முஸ்லிம்கள் அந்நிய நாட்டு கலாசாரங்களுக்கு, முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் - ரத்ன தேரர் குற்றச்சாட்டு
இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டுமாயின் தமிழ், சிங்கள மக்கள் அரசியல் வேறுபாடுகளை துறந்து ஒன்றுப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
“ திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவிற்கும் விற்கும் சோபா ஒப்பந்தத்தை இல்லாதொழிப்போம் ” என்ற தொனிப்பொருளில் இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று -24- ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
மத்ரஸா பாடசாலைகளில் முழுமையாக பிற மதங்களின் மீதான வெறுப்புணர்வும் அடிப்படைவாதமுமே போதிக்கப்படுகின்றன. தற்போது இவ்வாறான பாடசாலைகளில் கல்வி கற்கும் 35 ஆயிரம் மாணவர்கள் ஒரு காலத்தில் அடிப்படைவாதிகளாக தோற்றம் பெற வாய்ப்புண்டு. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.
நாட்டில் இன்று இஸ்லாமிய அடிப்படைவாதம் ஒரு புறமும், வல்லரசு நாடுகளின் ஆக்கிரமிப்புக்கள் ஒப்பந்த ரீதியில் இடம் பெறுவது மறுபுறமும் இடம்பெறுகின்றன. இவ்விரு செயற்பாடுகளுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தான்தோன்றித்தனமாக பொருளாதார கொள்கைகளும், பொருத்தமற்ற அரசியல் கொள்கைகளும் மூல காரணியாக அமைந்துள்ளன.
முஸ்லிம் மக்களும் இலங்கையர் என்ற நிலையில் இருந்து செயற்பட வேண்டும் என்பதே பிரதான எதிர்பார்ப்பு. ஆனால் நடைமுறையில் இவர்கள் அந்நிய நாட்டு கலாச்சாரங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டுமாயின் தமிழ், சிங்கள மக்கள் அரசியல் வேறுபாடுகளை துறந்து ஒன்றுப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.
இந்த முட்டாள் சொல்வதற்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். முஸ்லிம்கள் தன்னுடைய மதக்கலாச்சாரத்தை பின்பற்ற முக்கியத்துவம் கொடுக்கிறனர். ஆனால் சிங்களவர்கள் தமது மதத்தில் இருந்து தூர விலகி மேற்குலக கலாச்சாரத்தை நாடுகின்றனர். இந்த உண்மை இந்த முட்டாளுக்கு விளங்கவில்லை.
ReplyDeleteSuper statement
ReplyDeleteஇந்த முட்டாளுக்கு சமூகங்களின் கலாசாரத்தை பற்றி, சிங்கள கலாச்சாரம் எங்கு சென்றுள்ளது என்பதை தெளிவு படுத்தும் விதமான ஒரு திறந்த விவாதத்தை செய்வதற்கு எமது உலமாக்கள் அம்ஹார் மௌலவி போன்ற சிறப்பாக சிங்களம் பேசக் கூடிய அறிஞர்கள் முன்வர மாட்டார்களா இறைவா? எவ்வெளவு தான் இவனுடைய இம்சையை தாங்கிக் கொண்டிருப்பது. எமது உலமாக்களின் கண்களை காதுகளை திறந்து விடு இறைவா ?
ReplyDeleteMARIYADAIKURIYA MOKS AWARGALEA NINGAL ANINDITUKKUM "semmangal" THUNDU ANDA NATTUKKURIYADU?
ReplyDelete