Header Ads



இஸ்லாத்தை காரி உமிழ்ந்து, முஸ்லிம்களுடனான உறவுகளை தவிர்க்கச்சொல்லிய, தலைமை பிக்குவுக்கு இளம்பிக்குவின் பதிலடி ((களுத்துறையில் உண்மைச் சம்பவம்))

களுத்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள #விகாரை ஒன்றில் இளம் பிக்குகளுக்கான போதனையினை தலைமைப்பிக்கு நிகழ்த்திக்கொண்டிருந்தார்.

முஸ்லிம்களுக்கெதிரான பிரச்சாரமாகவே அது அமைந்திருந்தது. #முஸ்லிம்கள் தொடர்பில் அவதூறுகளையும், கற்பனைக் கதைகளையும், #இஸ்லாம் தொடர்பிலான போலி பிரச்சாரங்களையும் காரி உமிழ்ந்துகொண்டிருந்தார் தலைமைப் #பிக்கு. முஸ்லிம்களுடனான உறவுகளை முற்றுமுழுதாக தவிர்ந்துகொள்ள வேண்டுமென்பதே அவரது போதனையின் சாரம்சமாக இருந்தது.

#போதனை நிறைவடைந்து விகாரை மண்டபம் அமைதியான நேரம், ஒரு இளம் பிக்கு எழுந்துநின்றார். 

”தேரரே மன்னிக்க வேண்டும். நீங்கள் கூறிய போதனையில் பெரும்பாலானவை பொய் என்பதே எனது அனுபவமாகும். நான் சிங்கள பெற்றோருக்கு பிறந்து சிங்கள கிராமத்தில் வளர்ந்தவன். ஆனால் நானும் என்னுடன் உடன் பிறந்த, மற்றும் ஒன்றுவிட்ட தம்பி, தங்கைகள் என பலர் பேருவளையிலுள்ள முஸ்லிம் வீடுகளிலே வளர்ந்தோம், அவர்களது ஆடைகளையே அணிந்தோம். அவர்களது வீட்டிலேயே சாப்பிட்டோம். எமக்கு பாடசாலைகளுக்கு தேவையானவற்றையும் முஸ்லிம்களே தந்துதவினர்.

நாம் பிறந்து சில காலத்தில் எமது பெற்றோர் பிரிந்து இருவரும் வேறு வாழ்க்கைகளை தேடிக்கொண்டனர். எனது மாமா சிறையில் இருக்கின்றார். அவரது பிள்ளைகள் உட்பட எனது தாயின் ஏனைய பிள்ளைகள், நான் உட்பட எனது பாட்டியின் பராமரிப்பிலேயே உள்ளோம். (அப்பா) பாட்டியின் கணவர் நோயாளி. அவரால் உழைப்பில் ஈடுபட முடியாது. பாட்டி 15 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பேருவளையின் முஸ்லிம் கிராமங்களிலுள்ள வீடுகளில் உதவியாளராக வேலை செய்தே உழைக்கின்றார். சிறுவர் காலம் முதல் நாமும் பாட்டியுடன் முஸ்லிம் வீடுகளுக்கு செல்கின்றோம். அங்கேயே அவர்களது பிள்ளைகளுடனேயே விளையாடுகின்றோம். அவர்களது ஆடைகளையே அணிகின்றோம். அங்கேயே சாப்பிடுகின்றோம். நாம் வீட்டு வேலைக்காரர்கள் என்றோ சிங்களவர்கள் என்றோ எம்மை அகௌரவப்படுத்தியதில்லை. 

