Header Ads



முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும், பதவி ஏற்றமை வெட்­கப்­பட வேண்­டியதாகும் - சுனில் ஹந்துன்நெத்தி

மக்கள் நல­னுக்­காக அன்றி இன்று நாட்டில் பணத்­திற்­காக அர­சி­யலில் ஈடு­படும் அர­சி­யல்­வா­தி­களே அதி­க­மாக இருக்­கின்­றனர் எனத் தெரி­வித்த மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்துன் நெத்தி, முஸ்லிம் அமைச்சர் தாமாக பதவி வில­கி­ய­மையும், மீண்டும் பதவி ஏற்றுக்கொண்­ட­மையும் பணத்­திற்­கா­கவே என்­பது வெட்­கப்­பட வேண்­டிய விட­ய­மாகும் என்றும் குறிப்­பிட்டார்.

பதவி வில­கிய முஸ்லிம் அமைச்­சர்­களில் இருவர் மீண்டும் பத­வி­யேற்றுக் கொண்­டமை குறித்து விளக்­க­ம­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். 

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில், 

போதைப் பொருள் வியா­பாரம் செய்­ப­வர்­களோ, ஊழல் மோச­டி­களில் ஈடு­ப­டு­ப­வர்­களோ ஜே.வி.பியில் இல்லை. அவை ஐக்­கிய தேசிய கட்­சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும் , பொது­ஜன முன்­ன­ணி­யிற்கும் உரித்­தா­னவை. இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்­களில் மாட்­டு­ப­வர்­களும் கைது செய்­யப்­ப­டு­ப­வர்­களும் இந்தக் கட்­சியின் ஆத­ர­வா­ளர்­களே.  ஆனால், அவர்கள் எமக்கு சேறு பூசு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றனர். 

இவ்­வா­றான தலை­வர்­களை தெரிவு செய்த மக்­களும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும். நாட்டின் ஜன­நா­ய­கத்தை கட்­சி­க­ளுக்கு பகிர்ந்­த­ளிப்­பது தவ­றாகும். ஐ.தே.க, சு.க மற்றும் பொது­ஜன முன்­னணி என்று வெவ்­வேறு கட்­சி­க­ளாக இருந்­தாலும் இவர்கள் அனை­வரும் ஊழல் மோசடி செய்­வதில் ஒரே அணி­யா­கவே செயற்­ப­டு­கின்­றனர். 

இதன் மூலம் இர­க­சிய ஒப்­பந்­தங்கள் மூலம் நாட்டை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­பதே இவர்கள் அனை­வ­ரி­னதும் நோக்­க­மாகும். 

இவை மாத்­தி­ர­மின்றி,  இன­வாத அர­சி­ய­லிலும் ஈடு­ப­டு­கின்­றனர். சிலர் பணத்­திற்­காக அர­சியல் செய்­கின்­றனர். அமைச்சு பத­விகள் கூட பணத்­திற்­கா­கவே பகிர்ந்தளிக்கப்படுகின்றன.  இன்று தானாக பதவி விலகுவதும், மீண்டும் பதவி ஏற்றுக் கொள்வதும் பணத்திற்காக என்பதே உண்மையாகும். இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என்றர். 

1 comment:

  1. நாய் நஜீஸ் எ பத்தி பேசுது

    ReplyDelete

Powered by Blogger.