இராணுவத்தில் 700 முஸ்லிம்கள் பணியாற்றுகின்றனர் - மகேஷ் சேனாநாயக்க
இராணுவத்தில் பெரும்பான்மையான சிங்கள பௌத்தர்கள் பணிப்புரிந்தாலும், இராணுவத்துக்குள் எந்தவிதமான இன, மதப் பாகுபாடுகளும் இல்லையெனத் தெரிவித்த இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க, இராணுவத்தினர் அனைவரும் நாட்டைப் பாதுக்காக்கும் இனமெனத் தெரிவித்தார்.
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு, இரு ஸ்கேன் இயந்திரங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் நேற்று (17) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர், இராணுவத்தில் பாரிய மனிதவளம் இருப்பதாகவும், அதனால் செய்ய முடியாததென எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
யுத்தம், நல்லிணக்கம், விவசாயம் என மூன்று துறைகளுக்கும் இலங்கை இராணுவத்தினர் சேவையாற்றிவருதாகவும், இலங்கை இராணுவத்தில், 700 முஸ்லிம்களும், கிருஸ்தவர்கள் 1600 பேரும், இந்துக்கள் 200 பேரும் பணிப்புறிவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, இராணுவத்தில் 99 சதவீதமானவர்கள் பௌத்தர்களாக இருக்கின்றபோதிலும், இராணுவத்துக்குள் இன,மத பேதங்கள் இல்லை என்றார்.
You are saying there is no racism in SL Army. Then why members of your forces turning blind eye when Muslims are attacked by Sinhala thugs?
ReplyDeleteContribution of Minority communities in armed forces is not enough! The percentage has to be reached at least 25%.
ReplyDelete