மெலளவிமார்களுக்கு இனவாதமற்ற ஒரு, பிக்குவின் பரிந்துரை
''சிறுவர்களைப் பிக்குகளாக்கும் போது, அந்தக் குழந்தை பாதுகாப்பான ஓர் இடத்துக்கா செல்கிறது என்பதை ஆராய எங்களிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. குழந்தைகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஊடாக இதற்கான ஒரு வேலைத்திட்டம் அமைக்க முடியுமானால்...
உதாரணமாக, எனக்கு 50 வயதாகிறது. எனக்கு ஒரு சிறுவனைப் பௌத்த பிக்குவாக்கும் தேவை ஏற்படுமானால், நான் பிள்ளைகள் பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் செல்ல வேண்டும்; அங்கே போய் அதைச் சொல்ல வேண்டும் என்று கூறும் ஓரு சட்டம் இருக்க வேண்டும். அவர்கள் என்னைப் பரீட்சித்துப் பார்த்துவிட்டு, எனக்கு ஒரு பிள்ளையை வளர்க்கும் அளவு மனநிலை/மனப்பக்குவம் இருக்கிறதா என்று சொல்ல வேண்டும்; அதனை உறுதிப்படுத்த வேண்டும்.
தாய் தந்தையரிடம் இருந்து நான் ஒரு பிள்ளையைப் பிக்குவாக மாற்ற என்னிடம் அழைத்துவந்த பிறகு, குழந்தைகள் பாதுகாப்புத் திணைக்களத்தில் இருந்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வந்து அந்தக் குழந்தை சரியான முறையில் பராமரிக்கப் படுகின்றதா, அதற்குப் பாதுகாப்பும் அன்பும் கிடைக்கின்றனவா என்றெல்லாம் பரிசீலித்துப் பார்க்க வேண்டும். இங்கு அப்படி எதுவுமே நடப்பதில்லை. இன்னொரு விடயத்தையும் நான் சொல்ல வேண்டும். இப்படியாக வளரும் பிள்ளைகளுக்குத் தமது அம்மா அப்பாவின் அன்பும் இல்லை, பெரிய பிக்குவுக்கு அந்தக் குழந்தையைப் பார்த்துக்கொள்ள நேரமும் இல்லை. இப்படியான சூழ்நிலையில் வளரும் ஒரு பிள்ளை ஆரோக்கியமான ஒரு பிள்ளையாக வளர முடியுமா? இல்லை, மனதில் காயங்களுடனேயே அந்தப் பிள்ளை வளர்கிறது என்று தான் நான் சொல்வேன்.
எங்கள் கல்வித் திட்டத்தைப் பாருங்கள். பௌத்த விகாரையிலோ, முஸ்லிம் மத்ரஸாவிலோ எங்கள் புத்தக அடுக்குகளை ஆராய்ந்து பார்க்கையில், அங்கே எங்கள் துறை சார்ந்த புத்தகங்கள் மட்டுமே இருக்குமானால், திரிபிடகம் மட்டும் அல்லது குர்ஆன் மட்டும் தான் இருக்குமெனில், பெத்தேகம நாவலோ கம்பெரலிய நாவலோ, செலலிஹினி சந்தேஷய காவியமோ, வேறு இலக்கிய நூல்களோ, மொழிபெயர்ப்புகளோ இல்லா விட்டால், திரைப்படம் ஒன்றைப் பார்த்து இருக்கா விட்டால், ஒரு பாடலை ரசிக்கத் தெரியாவிட்டால், வெறுமனே சமய நூல்களைப் பற்றி மட்டுமே தெரிந்து வைத்திருந்தால், அங்கே ஒரு முரட்டு மனிதன்தான் உருவாக முடியும்.
இதனை இப்படியே நான் மவ்லவி அவர்களுக்கும் பரிந்துரைக்கிறேன்: நீங்கள் மத்ரஸாக்களுக்குச் சென்று அங்குள்ள புத்தக அடுக்குகளைப் பாருங்கள். அங்கே குர்ஆன் மட்டும் தான் இருக்குமானால், வேறு இலக்கிய நூல்கள் இல்லாவிட்டால், குர்ஆன் வசனங்கள் மட்டுமே தெரிந்திருக்குமானால், பாடலொன்றை ரசிக்கத் தெரியாவிட்டால், இலக்கியப் படைப்பொன்றைப் பற்றித் தெரியாவிட்டால் அங்கும் ஒரு முரட்டு மனிதனே உருவாக முடியும். குர்ஆன் வசனங்கள் மட்டுமே தெரிந்திருக்கும் நிலையில், பிற இலக்கியங்களைப் பற்றியோ புற உலகத்தைப் பற்றியோ எந்த விஷயமும் தெரியாத பட்சத்தில், ஒரு குர்ஆன் வசனத்தின் அர்த்தத்தைக் கொஞ்சம் மாற்றிக் கொடுப்பது மட்டும் தான் பாக்கி. அதன் மூலம் ஒரு கெட்டவனை உருவாக்கி விட முடியும்.
அதனால் தான் நான் சொல்கின்றேன், இதோ இந்த இடத்தில் இருந்து தொடங்கி இன்னும் பத்து வருடங்களில் நாம் சென்றடைய வேண்டிய இடமெது எனச் சிந்தித்து நாம் மாற்றமுற வேண்டும். நமது இயக்கங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். இவ்விடயத்தில் பௌத்தர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என்றில்லை. நாம் அனைவரும் நம்மை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். "
~கல்கந்தே தம்மானந்த தேரர்~
தமிழில்: லறீனா அப்துல் ஹக்
உண்மையில் பிள்ளைகளை எமது அரபு கலாசாலைகலில் molavi க்கு ஓதலாம் ஆனால் அவர்களை அங்கேயே தங்க விடுவதை முதலில் நிறுத்த வேண்டும்.பாடசாலை போல் மார்க்க விடயங்கலை படித்து விட்டு வீட்டுக்கு வருவது போல் இருக்கும்படி மாற்ரி அமைக்க வேண்டும்.
ReplyDeleteThanks hamaduruvane!valuable request, since the Islamic colleges rely with suggested qualities above, it has been ousted the wrong interpreter Sahran from its studentship and throw him out?, however the wider rage reformation need of the situation with no doubt...
ReplyDeleteமிகவும் சிறந்த கருத்துக்கள்பொதிந்த, சிந்தனையைத் தூண்டக்கூடிய உண்மையைவெளிப்படுத்தும் கருத்துக்களை அழகான தமிழில்பெயர்த்து தமிழ்பேசும் மக்களின் சிந்தனையைத் தூண்ட உதவியமைக்கு சகோதரி லரீனாவுக்கு உளமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteஅழகான சுய விமர்சனம். மொழிபெயர்ப்பு செய்த சகோரிக்கும் நன்றி. இதேபோல் நம்மை நாம் சுயபரிசோதனை செய்தால் நமக்கு காபிர் பட்டம் தந்து விடுவார்கள் அல்லது பெயரை மாற்றி வைத்து விடுவார்கள் சஹ்ரான் இருந்தால் கொலை செய்ய குழு அமைத்து விடுவார்.
ReplyDeleteGreat valuable advise... We Respect you Sadhu... We are in need of more people like you...
ReplyDelete