Header Ads



இனவாத மோதல்களின் பின்னால், பொதுபலசேனா இருக்குமாயின் பின்னணியில் கோத்தபாய இருப்பார் - எஸ்.பி.

சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மை மதத்தினரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு தூர விலக செய்தவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் வைபவம் ஒன்றின் பின் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே எஸ்.பி.திஸாநாயக்க இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், கோத்தபாய ராஜபக்சவின் இனவாத மற்றும் மதவாத நிலைப்பாடுகளை அன்று போல் இன்றும் நிராகரிக்கின்றேன்.

நாட்டில் தற்போது நடைபெறும் இனவாத மோதல்களின் பின்னால், பொதுபலசேனா இருக்குமாயின் அதன் பின்னணியில் கோத்தபாய ராஜபக்சவே இருப்பார் என தெரிவித்துள்ளார்.

எனினும் போரில் செய்த பணிக்காக அவர் மீது தனக்கு மரியாதை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. முதலில் நீங்கள் நேர்மையாக இருங்கள்.அரசியல் லாபத்துக்காக போலிக் குற்றசாட்டுக்கலை முன் வைக்காமல். நேர்மையாக ஆதாரத்துடன் முன்வையுங்கல்.உங்களின் பேச்சினால்தான் அன்மையில் ரத்ன தேரர் உன்னா விரதம் இருந்தார்.நீங்கள்தான் அவரை முதலில் போய் பார்வயிட்டீர்கல்.பின்பு அனைத்து இனவாதிகலும் அங்கே கூடினார்கல்.அதன் பின்னர்தான் ஜான சாரா திருவிழா பற்றி பேசினார்.எனவே இதுவும் இனவாதம்.இனக் கலவரத்துக்கான தூண்டுதல்.எனவே,நாட்டில் இப்போது அரசியலுக்காக தேரர்கலையும்,காடையர்கலையும் பயன்படுத்தும் கேவலமான கலாசாரம் உருவாக்கப்பட்டுள்ளது.நீதி,பாதுகாப்பு என்பன கேள்விக்குறியாகியுல்லது.இப்படியான நிலமையில் எங்கே வரப்போகிறது முதலீடுகளும்,அபிவிருத்தியும்.

    ReplyDelete
  2. You are working with A/C and D/C current. Muslim Society seen whole extremist Buddhist politician and monks same such as Nanasara, Kotta,Mahinda, M3, Athuraliya, Gammanvila and Veeravansa,....... too many of yours.

    ReplyDelete

Powered by Blogger.