Header Ads



முஸ்லீம் வாக்குகளை பெற்றுக்கொள்ள, குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்களை அரசாங்கம் காப்பாற்றுகிறது

கடந்த ஏப்ரல் 21ம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரின் மீது சந்தேகத்தின் பேரில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் பொலிஸாரினாலோ, நீதிமன்றத்தினாலோ இவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தாமல் வெறுமனே பாராளுமன்றத்தில் தெரிவுக்குழு அமைத்து விசாரணை நடத்துவது சட்டத்திற்கு புறம்பான செயற்பாடு மட்டுமல்லாமல் நாட்டு மக்களை ஏமாற்றுகின்ற கபட நாடகத்தை அரசாங்கம் நடத்துகின்றது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும், மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளருமான பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.

15.06.2019 அன்று ஹட்டனில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிராந்திய காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் மேலும் தெரிவித்ததாவது,

நூற்றுக்கணக்கான உயிர்களை காவுகொண்ட இந்த பயங்கரவாத தாக்குதலோடு தொடர்புபட்டவர்கள் தொடர்பில் நிலையான விசாரணை ஒன்றை இந்த அரசாங்கம் நடத்த தவறியுள்ளது.

இது தொடர்பில் ஏன் இந்த அரசாங்கம் மௌனமாக இருக்கின்றது என்பது தொடர்பில் எமக்கு சந்தேக நிலை ஏற்படுகின்றது.

இதற்கு பிரதான ஒரு காரணம் இனி வருகின்ற ஆட்சியை மாற்றுகின்ற தேர்தல் ஒன்றுக்கு முஸ்லீம் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவே இவ்வாறான குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்களை அரசாங்கம் காப்பாற்றி வருகின்றது. இது உண்மையில் நாட்டிற்கு செய்கின்ற துரோக செயலாகும்.

எனவே இவ்வாறான நூற்றுக்கணக்கான உயிர்களை காவுகொண்ட பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புப்பட்டவர்கள் குறித்து முறையான ஒரு விசாரணை நடத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.

இவ்வாறு அரசாங்கம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து விசாரணை நடத்துவோமானால் இதற்கு முன்னர் நாட்டிலே மத்திய வங்கியில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பிலும் இவ்வாறான பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து விசாரணை நடத்தாமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பிலும் இவர் கேள்வி எழுப்பினார்.

1 comment:

  1. தோட்டக் காட்டான்

    ReplyDelete

Powered by Blogger.