முஸ்லிங்களுக்கு உள்ள ஒரே நகரம் கல்முனை மட்டுமே. தக்கவைக்க பல வருடங்களாக போராடுகிறேன் - ஹரீஸ்
மக்களை பழிவாங்கவில்லை. அப்போதைய காலகட்டத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் அரசை ஆட்டுவிக்கும் பலம்கொண்டவராக இருந்த காலத்திலும் நாங்கள் தமிழர்களை தட்டிக்கழிக்கவில்லை. என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
வசதி வாய்ப்பற்ற ஏழைகளுக்கு இலவச மின்சார இணைப்பை வழங்கும் நிகழ்வு இன்று (29) மாலை மஃமூத் மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அங்கு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கம்பரலிய திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாய்ந்தமருது, கல்முனை பிரதேசத்தை சேர்ந்த 225 வசதி குறைந்த பொதுமக்களுக்கான மின்சார இணைப்பை பெறுவதற்கான ஆவணங்களை இன்று மக்களிடம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம்.பைருஸ், எம்.எஸ்.எம்.நிசார், சட்டத்தரணி ரோஷன் அக்தர், சட்டத்தரணி ஆரிகா காரியப்பர், நஸ்ரினா முர்ஷித் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இங்கு மேலும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,
உங்களின் துஆ மூலமே இன்று நாம் நிம்மதியாக இருக்கிறோம். சிரேஷ்ட அரசியல்வாதிகள் இருந்தும் மக்களின் ஒற்றுமைக்கு தமிழ் தலைமைகள் வழிசமைக்கவில்லை.
எம்.எஸ். காரியப்பர் செய்த பிரிப்பின் காரணமாக நான்காக இருந்த சபையை 1987 ஆம் ஆண்டு ஏ.ஆர்.எம். மன்சூர் இணைத்தார். பின்னர் பல சம்பவங்கள் நடந்து முடிந்திருக்கிறது. இந்த சபையை முன்னர் இருந்தது போன்று நான்காக பிரிப்போம் என்பதே எமது மக்களுக்கு தேவையானது.
தமிழ் மக்களுக்கு பல நகரங்கள் இருந்தாலும் முஸ்லிங்களுக்கு உள்ள ஒரே நகரம் கல்முனை மட்டுமே. இந்த நகரில் நாங்கள் பெரும்பான்மையாக வாழ்வதால் இதனை தக்கவைக்க பல வருடங்களாக சிரமத்துடன் போராடுகிறேன். காலதாமதமாக இந்த விடயம் இருந்து வர காரணம் நாம் அனுபவ ரீதியாக பார்க்கும்போது, அண்மையில் நடைபெற்ற சம்பவங்களின் பின்னால் இருக்கும் விடயமே அதற்கு பிரதான காரணமாகும் என மேலும் தெரிவித்தார்.
(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை வடக்கு பிரதேச சபையைத் தரமுயர்த்துதல் என்ற
ReplyDeleteமுனைப்பில் தங்கியுள்ள பிரதான விடயம் என்னவென்றால் ;
அவ்வாறு தர உயர்வுப் படுத்தல் என்பதில் காணி ,நிதி நிருவாகம்
தமிழ் பிரதேச சபைக்கு கிடைத்து விடும் ; அப்படிக் கிடைத்தால்,
தமிழர் கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்ட காணிகள் முழுமை
யாகவே தமிழர்கள், வசமாகிவிடும், அப்பகுதிகளுக்குள் காணிகளை
வாங்கவோ , அத்துமீறவோ , குடிபெயரவோ இயலாமல் போகும் ;
சைவக் கோயிலொன்றை இடிக்கச் சொல்லிக் கேட்டு வழக்காடும்
சூழ்நிலை இனி ஏற்படாது போகலாம் , என்ற வாறுகளான முஸ்லீம்
சமூகஞ்சார்ந்த குறுகிய சிந்தனைகள் தான் ஹாரிஸ் போன்ற அரசி
யல்வாதிகளின் எதிர்ப்பிற்கு காரணமாகும் !
▪️அத்தோடு , சாய்ந்தமருது பிரதேச சபை பிரிந்து போவதையும் ,
இந்த. ஹாரிஸ் எதிர்க்கின்றார் ; அது, ஏனென்றால் சாய்ந்தமருது
பிரிந்து தனிப்பிரதேச செயலகமாக தர உயர்வு பெற்றால் -அதாவது
முஸ்லிம்களின் பெரும்பான்மையை அது இழக்கச் செய்யும் இதன்
வாயிலாக தமிழர்களின் ஆதிக்கம் கூடலாம் , என்று பயம் கொள்கின்றா
ர்கள்!
என்ன இருக்கும் விதமாகவே இருந்து விட்டால் தங்களின் ஆளுகைக்குள்
தமிழர்களை வைத்திருக்கலாம் என்ற அவர்களின் ஆதிக்க உணர்வாகும் !
அரட்டை உரையாடல் முடிந்தது
செய்தியை உள்ளிடவும்,
தலைவா போராடு,எமது பக்கம் நியாயம் உள்ளது.எமது மக்களும் உள்ளார்கள்
ReplyDelete@பகுத்தறிவாளா கல்முனை நகரையும், முஸ்லிம் ஊர்களையும் விட்டு உங்கட பிரதேச செயலகத்தை தரமுயர்த்திக்கொள்ளலாம். எமக்கு மட்டும் உங்களை வைத்துக்கொள்ள ஆசையா? நீஙகள் போய் தொலையவேண்டும் என்று தான் சொல்கிறோம். ஆனால் எம்முடையதையும் திருடிக்கொண்டு போக வேண்டாம் என்கிறோம்
ReplyDelete