கல்முனை உப பிரதேச செயலக, தரமுயர்வை முஸ்லிம்கள் எதிர்ப்பது ஏன்..?
உப பிரதேச செயலகத்தினை தரமுயர்துவதால் முஸ்லிம்களுக்கு எந்தவித பிரச்சனைகளும் ஏற்பட்டு விடப் போவதில்லை. அப்படியானால் ஏன் முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள்.
1.தமிழ் மக்கள் கோரும் பிரதேச செயலக எல்லைக்குள் (கல்முனை வடக்கு) 3000ற்கு மேற்பட்ட முஸ்லிம்களின் வாழ்விடங்கள் உள்வாக்கப்பட்டுள்ளன.
2. ஐந்துக்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் இரண்டு மதரஸாக்கள் மூன்று மையவாடிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
3.கல்முனை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரைப் பள்ளிவாசல்கூட அந்த எல்லைக்குள்தான் வருகிறது.
4.கல்முனை பொதுச் சந்தை
5.கல்முனை பஸார்
6.கல்முனை கடைத் தொகுதிகளும் வர்த்தக நிலையங்களும்
7.கல்முனை பஸ் தரிப்பு நிலையம்
8.கல்முனை பொலி்ஸ் நிலையம்
9.கல்முனை நூலகம்
10.கல்முனை பிரதேச செயலகம்
11.கல்முனை மாநகர சபை
12.சகல வங்கிகள்
13.சகல அரச காரியாலயங்கள்
14. கல்முனை பிரதேசத்தில் காணப்படும் கல்முனைக் கண்டம் ,இறைவெளிக்கண்டம், நற்பிட்டிமுனை மேல்,கீழ் கண்டங்கள் மேட்டுவட்டை வயல் காணிகள் , கரவாகு வட்டைக் காணிகள் என அனைத்து வயல் காணிகளும் அவர்கள் கோரும் எல்லைக்குள்ளே வருகின்றன.
15. நீர் நிலைகளான பட்டிப்பளை ஆற்றுப் படுக்கை,கல்லடிக்குளம்,பாண்டிருப்பு பெரிய குளம், சிறிய குளம்,நவியான் குளம், கரச்சைக் குளம் என அனைத்து நீர் நிலைகளும் அந்தப் பிரதேசத்திற்குள் உள்வாக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு முஸ்லிம்களின் பல்வேறுபட்ட நிலம் தொடர்பான பிணக்குகள் மற்றும் பூர்வீகமாக ஆண்டுவந்த பிரதேசங்கள் அத்தனையும் உள்வாங்கிய பிரதேச செயலக உருவாக்கத்தினையே முஸ்லிம்கள் எதிர்க்கின்றனர். மாறாக தமிழ் மக்களை அடிமைகளாக வைத்திருக்க ஒருபோதும் அவர்கள் விரும்பவில்லை. அதனால் சரியான எல்லை நிர்ணயத்துடன் எல்லைகளை வகுத்து எதிர்காலத்தில் பிணக்குகள் ஏற்படாத வண்ணம் ஒரு நிரந்தர தீர்வினை தரும்படி அரசினை முஸ்லிம்கள் கோரி நிற்கின்றனர்.
Mubarak Abdul Majeeth
Good statement
ReplyDeleteஇது என்ன பட்டப்பகற் கொள்ளளையா ???
ReplyDeleteஅந்த தொகுதியில் சர்வசன தேர்தலை வைத்து மக்கள் விரும்பும் முறையில் நல்லதொரு தீர்மானம் எடுக்க முடியும் தானே!
ReplyDeleteஜோக்குக்கு கேட்கவில்லை. Mubarak : தமிழ் மக்களுக்குரிய எச்சங்கள் (Remains) கல்முனை வடக்கில் என்னென்ன இருக்கின்றது என்று கொஞ்சம் விளக்கமாகக் கூறமுடியுமா?
ReplyDelete