Header Ads



55 நாட்கள் சிறையிலிருந்த 3 அப்பாவி, முஸ்லிம் இளைஞர்கள் விடுதலை

27/04/2019 அன்று கண்டி திகனை மற்றும் பல்லேகலையைச்சேர்ந்த 3 அப்பாவி முஸ்லிம்களாகிய ரிகாஷ்,சிராஜ் மற்றும் கலாம் ஆகியோரை பல்லேகல பொலிசுக்கு வரச்சொல்லி அவர்களை சிறையிலடைத்ததுடன் அவர்களின் வீட்டுக்குச்சென்று லெப்டொப்கள், மொபைல் போன்கள் மற்றும் CD களையும் எடுத்துவந்து போலியான வழக்கைப்போட்டு கடந்த 55 நாட்களாக சிறை வாழ்வை அனுபவிக்க காரணமாக இருந்தனர் பல்லேகல பொலிசார்.

தெல்தெனிய நீதவான் கலன்சூரிய முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட 9 சந்தர்ப்பங்களில் பேசப்பட்ட விடயங்களை சுருக்கமாக தருகிறோம்.

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் “அபாயகரமான ஆயுதங்கள் வைத்திருந்தமை தவறாகும்”என laptop மற்றும் 4 Mobile phone களை இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பிய போது அதை எதிர்த்தோம் அதனால் எழுத்துமூலமான எதிர்வாதங்களை முற்போடும் படி நீதவான் எம்மைக்கேட்டுக்கொண்டார்.

“நியாயமான சந்தேகமின்றி ஒருவரை கைது செய்ய முடியாது”என தீர்க்கப்பட்ட பல உள்நாட்டு வெளிநாட்டு வழக்குகளை உதாரணங்களாகக்காட்டி எமது எழுத்து மூலமான (Written Submission) சமர்ப்பணங்களை நீதிமன்றில் முன் வைத்தோம்.

அதற்கு போலிசார் தாங்கள் தவறுதலான பிரிவின் கீழ் வழக்கிட்டதாகவும் மறுப்புரையாக PTA சட்டத்தின் வேறு ஒரு பிரிவின் கீழ் “இனங்களுக்கிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தியமைக்கு” கீழ் மீண்டும் ஆவணங்களை திருத்தி கோப்பிலிட்டனர்.

“ஒரு laptop மற்றும் 4 Mobile phone எவ்வாறு வெறுப்புணர்வை ஏற்படுத்தும்”என மீண்டும் எமது எதிர்வாதத்தை முற்போட்டோம். அவர்கள் மீண்டும் முற்போட்ட குற்றச்சாட்டும் முறியடிக்கப்பட்டது.

PTA சட்டத்தின் எதாவது பிரிவின் கீழ் எப்படி சரி இந்த அப்பாவிகளைப்போட்டு “அமித் வீரசிங்கவை நாம் அலைய வைத்தது போன்று இவர்களையும் அலைய வைத்து பலி தீர்க்க வேண்டும்” என்பதை போலிசாரினதும் அவர்களுக்கு அழுத்தங்களை பிரயோகிப்பவர்களின் நோக்கமாக இருந்தமையை எமது எதிர்வாதங்கள் தவிடு பொடியாக்கியது.

“PTA சட்டத்தின் எந்தப்பிரிவுகளுடனும் இவர்கள் மீது எந்த குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்கக்கூடிய எந்த சான்றுகளையும் உங்களால்(போலிசார்) முன்வைக்க முடியாமையால் சாதாரண சட்டத்தின் கீழ் இந்த வழக்கை கொண்டுவந்து இவர்களை பிணையில் விடுவதற்கு கட்டளையிடுகிறேன்”,என 5 இலட்சம் சரீரப்பிணையில் நீதவான் கலன்சூரிய மூவரையும் கடந்த வெள்ளிக்கிழமை (21/06/2019) விடுதலை செய்தார்.

“பதுளையில் விடுதலை செய்யப்பட்டவர்களுடன் நின்று போட்டோ எடுத்தது போன்று திகன வாசிகளுடனும் நின்று போட்டோவை Facebook ல் போடவேண்டாம்”எனும் வழக்கு தொடுநர்களினதும் விடுதலையாகியவர்களினதும் மன்றாட்டமான கோரிக்கை எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

காரணம் “சட்டத்தைப்பேசி மூவரையும் கலட்டிக்கொண்டு போகுறீர்கள் எங்களைத்தான் இருக்க விடமாட்டானுகள்....எனக்கூறிய நடிகர் நகேஷைப்போன்ற உதடுகள் கறுத்த பல்லேகல பொலிஸ் கோர்ட் சார்ஜன்ட்டின் சோகம் கலந்த முகமும் ,அமித் வீரசிங்க போன்றவர்கள் வசிக்கும் பிரதேசத்தில் வசிக்கும் எமது சகோதரர்களின் நிலைமையை கருத்தில் கொண்டமையேயாகும்.

மாத சம்பளத்தில் காலத்தை ஓட்டுகின்ற இந்த அப்பாவி பொலிசார் என்ன தான் செய்வார்கள் இவர்களுக்கு அழுத்தத்தைக்கொடுக்கும் அந்த சக்திகளைக்கண்டு பிடித்து அதை சட்டரீதியாக அடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு எமது அரசியல்வாதிகள் முயற்சிக்க வேண்டும்.இதனை “இந்த உலகம் தான் சுவர்க்கலோகம்” என வாழும் அரசியலவாதிகளால் சாதிக்க முடியாது. புதிய இளம் அரசியல்வாதிகள் சமூகத்தினால் அடையாளப்படுத்தப்படல் வேண்டும்.

சட்டத்தரணி சறூக் - 

3 comments:

  1. முஸ்லிம் சமூகுத்தின் மீது அக்கறையுடன் செயற்படும் சட்டதரணி சரூக் அவர்களுக்க அல்லாஹ் அருள்புரியட்டும்

    ReplyDelete
  2. சட்டத்தரனி சரூக் அவர்களே உங்கலினதும் உங்கள் மனைவியினதும் சேவைகளை அல்லாஹ் பொருந்திக் கொல்வானாக

    ReplyDelete

Powered by Blogger.