சிறுபராயம் முதல் முஸ்லிம்களுடன் இணைந்து வாழ்கிறவன் என்றவகையில் நீங்கள் கூறிய பல விடயங்களோடு என்னால் உடன்பட முடியாது. முஸ்லிம்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் பிறருக்கு உதவக்கூடியவர்கள். நாம் பாடசாலையிலிருந்து நேரடியாக பேருவளைக்கு சென்று முஸ்லிம் வீடுகளிலேயே எமது பகல்சாப்பாட்டை சாப்பிட்டிருக்கின்றோம். எமது பெற்றோரே எம்மை கைவிட்டபோதும் முஸ்லிம்களே எமக்கு இன்றுவரை உதவிக்கொண்டிருக்கின்றனர். நான் விகாரைக்கு எடுத்துவந்துள்ள இந்த புத்தகங்களும் அவர்கள் வாங்கித்தந்தவையே என தனது அனுபவத்தை துணிச்சலுடன் விகாரையில் எடுத்துக்கூறியுள்ளார் அந்த இளம் பிக்கு.

இதை சற்றும் எதிர்பாராத தலைமை பிக்கு இது தொடர்பில் விசாரிப்பதற்கு பாட்டியை விகாரைக்கு வரவழைத்துள்ளார்.

பாட்டியும் தானும் தனது பேரப்பிள்ளைகளும் அனுபவிக்கும் கஷ்டங்களையும், முஸ்லிம்களின் ஒத்துழைப்புக்களையும் எடுத்துக்கூறியுள்ளார். தான் நீண்டகாலமாக முஸ்லிம் வீடுகளில் வேலைக்கு சென்றுவருகின்றேன், இதுவரையில் அவர்கள் எனக்கு துரோகமிழைத்ததில்லை. சில வேளைகளில் நான் நோய்வாய்ப்பட்டு வேலைக்கு செல்லமுடியாமல் வீட்டிலிருப்பேன். அந்நாட்களில் முஸ்லிம்களை தொடர்புகொண்டு ”எனக்கு சுகமில்லை, என்னால் இன்று வேலைக்குவர முடியாது, முடியுமென்றால் எனது பேரப்பிள்ளைகளுக்கு ஏதாவது சமைத்து அனுப்புங்கள்” என வேண்டிக்கொள்வேன். அவ்வாறான சந்தர்ப்பங்களில் எமக்கு சமைத்து அனுப்புவார்கள். அந்தளவிற்கு என்னுடன் சிறந்தமுறையிலே அவர்கள் நடந்துகொள்கின்றனர் என முஸ்லிம்களுடனான தனது உறவை தலைமைப்பிக்குவிற்கு எடுத்துக்கூறியுள்ளார்.

மேலும் பாட்டியின் கிராமத்தவர்கள் பாட்டியை முஸ்லிம் வீடுகளுக்கு வேலைக்கு செல்லவேண்டாமென கோரியிருக்கின்றனர். தான் வேலைக்கு செல்லாவிட்டால் உங்கள் வீடுகளில் எனக்கு வேலை தருவீர்களா? எனது பேரப்பிள்ளைகளுக்கு உணவளிக்க முன்வருவீர்களா என கிராமத்தவர்களிடம் பாட்டி கேட்டுள்ளார்.

நாம் பேசவேண்டிய இடத்தில், நம்மால் பேச முடியாத போது நமது நற்பண்புகள் நமக்காக பேசும்.

Roomy Haris

4 comments:

  1. Please share this with all your Sinhalese friends: but first translate this into Sinhala and English as soon as possible and share it with all social media.

    ReplyDelete
  2. உண்மையில் இஸ்லாமியர்கள் மிக நல்லவர்கள், அவர்களை போன்று இந்த உலகில் யாரும் அன்பு காட்ட இல்லை, அது மட்டுமின்றி எனி வரும் சந்ததியினரிட்காவது 3 மதத்தவருடனும் பழக இடமளியுங்கள்

    ReplyDelete
  3. Main message for all of us is in the last sentence!

    ReplyDelete
  4. These kinds of articles should be published in Sinhala language as well. An important messange to our fellow community circulating only in our community. Please write this post in Sinhala, so each share will reach atleast on Sinhala brother/sister. Thanks

    ReplyDelete

Powered by Blogger.