அன்று பதவி துறந்தவர்கள், இன்று சமூகத்தின் நன்மை கருதி பதவி ஏற்க வேண்டும்...!
இன்று இலங்கை முஸ்லிம் அரசியல் அரங்கில் பலராலும் பேசப்படும் ஒரு விடயம் பதவி துறந்த அமைச்சர்கள் பிரதி அமச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் தத்தமது பதிகளை மீண்டு; ஏற்க வேண்டுமா? வேண்டாமா? என்பது. ஒரு தரப்பும் தேவை என்றும் இன்னொரு தரப்பு தேவை இல்லை என்றும் கூறும் அதே நேரம் மூன்றாம் தரப்பொன்று இது குறித்து எள்ளி நகையயாடுகிறது.
எனவே முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு எத்தகையது என்பதை பலரிடம் இலேசாக தொட்டுக் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களில் பலர்வழங்கிய கருத்துக்களை திரட்டி பின்வருமாறு குறிப்பிடலாம்.
எப்போதுமே அரசியல் எனும் போது இரண்டு விதமான கருத்து ஏற்படுவது தவிர்க்க முடியாது. இருப்பினும் ஒட்டுமொத்த முஸ்லிம் பிரதிநிதிகள் அவ்வாறான ஒரு சூழ்நிலையில் ஒரு கருத்திற்கு வந்தது அன்றைய பயங்கர சூழ்நிலையை கருத்திற்கொண்டாகும். வடக்கு, மற்றும் கிழக்கில் உள்ளவர்களுக்கு அதன் தாக்கம் அவ்வளவு காரமாக இருக்காது. ஆனால் நாட்டில் பல்லேறு இடங்களிலும் சிதரி வாழும் முஸ்லிம்களுக்கு அன்றைய அச்சூழ்நிலையானது தம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது.
எனவே; அன்று மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை ஏற்படாதிருக்க சமூகம்சார்ந்த நிலையில் அவசரமாக மேற்கொள்ளவேண்டிய ஒரு பரிகாரமாக அது இருந்தது. இன்றைய சூழ்நிலை ஓரளவு மாறியுள்ள நிலையில் மற்றவர்களது கருத்து எவ்வாறாயினும் மகாசங்கத்தினர் விடயத்தில் சற்று அவதானம் தேவை. மகா சங்கத்தினர் முன்வைத்துள்ள கருத்து எமது அரசியல் வாதிகளது தலையில் பாரிய ஒரு சுமையை ஏற்றியுள்ளதாகக் கருத முடியும்.
இலங்கையை பொருத்தவரை மதகுருமாறுக்கு தனி இடம் உண்டு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சாதாரண ஒரு பௌத்த துறவி நினைத்தால் கூட பெரிதாக சாதிக்க முடியும். சாதித்தும் உள்ளனர். ஆனால் சாதாரண மதகுருவை விட பல மடங்கு சக்தி கொண்டவர்களா மகாநாயகடகதட தேரர்கள் கருதப்படுகின்றனர். பௌத்த மக்கள் பெரிதாகக் கருதும் மூன்று நிகாயாக்களினதும் நிலைபாட்டுடன் முரண்படுவது பாரிய விளைவுகளை தோற்றுவிக்கும் என்பதே அநேகர்கூறிய விடயமாகும். மல்வத்தை, அஸ்கிரிய, மற்றும் ராமன்ய நிகாயாக்களின் மகாநாயக்கர்கள் விடுத்த வேண்டுகோளை உதாசீனம் செய்தால் அது முழு பௌத்த மக்களையும் உதாசீணம் செய்வதாகவும், நாம் அவமரியாதையாக நடத்துவதாகவும் அவர்கள் கருத இடமுண்டு. நல்லிணக்கம் பேசும் இக்காலத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளத் தேவையில்லை. எனவே மகாசங்கத்தினருக்கு ஒரு மரியாதையாக அவர்களது வேண்டுகோளை ஏற்க முடியும். அதனை உதாசீனம் செய்தால் அதனையும் ஒரு பிரசாரமாகக் கொண்டு எம்மை மட்டம் தட்ட இடமுண்டு. மேலும் இப்பிரச்சினை இன்றுடன் முடியப் போவதில்லi. இன்னும் பல காலத்திற்கு மகா சங்கத்தினரின் தயவை எதிர்பார்க்கவேண்டும்.
21ம் திகதி தாக்குதல் நடந்த சமயம் கர்தினால் மெல்க் ரஞ்சித் கூறியது பலருக்கு நினைவிருக்கும். யாரும் முஸ்லிம்களுக்கு எதிராக கை தூக்க வேண்டாம் என்றார். இதனைவிட மரியாதை மகாசங்கத்தினருக்கு உண்டு. அவர்கள் கூறியதை தட்டிக்கழித்து பின் அவர்களது காலில் விழுவதை விட அவர்களது வேண்டுகோளுக்கு மரியாதைசெலுத்துவது ஒன்றும் தவறில்லை என்றும் ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.
