சிறுபான்மை ஆதரவுடன் அரசாங்கம், அமைத்ததால் மண்டியிடவேண்டி ஏற்பட்டது - டளஸ்
“ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி, எமது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாநாட்டின்போது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான தகவல் வெளியாகும்.”
தற்போதும் அதில் இரகசியம் ஒன்றும் இல்லை. ஆகஸ்ட் 12ஆம் திகதி இந்த அரசாங்கத்தை நிறைவுக்குக் கொண்டுவரும் 100 நாள் வேலைத்திட்டம் ஆரம்பமாகும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகபெரும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -24- இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“இந்த செயற்றிட்டம் ஜனாதிபதித் தேர்தல் வரை கொண்டு செல்லப்படும். அதன் பின்னர் ஊடகங்களும், 100 நாட்களில் புதிய நாடு என அறிக்கையிட முடியும்.
உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடும் ஊடகங்களை வேட்டையாடும் வகையில் அமைச்சரவைக்கு புதிய பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தகவல் அறியும் சட்டத்தை நாமே கொண்டுவந்தோம், ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தினோம் எனக் கூறிக்கொள்ளும் அரசாங்கம் இந்த நாட்டில் யுத்தம் ஒன்று இடம்பெற்ற காலப்பகுதியில் கூட, ஊடகங்களை முகாமைப்படுத்த வேண்டிய காலப்பகுதியில் கூட கொண்டுவரப்படாத மிகவும் பாரதூரமான சட்டத்தை கொண்டுவந்துள்ளது.
உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுகின்றார்கள் என்ற அடிப்படையில், எந்தவொரு ஊடகவியலாளரையும் 10 வருடங்கள் சிறையில் அடைக்க அல்லது ஐந்து இலட்சம் ரூபாய் தண்டப்பணத்தை விதிக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அமைச்சரவையில் அனுமதி பெறப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை. ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சந்தர்ப்பங்களில், ஊடக அமைப்புகள் அதற்கு எதிராக செயற்பட்டன. கிளர்ந்தெழுந்தன.
எனினும் இவ்வாறான ஒரு சட்டமூலம் பொது வெளிக்கு வந்துள்ள நிலையில் ஊடக அமைப்புகள் மிகவும் அமைதியாக இருப்பதை
அவதானிக்க முடிகின்றது. வேட்டையாடுபவர்கள் கதவை தட்டும்போது, நாம் காலம் தாழ்த்திவிட்டோம் என்பதை அறிந்துகொள்வோம்.
ஆகவே இதுத் தொடர்பில் உங்களது ஊடக நிறுவனத்திற்கு அறிவியுங்கள் என கேட்கின்றோம். 1988 ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டுவரை இடம்பெற்ற ஏழு பொதுத் தேர்தல்களில் இரண்டில் மாத்திரமே பெரும்பான்மை அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன.
ஏனைய ஐந்து தேர்தல்களிலும் சிறுபான்மை அரசாங்கங்கனள அமைக்கப்பட்டன. இதனாலேயே நாடாளுமன்றத்திற்குள் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட அழிவுக்காரர்கள் முன்னிலையில் மண்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்குக் காரணம் விகிதாசார தேர்தல் முறைமையே. இந்த நாட்டின் அரசியல் ஸ்தீரமற்ற நிலைமைக்கு காரணமாக அமைவது
இந்தத் தேர்தல் முறைமையே. நிலையான அரசாங்கம் ஒன்றை இதன் ஊடாக அமைக்க முடியாது.
நாங்கள் இந்தத் தேர்தல் முறைமையை நாம் நிச்சயமாக மாற்றியமைப்போம். அமைக்கப்படும் அரசாங்கம் எதுவாக இருந்தாலும் அது நிலையானதாக இருக்க வேண்டும். அதுவே அவசியம்.” என கூறியுள்ளார்.
ஒன்றும் செய்ய முடியாது தலை எழுத்து.
ReplyDelete