முஸ்லிம் விரோத, மனப்பான்மையுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய
தீவிரவாதத்தை ஒழிப்பதாயின் ஒரே தேசம் ஒரே சட்டம் கொண்டு வந்து பலதார மணம், தனியார் திருமண சட்ட மாற்றம் போன்றவற்றை நிறைவேற்ற வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியிருப்பது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி அக்கட்சி தெரிவித்துள்ளதாவது,
அண்மையில் முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களை சந்தித்த சபாநாயகர் நாட்டில் தீவிரவாதத்தை ஒழிப்பதாயின் முஸ்லிம் திருமண திருத்தம், பல தார மணம், அரபு மதுரசாக்கள் என்பவை பற்றி சொன்ன கருத்துக்கள் அனைத்தும் மிகவும் பிழையானவையும் தீவிரவாதத்துடன் எந்த வகையிலும் தொடர்பற்றதாகும்.
இலங்கை முஸ்லிம்களிடம் மட்டுமே தீவிரவாதம் உள்ளது போல் அவர் கருத்துத் தெரிவித்துள்ளமை நீதியான சபாநாயகருக்கு அழகல்ல.
குற்றவியல் சட்டம் என்பது இலங்கை நாட்டில் ஒரே தேசம் ஒரே நீதி என்றுதான் உள்ளது. இருந்தும் அண்மைய ஈஸ்டர் தாக்குதலின் பின் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் பலர் இரண்டு மாதங்கள் தாண்டியும் இன்னமும் விடுவிக்கப்படாத நிலையில் குருணாகல், குளியாப்பிட்டியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய சிங்கள தீவிரவாதிகள் சில வாரங்களில் விடுதலை செய்யப்பட்டிருப்பதும் ஒரே தேசம் ஒரே நீதியின் கீழ்தான் என்பதை சபாநாயகர் அறிவாரா?
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் கடந்த ஈஸ்டர் தின தாக்குதல் மட்டும்தான் முதன் முதலாக முஸ்லிம்களில் ஒரு குழு செய்த தீவிரவாத தாக்குதலாகும். அதனை ஒரு மடத்தனமான, தவறான, இஸ்லாம் அனுமதிக்காத தாக்குதல் என்றே நாம் அப்போதே அறிக்கை விட்டோம்.
ஆனால் இலங்கை முஸ்லிம்கள் கடந்த நாற்பது வருடங்களாக தமிழ், சிங்கள தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு முகம் கொடுத்து வருவதையும் பல உயிர், உடமை இழந்ததையும் சபாநாயகர் அறியவில்லையா? இத்தகைய தீவிரவாதிகளை கட்டுப்படுத்த ஏதும் நடவடிக்கை எடுத்துள்ளாரா?
இலங்கையில் தீவிரவாதத்தை போதிக்கும் கல்விக்கூடங்கள் முஸ்லிம்கள் மத்தியில் இல்லை. அண்மைய குண்டு வெடிப்பில் ஈடுபட்டோரில் மிக அதிகமானோர் அரபு அரபு மதுரசாக்களில் படிக்காமல் சாதாரண அரச பாடசாலைகளில் கல்வி கற்றவர்கள்தாம். அப்படியாயின் பாடசாலைகளையும் ஒழிக்க சபாநாயகர் முன் வருவார் போலும்.
தற்கொலை தாக்குதலில் ஈடு பட்ட எவரும் பலதார மணம் செய்தவர்களுமல்ல. அப்படியிருக்கும் போது தீவிரவாதத்துக்கும் முஸ்லிம் திருமண சட்டத்துக்குமிடையில் சபாநாயகர் போன்ற கற்றோரும் முடிச்சு போடுவது அவர்களின் உள்ளங்களில் உள்ள முஸ்லிம் விரோத மனப்பான்மையின் வெளிப்பாடாகவே நோக்க வேண்டியுள்ளது.
- உலமா கட்சி
Evan oru kenayan
ReplyDeleteசபாநாயகரின் கருத்துக்கள் உடனடியாக சட்டமாங்கப் படல் வேண்டும்
ReplyDeleteIthukkellaam muslim enra peril theewira waathatthai thottriyamai...ippothu iwarhal muslimkalukku enna sattam ellam podanumo athuwellaam pottutthaan aahuwaarhal...
ReplyDeleteBt...unmayaana muslimkalin ullankalai purinthu kondu seyalapada yaarum illay....
Eid Mubarak............
ReplyDelete