Header Ads



முஸ்லிம்கள் அதிகளவு வியாபாரம் செய்வதால், எங்களால் வியாபரம் செய்ய முடியாத நிலை

தமிழ்,சிங்கள வியாபாரிகளை ஒன்றிணைத்து வர்த்தக சங்கம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை - குளக்கோட்டன் மண்டபத்தில் இன்று -23-இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன், இதனை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழ், சிங்கள வியாபார சங்கம் ஒன்றை அமைக்க வேண்டும்.

பயங்கரவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கு எதிராக இருக்கின்ற, நாட்டை நேசிக்கின்ற நாட்டின் முன்னேற்றத்தை விரும்புகின்ற முஸ்லிம் மக்களையும் நாங்கள் எம்முடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தெற்காசியாவில் மிக முக்கியமான இடமாக கிழக்கு மாகாணமும் அதிலும் மிக முக்கியமாக திருகோணமலையும் காணப்படுகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் காணப்படுகின்ற இயற்கை துறைமுகத்தை அமெரிக்க நிறுவனங்களுக்கு வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.

இது தொடர்பான கலந்துரையாடல் நாளை 24ம் திகதி நடைபெற உள்ளது. இதன்போது மதத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் இதிலே இது தொடர்பான விடயங்கள் பேசப்பட உள்ளது.

இதேவேளை சீனாவில் உள்ள கூட்டுறவு வங்கி முறைமையை இலங்கையிலும் உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கப்பட்டால் வியாபாரிகளின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வியாபாரிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து மூன்று தசாப்தங்களாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் தங்களுடைய வியாபாரத்தை உயர்த்துவதற்காக எவ்வாறான வழிகளை செய்ய வேண்டும் எனவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் அதிகளவான வியாபாரம் செய்யக்கூடியவர்கள் முஸ்லிம்களாக காணப்படுகின்றார்கள். எங்களுக்கு வியாபாரம் செய்ய முடியாத நிலை உள்ளது.

அவர்கள் நாங்கள் விற்கும் விலையை விட குறைவான விலைக்கு விற்கிறார்கள் எனவும் அதனால் மக்கள் அவர்களையே தேடி செல்வதாகவும் வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பியந்த பத்திரன, மற்றும் மொட்டு சின்னத்தின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் தயானந்த ஜெயவீர மற்றும் திருகோணமலை நகர சபையின் பொது ஜன பெரமுன மொட்டு அணியைச் சேர்ந்த சுசந்த ஜெயலத் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

7 comments:

  1. ஊர் குருவி உயரப்பறந்தாலும் பருந்தகாலமா ? இல்லை தொன்று தொட்டு வியாபாரத்துடன் தொடர்பு பட்டவர்கள் முஸ்லிம்கள். வட்டி, கடன் என்பவற்றில் இருந்து முஸ்லிம்கள் என்றுமே விலகி காணப்படுவார்கள். உங்களுடேயே மார்க்கம் எனக்கு தெரியாது இது சம்பந்தமாக என்எ சொல்லுது என்று . பட் உங்களுடேயே மக்கள் அதிகமாக இதோடு தொடர்ப்பு பட்டு இருக்கிறார்கள்.
    ஆகவே வியாபரம் செய்யே தகுதியானவர்கள் முஸ்லீம் களே .
    நீங்க மூடிட்டு கமெனு இருங்கோ

    ReplyDelete
  2. good idea.
    ஆரம்பத்தில் சில தற்காலிய பின்னடைவுகள் இருந்தாலும், நீண்டகாலத்திற்கு இந்த முயற்சி வெற்றிபெறும்

    ReplyDelete
  3. அதக்கெல்லாம் ஞானம் வேணடும் அண்ணன் மார்களே உங்கள் வியாபாரத்தில் mr.Ajan ஐ யும் சேர்த்துக்கொள்ளுங்கள்.வியாபாரத்தை பற்றி முஸ்லிம் களிடம் கேட்டு கொள்ளுங்கள்.

    ReplyDelete
  4. என்னாங்கடா இது? எங்களால் பிள்ளை பெற முடியவில்லை ஆனால் முஸ்லிம்கள் அதிகமாக பிள்ளை பெறுகிறார்கள் இப்படி ஒரு கூட்டம். முஸ்லிம்கள் குறைந்த விலையில் விற்று வியாபரத்தை பெருக்குவதால் எங்களால் வியாபாரம் செய்ய முடியல்வில்லை என்னு ஒரு கூட்டம். கையாலாதகவந்தான் இப்படி கூப்பாடு போடுவான். நம்ம சகோதரன் ajan போல. சகோதரா ajan வியாபாரத்தில இல்ல குடும்பத்தில பிள்ளை பெறுவதில ஏதும் சிக்கல் இயலாமை இருந்தால் சொல்லுப்பா நாம ஒன்னுக்குள்ள ஒன்னு பார்த்து பண்ணிக்கலாம். மறந்திடாதே உதவி நாங்க மட்டும் தான் பண்ணுவோம், எங்களுக்கு உதவி செய்யும் தகுதி எவனுக்கும் இல்லை. வரலாறு அப்படி.

    ReplyDelete
  5. ஏண்இந்தபுராமை நீங்கலும்குறைந்தவிலையில்கொடுக்கலாமே நீங்கள் மக்களிண்பணத்தை கொல்லையடிக்கநிணைக்கிரிர்கள்

    ReplyDelete
  6. ஏண்இந்தபுராமை நீங்கலும்குறைந்தவிலையில்கொடுக்கலாமே நீங்கள் மக்களிண்பணத்தை கொல்லையடிக்கநிணைக்கிரிர்கள்

    ReplyDelete
  7. முஸ்லீம் கடைகளில் பொருட்கள் கொள்வனவு செய்வதை முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது .

    ReplyDelete

Powered by Blogger.