இதனை விட சுதந்திரத்தின் பின் சகல அமைச்சரவைகளிலும் முஸ்லிம் பிரதிநிதிகள் இருந்தனர். ஏதேனும் ஒரு விடயம் தொடர்பாக அமைச்சரவையில் விளக்கமளிக்க அல்லது அது பற்றிப் பேச எமது பிரதி நிதிகள் இருக்க வேண்டும். அந்தவகையிலும் மீண்டும் பதவி ஏற்பது தவறில்லை என்றும் ஒரு சாரார் தெரிவித்தனர்.
மேலும் அரச ஊழியர்கள் மட்டத்தில் ஒரு அழுத்தம் வழங்க அமைச்சர் பதவியும் ஒரு உந்து சக்தியாக இருக்க முடியும். வெளிநாட்டுத் தூதுவர்களிடம் கூட ஏதேனும் அழுத்தங்களைப் பிரயோகிக்க அமைச்சுப் பதவிகள் தேவை எனக் கூறும்சாராரும் உண்டு.
அதனை விட அமைச்சு பதவி என்பது மிகப்பிரமாண்டமாக வளர்ந்த ஒரு ஆலமரம் போன்றது. அதில் பலர் இளைப்பாராம். மரத்தை கொண்டு இன்னும் பல நன்மைகளை அடைந்துகொள்ளலாம். அம்மரத்தை வெற்றி அகற்றி விட்டால் அதனால் யாருக்கும் பயன் இல்லை. அது போல பாரிய ஒரு விருட்சமான அமைச்சுப் பதவிகளை ஏன் தட்டிக்கழிக்க வேண்டும் எனக் கேட்போரும் உள்ளனர்.
அதனைவிட வடக்கு கிழக்கு தவிர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கனிசமாக அளவு பௌத்த மக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள். அவர்களை நடு ஆற்றில் கைவிட முடியாது. அவர்களுடனான பிணைப்பு தவறி விட்டால் மீண்டும் ஏற்படுத்துவது சிரமம். குறிப்பாக அப்துல் ஹலீம், கபீர் ஹாசிம், போன்றவர்களுக்கு நிறைய சிங்கள மக்களின் பிணைப்பு உண்டு. அப்படியான வாக்களர்கள் தம்மை முஸ்லிம் பிரதிநிதிகள் கைவிட்டதாகக் குற்றம் சுமத்து கின்றனர். அதேபோல் றவூப் ஹகீம் போன்ற பலருக்கும் கனிசமான சிங்கள வாக்குகளும் உண்டு.
எனவே பிரச்சினைக்கு மேல் பிரச்சினையை உருவாக்காது நல்லிணக்கம் சிதைவடையாது தற்போது கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை தவற விடாது பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறுபவர்கள் அதிகம் உண்டு.
கூட்டு மொத்தமாக மிகச்சுருங்கக் கூறின் அன்று எடுத்த முடிவும் சரி. இப்போது பல அமைப்புக்களும் மகாசங்கத்தினரும் முன்வைக்கும் சந்தர்ப்ப சூழ்நிலையும் சரியானதுதான். எனவே தவறவிடக்கூடாது என்பது முக்கியமாகும்.
எனவே அன்று சமூகத்தின் நன்மை கருதி, அன்று பதவி துறந்தவர்கள் இன்றும் சமூகத்தின் நன்மை கருதி பதவி ஏற்க வேண்டும் என்பதில் பலர் உடன் படுகின்றனர். Hafeez
Nichchayamaga meendum padavi etrpaduwe sariyana vidayam, Aanaal padavi vilagal thodarpabaga yaar ellam koodi mudiveduththanaro, avargal anaivarum onru koodi, meendum sumoogamana murayil, intha otrumaiyai nilai naattuthal avasiyam. meendum pilavu pattal nicchayam naasam thaan.
ReplyDeleteறிசாத், ஹிஸ்பல்லா, அசாத் ஆகிய இனவாதிகளுக்கு ஆதரவாக தானே, இந்த கோமாளிகள் பதவி திறந்தார்கள்.
ReplyDeleteஇப்போ, பதவி ஆசை வந்தவுடன் வேறு ஏதோ அளம்பிகிறார்கள்.
முஸ்லிம் அமைச்சர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்துத்தான் பதவி துறந்தார்கள். அது ஒரு மாத காலத்துக்குள் நிறைவேற்றப்பட்டால் நிச்சயமாக அவர்கள் பதவி ஏற்பார்கள். அதை அரசாங்கம் கருத்தில் கொண்டு நிறைவேற்றும் பட்சத்தில் மகா நாயக்க தேரர்களின் வேண்டு கோலும் நிறைவேறும். எனவே மகா நாயக்க தேரர்களும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து குறித்த கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவணை செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலான முஸ்லிம்களின் நிலைப்பாடாகும். எனவே ஒரு மாத காலம் பொறுத்திருந்து பார்ப்பது தான் சிறந்தது என்று நினைக்கின்றோம்.
ReplyDeleteமலேசியாவிலிருந்து...