Header Ads



அரபிகளின் ஆடைகளை விரும்பி அணியும் மஹிந்த, முஸ்லிம்களை எப்படி குறை சொல்லலாம்...?

முஸ்லிம்களின் ஆடை அணிகலன் விவகாரம் பரவலான பேசு பொருளாகியிருக்கிறது. சவூதி அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கலாச்சாரமாகச் சொல்லி காரமான விமர்சனத்துக்கும் உள்ளாகியிருக்கிறது.

அபாயாக்களையும் ஜுப்பாக்களையும் காண்பதே கூடாதென்ற பெரும்பான்மை இனத்தவரது கண்களுக்கு தங்களது வீட்டுக்குள் இருக்கின்ற குமர்களின் அரை குறையானதும் இறுக்கமானதுமான ஆடைகளின் பின்னால் உள்ள அசிங்கம் மட்டும் தெரிவதில்லை. அவற்றை மேலைத்தேய இறக்குமதியாக அவர்கள் காண்பதுமில்லை.

ஹலால் சான்றிதழ், முஸ்லிம்களின் ஆடைகள், முஸ்லிம்களது வர்த்தகம், மட்டக்களப்பு பல்கலைக்கழகம், மத்ரஸாக் கல்வி, முஸ்லிம் வைத்தியர்களால் மேற்கொள்ளப்படுவதாக சொல்லப்டுகின்ற சத்திர சிகிச்சைகள், காதான்குடி பேரீத்த மரங்கள் என்பவற்றால் எமது நாட்டுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்பதை அரசியல்வாதிகளும், மத குருமாரும் பெரும்பாலான சிங்களவரும் அறியாமலுமில்லை. இவையனைத்தும் முஸ்லிம்கள் மீது மாற்று மதத்தினரிடையே சந்தேகப் பார்வையை ஏற்படுத்தி கலவரங்களை உண்டுபண்ணுவதன் மூலம் வேறொரு வகையான இலாபத்தை அடைந்து கொள்வதற்காக பாவிக்கப்படுகின்ற போலிக் காரணங்களேயன்றி வேறொன்றுமில்லை.

எனது சகோதரர் ஜித்தாவுக்கான கொன்ஸல் ஜெனராலாக கடமையாற்றிய காலம் 2004 ம் ஆண்டு இறுதிப் பகுதியில் ஒரு மாத காலமளவில் நான் சவூதி அரேபியாவிலே தங்கியிருந்தேன். அப்போது அவருடைய சாரதியாக பானந்துரையைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் கடமையிலிருந்தார். அக்கால கட்டத்தில் பிரதமராகவும் அதற்கு முன்பு அமைச்சராகவும் இருந்த மஹிந்த ராஜபக்ஷ சவூதி அரேபியா வருகிற ஒவ்வொரு தடவையும் தன்னுடன் சென்று அதிகளவிலான 'தோப்' என்று அழைக்கப்படும் அரபிகள் அணியும் வெந்நிற ஆடைகளை கொள்வனவு செய்வதாகவும் அதன் உயரத்தை சற்றுக் குறைத்து தனக்கு ஏற்றவாறு திருத்தி அணிவதாகவும் அச் சாரதி பெருமையாக சொல்லிக் கொள்வார். வேறு நபர்கள் மூலமாகவும் அடிக்கடி இலங்கைக்கு தருவித்தும் கொள்வாராம்.

இரண்டு தவணைகள் இந்த நாட்டை ஆட்சி செய்த தலைவரையே இந்த ஆடைகள் கவர்ந்திருக்கிறது; இன்றும் அவற்றையே அணிந்து வருகிறார் என்றால் சாதாரண முஸ்லிம்களை மாத்திரம் எவ்வாறு குறை சொல்லலாம்.

மஹிந்த ராஜபக்ஷ அரபிகளின் ஆடைகளால் கவரப்பட்டபோது அவரது துணைவி, முன்னாள் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ அபாயாவால் கவரப்பட்டிருந்தால் இன்று இந்தப் பிரச்சினையே இருந்திருக்காது. 😉

Naeemullah Masihudeen

1 comment:

  1. எல்லாமே பெரும்பான்மை வாக்குகலுக்காக.வாக்குகளை பெற்றதும்,ஆட்சி அமைத்தவுடன் Muslim கள் மீதும் Muslim நாடுகள் மீதும் மீண்டும் ஆர்வம்,இரக்கம் வரும் கடன்,இலவச பண உதவிகள் விரைவாக தேவைப்படும் போது Muslim கள் மீண்டும் அவர்களுக்கு நனபர்கல் ஆவார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.