Header Ads



முஸ்லீம்களது வியாபாரத்தை, யாராலும் முறியடிக்க முடியாது - கலாநிதி - அஜித் மெடிஸ்

கொழும்பு சாகிராக் கல்லுாாியின் வருடாந்த பரிசலிப்பு விழாவில் நேற்று 29.6.2019 பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய களனி பல்கழைக்கழகத்தின் சந்தைப்படுத்தல் முகாமைத்துவ நெறியின் தலைவா் கலாநிதி - அஜித் மெடிஸ் - இந்த நாட்டில் மட்டுமல்ல உலகில் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அங்கெல்லாம் முஸ்லிம்கள் வர்த்தக வாணிபத்துறையில் மிகவும் உயா்ந்து விளங்குபவா்கள் .

இந்தியாவில் கூட குஜராத் போன்ற பல வியாபாரங்களில் முஸ்லிம்களே உள்ளனா்.இந்தியப் பிரதமா் மோடி கூட குஜராத் பிரதேசத்தினை பிறப்பிடமாக்க கொண்டவா் அதனால் தான் அவா் இந்தியாவினை சிறந்த பொருளாத்துறைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றாா். வியாபாரக் கலை முஸ்லீம்களது இரத்த்தோடும் பரம்பரையிலும் மாதரீதியாகவும் வந்துள்ளது.. இதனை யாராலும் முறியடிக்க முடியாது.

இங்கு அமா்ந்திருக்கும் கமீடியா நிறுவனத்தின் தலைவா் பௌசுல் கமீட் சிறப்பாக கல்வி கற்றாலும் அவா் ஒரு நிறுவனத்தினை நிர்வகிக்கக் கூடிய சிறந்த வா்த்தகம் அவரது இரத்தத்தோடு வந்தது அவரது தந்தையும் இதே தொழிழைச் செய்தவா் உலகில் . அறாபியா்களது வியபாரத்தினை எட்டிப் பிடிப்பதற்கு மேலைத்தேய நாடுகளில் உள்ள சில புத்தி ஜீவிகள் முஸ்லீம்களது வா்த்தகம் வாணிபத் துறையில் டபிள் பி.எச் டி பட்டப்படிப்பினைக் கூட கற்று ஆராய்ச்சி செய்து இத்துறையை கைப்பற்ற நினைத்தாா்கள் ஆனால் அவா்களினால் முஸ்லிம்களது வியபாரத்தினை முறியடிக்க முடியாது போகிவிட்டது. 

ஆகவே நாம் ஒருபோதும் நமது பிள்ளைகளை எந்நேரமும் புத்தகத்தினை எடுத்து படி, படி என்று வற்புறுத்தக் கூடாது. எனது மனைவியும் ஒரு பிரபல பாடசாலையின் பட்டதாரி ஆசிரியை ஆனால் எனது இரண்டு மகன்மாா்களும் பாடசாலைக் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தனா். எனது மகனின் ஆசிரியா் எங்களை பாடசாலைக்கு அழைத்து உங்களது பிள்ளைகள் கணிதப் பாடத்தில் மிகவும் பின் தங்கியுள்ளனா் ஏன் எனக் கேட்டாா். நான் அவா்களை டியுசன் பாடத் திற்கு ஒருபோதும் அனுப்புவதில்லை அவா்கள் இயற்கையாகவே கற்பாா்கள் அதற்காக வலுக்கட்டாயப்படுத்துவதில்லை எனக் கூறினேன். 

தற்பொழுது அவா்கள் உயா்ந்த கல்விநிலையில் உள்ளாா்கள்.

எனது கிராமத்தில் என்னுடன் கல்வி கற்ற சக மாணவன் ஒருவன்1986களில் எட்டுப்பாடங்களிலும் 8 டீ எடுத்து அதிவிசேட சித்தியெய்தினான் அவரது பெற்றோா்கள் சாதாரண விவசாயிகள். ஆனால் எனது நன்பண் க.பொ. உயா் தரத்தில் கலைப்பிரிவினையே தேந்தெடுத்து கற்றான் அதன் பின் அவா் சட்டக் கல்லுாாி சென்று சட்டத்துறை கற்று தற்பொழுது அமேரிக்கா பல்கழைக்கழகம் ஒன்றின் சட்டத்துறை தலைவராக விளங்குகின்றான். 

ஆகவே தான் பெற்றோா்கள் எடுத்த எடுப்பிலேயே வைததியராகவோ பொறியியலாளராகவோ வரவேண்டும் என நற்பாசையில் தமது பிள்ளைகளை நிர்ப்பந்தித்து அழுத்தம் கொடுக்க் கூடாது, வியாபாரம் முகாமைத்தவம் துறையில் கற்றால் கூட அவா்கள் சிறந்த கம்பணிகளின் தலைவா்களாகவும் தமது தந்தையின் வியாபாரத்தினையோ தற்கால நவீன முறைக்கு மாற்றம் செய்து தானே தளபதியாக விளங்கி முன்னேறலாம் அத்துடன் தனக்குக் கீழ் எத்தனையோ கற்ற பட்டதாரிகளை நிர்வகிக்க கூடிய நிலைமைக்கு வருவாா்கள். . 150 வருடங்கள் பழைமை வாய்ந்ததும் பல புத்திஜீவிகளை உருவாக்கிய இந்த சாகிராக் கல்லுாாியின் பரிசலிப்பு விழாவுக்கு நான் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டமையானது எனது பாக்கியமாகவே நான் கருதுகின்றேன் என பேராசிரியா் அஜித் உரையாற்றினாா்

Ashraff A Samad

3 comments:

  1. பேராசிரியர் அஜித் சேர் அவர்களை இலங்கையின் புத்திஜீவிகள் மாத்திரமல்ல சர்வதேசமும் நன்கு அறியும். நாட்டின் நலனில் அக்கறை கொண்ட எந்தவிதமான னளைஉசiஅiயெவழைn னும் தன்னிலும் சமூக அளவிலும் இல்லாத ஒரு தலைவர். சாகிறாக் கல்லூரியில் அவர் ஆற்றிய உரையின் உள்ளரங்கத்தை சகல மாணவர்களும் நன்கு பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும். அஜித் சேரைப் போன்ற நல்லுள்ளம் கொண்டவர்கள் இந்த நாட்டில் பல்கிப் பெருகி இருந்தால் எம் நாடு தற்போது அனுபவிக்கக்கூடிய இன்னல்களிலிருந்து தப்பித்துக் கொண்டிருக்க முடியும். ஒரு மனிதன் “நல்லவன்” என்ற பெயர் எடுப்பதற்கு அவர் கற்ற கல்வி மாத்திரம் பொறுப்புக் கூறாது. ஆதற்கும் மேலாக அவரது குடும்பச் சூழல் மிக முக்கியமானது. அங்கேதான் ஒரு குழந்தை சீரான ஒழுக்க விழுமியங்களைக் கற்று மனிதனாக மாறுகின்றது. அஜித் சேரிடம் கற்க வேண்டியவை நிறைய இருக்கின்றது.

    ReplyDelete
  2. அப்படியே தொடர்ந்து விட முடியாது.
    சிங்கள-தமிழ் வியாபாரிகளுக்கு பயிற்சிகள், சலுகை கடனுதவிகளை வழங்கி, வியாபாரங்களை இனவிகிதாசார விகிதத்தில் மாற்றியமைக்க வேண்டும்

    ReplyDelete
  3. thampi Ajan, vaniham ennadaa dry rationaa ina vihithaththil maatriyamaikka?????????????????????

    ReplyDelete

Powered by Blogger.