வீதியில் கண்டெடுத்த 85000 ரூபா பணத்தை திருப்பிக்கொடுத்த நல்லுள்ளங்கள் - கல்பிட்டியில் நெகிழ்ச்சி
கல்பிட்டி அல் மனார் பகுதியில் வசிக்கும் முச்சக்கரவண்டி சாரதியான ராசிக் என்பவருடைய மனைவி (ஆசிரியர்) 19.06.2019 பாடசாலை முடிந்து வீடு திரும்பும் போது வீதியில் (அல் மனார் 3வது ஒழுங்கை)யில் #பணம் கட்டு ஒன்று கிடப்பதை கண்டுள்ளார். அதை வீதியிலே விட்டு விடாமல் உரியவரிடம் ஒப்படைப்பதற்காக பத்திரமாக எடுத்து தனது கனவர் ராசிக் இடம் கொடுத்துள்ளார்..
மாலை வேலையில், அதே வீதி வழியாக வந்த சகோதரர் ஒருவர் எதையோ தேடுவதை கண்ட ராசிக் நாநா என்வென்று கேட்ட போது அந்த நபர் "தான் அவசர தேவைக்காக தனது காணியை விற்பனை செய்துவிட்டு 85000/= பணத்தை தனது சட்டை பையில் வைத்திருந்ததாகவும், தனது பேரனுக்கு மண்டையில் அடிப்பட்டு மண்டை உடைந்ததால் அவசரத்தில் அதே சட்டையை அணிந்து பேரனை இந்த வழியாக வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போது பணம் கீழே விழுந்ததாகவும் கூறியிருக்கிறார்.
அப்போது ராசிக் நாநா பணத்தை அவரிடம் வழங்கி நடந்த விடத்தைகூறியிருக்கிறார்.
உண்மையிலே ராசிக் நாநா மற்றும் அவரது மனைவியின் செயலை பாராட்டியே ஆக வேண்டும்.
வாழ்த்துக்கள்.
Irfân Rizwân
Post a Comment