Header Ads



முஸ்லிம்களிடையே தேசிய தலைவர், என்று எவரும் இன்றில்லை - அநுரபிரியதர்ஷன யாப்பா

நாடு சுதந்திரமடைந்த காலப்பகுதியில் தேசிய பிரச்சினைகளில் முஸ்லிம் சமூகத்தினர் வெகுவாக முன்நின்று செயற்பட்டனர். 

அரசியலிலும், பொது விடயங்களிலும் அவர்களுக்கு இன,மத பேதம் எவையும் இருக்கவில்லை.ஆனால் இன்றுள்ள முஸ்லிம் தலைவர்களில் தேசிய தலைவர் என்று குறிப்பிடத்தக்க எவரும் இல்லை. 

இவர்கள் குறுகிய நோக்கங்களையே கொண்டிருக்கிறார்கள். அடிப்படைவாதம் தொடர்பில் பேசி, அதற்குத் தீர்வு காண்பதை விடுத்து, தமது சகாக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகினார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று -18- ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறுகையில்:

நாம் இப்போது தேர்தல் காலகட்டம் ஒன்றிற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் செயற்பாடுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் ஆரம்பித்து, டிசம்பர் மாதமளவில் முடிவடைய வேண்டும். 

எனவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் அண்மைக்காலமாகப் பேசப்பட்டு வருகிறது. நாம் இவையனைத்திற்கும் தயார் நிலையிலேயே இருக்கின்றோம். எமது வேட்பாளர் யார் என்பது குறித்தும் சரியான நேரம் வரும்போது அறிவிப்போம். அதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பாரிய வெற்றியைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம் என அவர் இதன் போது தெரிவித்தார்.

(நா.தனுஜா)

1 comment:

  1. முஸ்லிம்களின் தலைமைத்துவம் பற்றி பேசுவதற்கு முன் சிங்களவர்களுக்கு யார் தலைவர் என்பதைப் பற்றி யோசித்துப் பாரடா முட்டாள்

    ReplyDelete

Powered by Blogger.