இலங்கையில் வெறுப்புப்பேச்சு, சம்பவங்கள் கடுமையாக அதிகரிப்பு - ஐ.நா. கவலை
இலங்கையில் வெறுப்புப்பேச்சு சம்பவங்கள் கடுமையாக அதிகரித்திருப்பது குறித்துக் கவலை வெளியிட்டிருக்கும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர், வெறுப்புப்பேச்சின் தன்மை குறித்தும், வன்செயல்களைத் தூண்டிவிடுவதில் அதற்கிருக்கும் ஆற்றல் குறித்தும் பொலிஸார் கூடுதலான அளவுக்கு விழிப்புணர்வுடையவர்களாக இருக்க வேண்டும் என ஐ.நா எதிர்பார்ப்பதாகக் கூறியிருக்கிறார்.
'இலங்கையர்கள் பெருமையாகப் பேசிக்கொள்கிற சகிப்புத்தன்மை, சகலரையும் அரவணைக்கும் போக்கு மற்றும் பன்முகத்தன்மை ஆகிய பண்புகள் மீதான தாக்குதலே வெறுப்புப்பேச்சு என்பதை நாம் மனதில்கொள்ள வேண்டும். அது சமூக ஒருங்கிணைவையும், பொதுவான பண்புகளையும் மலினப்படுத்துவதுடன் சமாதானம் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி தொடர்பில் காணப்பட்ட முன்னேற்றங்களை மட்டுப்படுத்தும் ஆபத்தைக் கொண்டுள்ளது' என்றும் குறிப்பிட்டார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட முதன்முதல் இணையத்தளத்தின் மூலமான பொது முறைப்பாடு முகாமைத்துவ முறைமையை ஆரம்பித்தவைக்கும் வைபவத்தில் இன்று கலந்துகொண்டு பேசுகையிலே அவர் இதைத் தெரிவித்தார்.
இது இலங்கையின் உள்நாட்டு பிரச்சனை
ReplyDeleteஇலங்கை அரசாங்கம் முஸ்லிம்களின் 100% ஆதரவு பெற்றுள்ளது, அவர்கள் தங்களுக்குள் தீரத்தகொள்வாரகள்
வெறுப்புணர்வை அதிகமாக பரப்பிவரும் "jaffna muslim " என்ற இந்த கீழ்த்தரமான ஊடகம் இந்த செய்தியையும் வெளியிடுவது கொடுமை!
ReplyDelete