நீக்கப்பட்டார் குமார வெல்கம
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பதுளை மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நீக்கப்பட்டுள்ளார்.
இவருக்குப் பதிலாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தேனுக விதானகமகே புதிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பொதுஜன பெரமுன கட்சிக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருவதனாலேயே இவர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுஜன பெரமுனவுக்கு கோட்டாபய ராஜபக்ஸ தலைவராக வரக் கூடாது என்ற கருத்தை இவர் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட சம்மேளனம் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண, உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் பதுளை சைமன் பீரிஸ் மாநாட்டு மண்டபத்தில் நேற்று (29) மாலை நடாத்திய கூட்டத்தில் ஏகமனதாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான குமார வெல்கம, கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது பதுளை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Many more congratulations to Hon.kumara welgama
ReplyDeleteஇவர் நீக்கப்பட்டது இனவாதம் பேசாமல்,நேர்மையாக பேசியதால்.வாழ்த்துக்கள் திரு.குமார வெல்கம
ReplyDelete