ஜித்தாவில் இலங்கையர் வபாத்
மாவடிப்பள்ளியைச் சேர்ந்த முபாரக் இன்று அதிகாலை வேளையில் மரணம் அடைந்தார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்… அன்னாரின் ஜனாஸா ஜித்தாவில் அமைந்துள்ள பிரைமன் ஹாரா அரசாங்க வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அவருடைய சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் ஜனாஸாவைப் பார்வையிட்டுள்ளனர். ஜித்தாவில் அமைந்துள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் கொன்சிலேட் ஜெனரல் அப்துல் சலாம் அவர்களுடன் கலந்தாலோசித்து இறுதிக் கிரியைகள் மற்றும் அடக்கம் ஜித்தாவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
ஒரு பிள்ளையின் தந்தையான முபாரக் ஜித்தாவில் உள்ள மக்தூரா ஹாரா கம்பனியில் மின் தொழில்நுட்வியலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதமே இலங்கைக்கு விடுமுறை சென்று திரும்பியுள்ளார். நேற்று இரவு படுக்கைக்குச் சென்றவர் இன்று (28/06/2019) அதிகாலையில் மரணித்துள்ளதாக அவருடைய சம்மாந்துறை நண்பர் மூலம் தெரிய வந்துள்ளது. அன்னாரின் ஜனாஸா அடக்கம் சம்மந்தமான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
"அல்லாஹும்மக்ஃபிர் லி முபாரக்கன் வர்ஃபஃ தரஜ(த்)தஹு ஃபில் மஹ்திய்யீன வஃக்லுஃப் ஹு ஃபீ அகிபிஹி ஃபில் காபிரீன் வக்ஃபிர் லனா வலஹு யாரப்பல் ஆலமீன் வஃப்ஸஹ் லஹு ஃபீ கப்ரிஹி வநவ்விர் லஹு ஃபீஹி."
"இறைவா! உன்னிடம் வந்து சேர்ந்துள்ள முபாரக் அவர்களை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!"
இன்னாலிலைஹி வயின்னா இலைஹி ராஜீஊன்
ReplyDeleteانا لله وانا اليه راجعون
ReplyDeleteinnalillahi wa inna ilaihi rahjiyoon
ReplyDelete