நாட்டில் வெவ்வேறு வகையான முஸ்லிம்கள் இருப்பதால், அதுகுறித்து புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும்
நாட்டில் வெவ்வேறு வகையான முஸ்லிம்கள் இருப்பதால், அது குறித்து புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கிரிபத்கொடை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் பண்டையகாலம் முதல் வாழ்ந்து வரும் சம்பிரதாயபூர்வமான முஸ்லிம்களையும், அரேபிய மயமாக்கல் மற்றும் ஜகாத் மயமாக்க தயாராகி வரும் முஸ்லிம்களை பிரித்து அறிந்துக்கொள்ள வேண்டும்.
அதேபோல் பௌத்தத்தின் பொறுப்பு தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். மோதல்களை ஏற்படுத்த முயற்சிப்பதன் மூலம் பௌத்தத்திற்கு அவமதிப்பு ஏற்படும்.
பிரச்சினைகளை நீடித்து அதன் மூலம் நாட்டையும் சமூகத்தையும் பலவீனப்படுத்தக் கூடாது. வெவ்வேறு வகையான முஸ்லிம்களில் பலப்படுத்தப்பட வேண்டியவர்கள், பலவீனப்படுத்தப்பட வேண்டியவர்கள் மற்றும் அழிக்கப்பட வேண்டியவர்கள் இருக்கின்றனர். அது குறித்து புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவனுக்கு கெட்ட சாவு வரனும்..... இவன படைத்தவன் இவனுக்கு சாவ கூடிய சீக்கிரம் கொடுக்கனும்.
ReplyDeletevevveru sinhalawar tamilar ellam intha kafothikku theriyatho?
ReplyDeleteபெளத்தர்களிலும் பல்வேறுபட்டவர்கள் உள்ளனர். அவற்றிலும் அழிக்கப்பட வேண்டியவர்கள் உள்ளனர்.சில வேலை நீங்களும் அதில் உற்படலாம்.
ReplyDelete