"இறைவன் அளித்த அருட்கொடையை, ஒரு நொடியிலும் பறிப்பான்" (உண்மைச் சம்பவம்)
சத்திரசிகிச்சை கூடத்திற்கு முன்னால் இருந்த பேஷன்ட்கள் ஒவ்வொருவராக check பண்ணிக்கொண்டிருந்தேன்
23 வயது இளைஞர். ஸ்ட்ரச்சரில் இருந்தார்
“என்ன நடந்த?”
“பைக் எக்சிடென்ட்”
என்ன ஒபரேஷன் எனப் பார்த்தேன்- முள்ளந்தண்டு சிகிச்சை ( spinal fixation) என இருந்தது.
“கால்களில் உணர்ச்சி இருக்கா?”
தலையை தூக்கி கால்களைப் பார்த்தார்.
“என்ட தொப்புளுக்கு கீழ எந்த உணர்ச்சியும் இல்ல, எந்த இயக்கமும் இல்ல”
எக்ஸ்ரேய்களைப் பார்த்தேன். முள்ளந்தண்டு எலும்பு ஒன்று உடைந்து, முண்ணான் இருக்கும் இடத்தை நசுக்கியபடி இருந்தது.
அவரை மயக்கி, முகங்குப்புற புரட்டி, படுக்கையில் வைத்த போது, மலங்கழித்திருந்தார்- அவரை அறியாமலே.
..................................
இன்று ஒபரேஷன் முடிந்து 12 நாட்கள். அவருடைய நிலையில் எந்த மாற்றமுமில்லை.
“சேர் இனி என்ன செய்யுற?”
“இனி இப்படித்தான்”
“நான் நடக்க மாட்டனா”
“இடுப்புக்கு கீழ இயக்கம் இருக்காது”
“என்ட வாழ்க்க பூரா கட்டில்லதானா?”
“ராகமையில ஒரு உடற்பயிற்சி வைத்தியசாலை இருக்கு. அங்க உங்களுக்கு இந்த வீல் செயார்ல இருந்தபடி உங்கட அன்றாட விடயங்களை செய்ய சொல்லித் தருவாக”
நான் சொன்னது அவரது காதில் விழுந்ததோ தெரியாது. மோட்டை வெறித்தபடி இருந்த அவரது கண்களில் கண்ணீர்.
இறைவன் அளித்த அருட்கொடை ஒரு நொடியில் பறிக்கப்பட சூண்யமாய் தெரியும் எதிர்காலத்தை நோக்கி செல்கிறார் இந்த இளைஞர்.
Post a Comment