைத்தமை ஆபத்தானது"

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் பௌத்த பிக்குகளின் கைகளில் பிரச்சினையை ஒப்படைத்துள்ளமையானது ஆபத்தான விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, தனது அலுவலகத்தில் வைத்து இன்றைய தினம் -17- கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம் அமைச்சர்களுடைய பதவி விலகலை வரவேற்கத்தக்க விடயமாக நான் பார்க்கவில்லை. ஏற்கனவே அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீதும், ஆளுநர் ஹிஸ்புல்லா மீதும் அழுத்தங்கள் நாடு பூராகவும் இருந்தது.

அப்போது அவர்கள் இருவரும் அல்லது ஒட்டுமொத்தமாக முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியிருந்தால், அவர்கள் தங்களது நியாயப்பாட்டை வெளிப்படுத்தும் தன்மையோடு பதவி விலகியுள்ளார்கள் என்பதை ஏற்று கொண்டிருக்கலாம்.

ஆனால் இப்போது அவர்கள் இரண்டு தவறுகளை செய்துள்ளார்கள். ஒன்று பௌத்த பிக்குகளின் கைகளில் இந்த பிரச்சினையை கொடுத்துள்ளார்கள்.

சாதாரண சூழலில் விலகாது பௌத்த பிக்குகள் உண்ணாவிரதம் இருந்த பின்பு தங்களால் நாட்டில் பாரிய பிரச்சினை வரும் என்ற அச்சம் காரணமாக தான் அவர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளார்களே தவிர, நாட்டில் நன்மை ஏற்பட வேண்டும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று அவர்கள் செய்யவில்லை என்பது என்னுடைய குற்றச்சாட்டு.

ஏற்கனவே பௌத்த மதத்திற்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதை நாம் குறையாக சொல்லி வந்திருக்கின்றோம்.

தற்போது பௌத்த பிக்குகள் தங்களுடைய மதம் சார்ந்த செயற்பாடுகளை மறந்து எல்லா விடயத்திலும் தலையிட்டு அரசியல் ரீதியாக பெரும்பான்மை இனத்திற்கு வலு சேர்க்கின்ற வகையில் செயற்படுகிறார்கள்.

இந்த நாட்டில் இருக்கின்ற தமிழ், முஸ்லிம், மலையக மக்களுடைய பிரச்சினைகளில் அவர்களுடைய ஆதிக்கம் கூடுதலாக இருப்பதற்கான ஒரு சக்தியாக இது மாற்றப்பட்டுள்ளது.

ஆகவே முஸ்லிம் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் புத்த பிக்குகளின் கைகளில் ஒப்படைத்து விட்டு பதவி விலகியுள்ளமை தேசிய இனமாகிய எங்களுக்கு பாரிய பிரச்சினைகளை உண்டு பண்ணியுள்ளது.

எமது தீர்வு விடயத்திலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலையை பிக்குகளின் போராட்டத்தின் பின்னரான ஒட்டுமொத்த பதவி விலகல் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்னும் பிரச்சினைகளும், குழப்பங்களும் வரும்.

அத்துடன் முஸ்லிம் தலைவர்கள் ஒற்றுமையாக செயற்படுவதாக கூறப்படுகிறது. தமிழர் தரப்பில் ஒற்றுமை இல்லை என பேசப்படுகிறது. ஆனால் அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது எனது கருத்து என தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. செல்வம் அடைக்கல நாதன் ஐயா அவர்களின் கருத்து யதார்த்தமானது. கொஞ்ச காலத்திற்கு அமைச்சர் பதவியில்லாமல் இருந்தால் என்ன குடியா முழுகிப் போகும். சகோதர இனத் தலைவரகளையும் அணைத்துச் செல்லுங்கள்.

    ReplyDelete
  2. The truth is Srilanka has completed all tests to become a
    racist country ! Leaders of all communities , politicians
    as well as the clergy of all religions are responsible for
    this situation . None of them did nothing to control the
    situation slipping out of their hands and instead a lot
    was done to create and maintain this situation as long as
    possible , until it exploded ! Selvam Adaikkalanathan is
    not wrong but he must not forget the role of L T T E's
    unwinnable war that encouraged the Buddhist Extremists
    to go after Muslims next ! Vedda Chief is reported to
    have said " S L politics is a stinking cesspit" and for
    that reason he doesn't want to contest for presidency !

    ReplyDelete
  3. நண்பர் அடைக்கலநாதன் சொல்வது உண்மை. எனினும் தமிழர் இலங்க அரசியல் செய்கிறபோது சிக்கல் இருக்கும் எனினும் தமிழர் அரசியல் இந்து சமுத்திர மற்றும் சர்வதேச பரிமாணம் பெற்றபோது அவர்கள் தலையிடுவதில்லை. 1987ல் இந்திய படைகள் வருகை வடகிழக்கு இணைந்த மாகாணசபை திருகோணமலையில் சிங்கள குடியேற்றங்கள் சீர்குலலைப்பு போன்ற விடயங்களின்போதேலாம் அவர்கள் மவுனமாகவே இருந்தார்கள். இந்தியா வெளியேறிய பிறகும் தீர்வின் அடிப்படையாக மேற்க்குநாடுகள் வடகிழக்கு இணைப்பை பாதுகாத்தது. 2006ல் ஜெனீவா பேச்சுவார்தை முறிவோடு மேற்குடனும் முறிந்து தமிழர் மீண்டும் இலங்கை அரசியல் செய்ய நேர்ந்தபோதுதான் பிக்குகள் வாய்திறந்தார்கள். இணைப்பு துண்டிக்கபட்டது, மீண்டும் தமிழர் அரசியல் இந்துசமுத்திர சர்வதேச தன்மை பெறுவதால் பிக்குகள் அமைதியடைவார்கள்.மலையக தமிழர்களுடன் நெடுங்காலமாக பிக்குகள் அடக்கியே வாசிக்கின்றனர். ஆதலால் முஸ்லிம்கள் இலங்கை மலையகத் தமிழருடன் சேர்ந்து போராடுவது மூவருக்கும் வெற்றியாக முடியும் என்பதைச் சொல்லுங்கள். வரவேற்கிறேன். நண்பா, முஸ்லிம்கள் அரசியல் எங்களைப் பாதிக்கும் என்பதை சரியென்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.