Header Ads



"கோரிக்கை நிறைவேறும்வரை, அமைச்சுக்களை ஏற்காமலிருப்பதே நல்லது"

எமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளாமல் மீண்டும் அமைச்சுப் பதவிளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகவுள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

நாங்கள் பதவி விலகும்போது அரசாங்கத்துக்கு பல கோரிக்கைகளை முன்வைத்தோம். அந்த கோரிக்கைகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவிலலை. குறிப்பாக எம்மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு ஒரு மாதகாலத்துக்குள் தீர்வு பெற்றுத்தரவேண்டும் என்றும் குருணாகல், மினுவங்கொடை பிரதேசங்களில் இனவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் அத்துடன் நஷ்டஈடு பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என தெரிவித்திருந்தோம்.

அதேபோன்று இனவாத தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் என கைதுசெய்யப்பட்ட 450க்கும் அதிகமானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சிறு சிறு காரணங்களுக்காக முஸ்லிம் மக்கள் கைதுசெய்யப்பட்டு பிணை வழங்க முடியாதவகையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தோம். 

அத்துடன் அபாயாவுக்கு எதிராக வெளியிடப்பட்டிருக்கும் சுற்று நிருபத்தை ரத்துசெய்யவேண்டும் என்றும் வெறுப்பூட்டும்வகையில் பேசுவதற்கு எதிராக சட்டம் நிலைநாட்டவேண்டும் என்று தெரிவித்திருந்தோம். இவை எதுவும் இன்னும் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை. 

அத்துடன் அமைச்சுப்பதவிகளில் விலகிய அனைவரும் யாரையும் பாதுகாப்பதற்கோ சுயலாபத்துக்கோ பதவி விலகவில்லை. முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டே பதவி விலக தீர்மானித்தோம். அதனால் எமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளாமல் மீண்டும் அமைச்சுப்பதவிளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு என்றார்.

(எம்.ஆர்.எம்.வஸீம்)

4 comments:

  1. தெளிவான கோரிக்கை.ஆனால் இறுதி நேரத்தில் வந்து சேர்ந்து பிறகு பெரியண்ணன் ஆகும் சிலரின் பேச்சை பார்க்கும் போது,அனைத்தையும் தாரை வார்த்து விடுவார்கள் போல் இருக்கிறது.சஹ்ரான் எனும் காட்டு மிராடியினால் பாதிக்கப்பட்ட ஆலயங்கள்,அந்த மக்களுக்கான வீட்டு திட்டங்களை வரவேற்கிறோம்.ஆனால் திகன,அம்பாறை,குருநாகல்,புத்தளம் மாவட்டங்களில் சிங்கள பயங்கரவாதிகலால் பாதிக்கப்பட பள்ளிகல்,மக்களிக்கு இன்னும் எதுவும் வழங்கவில்லை.நீதியும் கிடைக்கவில்லை.இது ஏன்?எனவே,கோரிக்கைகளினை நிறைவேற்றும் வரை எதையும் மீண்டும் பெறாமல் இருப்பதுதான் சிறந்த முடிவு.

    ReplyDelete
  2. Allah thantha pathawi...ithaiwida adiham allah ungalukku tharuwaan...thawaruhalukku matthiyilthaan manithanay allah padaytthullaan...innum allah ungaloduthaan irikkiraan...

    ReplyDelete
  3. Kabeer haasim mh haleem this two ministers come to power by majourity sinhalaese vote base.therfor kabir and haleem better to re take the ministry.as well.

    ReplyDelete
  4. முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பு எதிர்காலம் ஆகியவற்றை முன்வைத்தே ஒன்பது முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் இரு ஆளுனர்கள் இராஜினாமா செய்தனர். குற்றங்கள் நிரூபிக்கப்படல் வேண்டும். நாங்கள் எங்களது நோக்கத்தினை அடையாது மீண்டும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ள தூது அனுப்பினால் அல்லது வேண்டுகோனை ஏற்றுக்கொண்டால் உள்ளுரில் மாத்திரமன்றி சர்வதேச மட்டத்திலும் எமக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடும். இம்முயற்சி சிலவேளைகளில் "Joker of the Year 2019" என்ற பட்டத்;தையும் தந்துவிடும். சா(ஜா)க்கிரதை.

    ReplyDelete

Powered by Blogger.