Header Ads



ஹிஸ்புல்லாவிடம் இன்று 8 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லா இன்று -15- பயங்கரவாத விசாரணைப் பிரிவில் 8 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இரவு 10 மணியளவில் கல்குடா பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் அரேபிய பிரஜைகள் இருவரை சந்தித்து கலந்துரையாடியமை தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணை குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு இன்று அழைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தா​ர்.

இதன் பிரகாரம், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, பயங்கரவாத விசாரணைப் பிரிவில் இன்று காலை 9.30 அளவில் ஆஜராகினார். இன்று மாலை 5.30 அளவில் அவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவிலிருந்து வௌியேறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

3 comments:

  1. உண்மை சொன்னால் எங்கட முஸ்லீம் பிரதிநிதி ஒருவருக்கும் சரியான நேரத்தில் சரியான பதிலை சொல்ல தெரியாது அந்த isis விடயத்தில்.isis என்ற இயக்கம் இலங்கையில் மட்டும் குண்டு வைத்து தாக்கப்பட்டதல்ல அது உலகலவியில் முஸ்லிம்களுக்கு எதிராகவே நிறைய தாக்குதல்களும் அழிவுகளும் ஏட்படுத்தி இருக்கின்றன உதாரணமாக ஈராக்,ஆப்கானிஸ்தான்,பாக்கிஸ்தான்,சிரியா,எகிப்து,சோமாலிய.லிபிய மற்றும் நிறைய ஆப்பிரிக்கா நாடுகளில் முஸ்லிம்களே அதிகளவில் பாதிப்படைந்து இருக்கிறார்கள் அப்படி இருக்க எங்கள் முஸ்லீம் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் கேட்க வேண்டும் எப்படி நாங்கள் அவர்களுக்கு துணைபோக வேண்டுமென்று??

    ReplyDelete
  2. I don't know how Hisbullah became a leader of Muslim
    community ! I watched his answers to the Parliament
    Select Committee on YouTube . His body language was
    so weak and his English and Sinhala was not up to an
    excellent standard either . Any leader , let alone
    Muslim leader , need to maintain a dignified body
    language plus excellent communication skills to speak
    firmly with confidence . I think Hisbullah and Rizvi
    Mufti were just missing those components !

    ReplyDelete
  3. பிறகு... எப்படியாம் ஆள வெளியாள விட்டவங்களாம்?
    இதுவும் ஒரு கண்துடைப்பு நாடகம் தான் போல.

    எங்க நம்மட பிக்கு சார் மார்கள்!, உங்கட உண்ணாவிரதத்தை திரும்பவும் start பண்ணினாத்தான் ஏதாவது உருப்படியா செய்வாங்க போல

    ReplyDelete

Powered by Blogger.