வீதியில் வீசப்பட்ட, புத்தர் சிலைகள் - குழப்பங்களை உருவாக்க திட்டம்
கொழும்பில் இனவாதிகள் சிலரால் வீசப்பட்ட புத்தர் சிலைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
இராஜகிரிய, லேக்ரைவ் பகுதியிலுள்ள கான் ஒன்றில் வீசப்பட்டிருந்த நிலையில் 12 புத்தர் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
அந்தப் பகுதியில் வேலையில் ஈடுபட்டிருந்த சிலர் சிலைகளை கண்டுள்ளனர். இது குறித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
விரைந்து செயற்பட்ட நாரஹேன்பிட்டி பொலிஸார் வீசப்பட்டிருந்த புத்தர் சிலைகளை மீட்டுள்ளனர்.
மோட்டர் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று புத்தர் சிலைகளை அங்கு வீசி விட்டுச் சென்றதை நேரில் பார்த்தவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை அறிந்த பிக்குமாரும் அந்தப் பகுதிக்கு சென்றமையால் அங்கு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.
இதுவொரு திட்டமிட்ட இனவாத செயல் என்றும் இந்த நாசகார வேலையில் ஈடுபட்ட இனவாதிகளை உடனடியாக கைது செய்யுமாறும் தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நாரஹேன்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தங்கள் கடவுளை தாங்களே,வீசி விட்டு Muslim கள் மீது பழி போடும் அளவுக்கு முற்றி விட்டது.இனவாத வெறி
ReplyDeleteNaadu mennerum.......
ReplyDeleteBuddha is not GOD. He is just a ordinarily man, But he was a great human being.
ReplyDeleteBuddha not teach his people to make statue.
Statue is against Buddhas Teaching.
"Study Real Buddhism"