கல்முனையில் களம் குதிக்கும் ஞானசாரர் - 2 நாள் அவகாசமும் விதித்தார்
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்த கோரி சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தில் கல்முனை விகராதிபதி , இந்து குருமார் , கிறிஸ்தவ போதகர்கள் மற்றும் கல்முனை மாநகர உறுப்பினரான ராஜன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கல்முனை விகராதிபதி ரன் முத்துகல சங்கரத்தின தேரரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள விகராதிபதியின் உடல் நலம் பற்றி கேட்டறிந்ததுடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இன்னும் இரு தினங்களில் தரம் உயர்த்தாவிடின் பாரிய போராட்டம் ஒன்றை கல்முனையில் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார் .
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோரி அண்மைக்காலமாக பலரும் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் இன்று இந்த சாகும்வரையான போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்போராட்டமானது ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு பாரிய சவாலாக இருக்கும் என அரசியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
சுப்பர்.
ReplyDeleteஹாரிஸ், ஹிஸ்புல்லா போன்ற இனவாத-அடிப்படைவாத அரசியல்வாதிகள் கல்முனை தமிழ்ர்களை அடக்கி-ஒடுக்கி, உரிமைகளை பறித்தார்கள். அதை TNA எதிர்த்தார்கள், பிறகு வேறு எங்கேயோ busy போல.
ஆனால், அநாதரவாகவிடப்பட்ட கல்முனை தமிழர்களுக்கு ஆதரவாக, சிங்களவர்கள் குரல் கொடுப்பதை, தமிழர்கள் நன்றி கூறி வரவேற்க வேண்டும்.
கிழக்குக்குள் ஞானசேரயை நுளைய விட்ட பெருமையை இந்த இரு அரசியல்வாதிகளும் பெறுகிறார்கள்
எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்து பின் அவமானப்பட்டு மூக்குடைப்பட்டு தேவையா. சார்.
ReplyDeleteSoooper......arasa?? Yaana serayya ?
ReplyDelete30 வருடங்களாக புலிகள் நாட்டை அழித்தபோது இந்த தேசப்பற்று உள்ளவர்கள் எங்கே இருந்தார்கள். இந்த தேரர்கல் புலிகலூக்கு பயந்து ஒழிந்து இருந்தார்கள்.இப்போது உண்ணாவிரதம் இருக்கும் சில தமிழ் இனவாதிகல் புலிகளுடன் சுகுசு வாழ்க்கை வாழ்ந்தார்கல்.இப்போது இரு சுய நலவாதிகலும் ஒர்ருமையாம் பார்க்க கேவலமாக உள்ளது.தமிழ் பெண்கள் சீரழிக்கப்பட்ட போது,அப்பாவி தமிழ் சிவிலியன்கல் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு வருடக் கனக்கில் ஜெயிலில் அடைக்கப்பட்ட போது இவர்கல் ஏன் அதற்கு எதிராக உண்ணா விரதம் இருக்க வில்லை.அய்யோ உண்ணாவிரத ஹீரோக்களே உங்கல் சுய ரூபத்தை அனைத்து சிங்கள,தமிழ் சாமான்ய மக்கள் நன்கு அறிவர்.
ReplyDeleteஞானசாரர் சொன்னால் செய்ய வேண்டியதுதான் இனி தப்ப முடியாது.ஜனதிபதியாலும் முடியாயது.பிரதமராலும் முடியாது.அவரை திறந்துவிட்டது இதகுத்தானே.
ReplyDeleteதோழர் தலைவர் ரவூப் ஹ்க்கீம் அவர்களும் தமிழர் தலைவர் சம்பந்தனும் அம்பாறை மாவட்ட பிரதிநிதிகள் திரு ஹாரீஸ் அவர்களும் திரு கோடீஸ்வரன் அவர்களும் உடனடியாக சந்தித்து பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும். இன்று நடைபெருகிற காரியங்கள் எப்பவோ முடிவுக்கு வந்திருக்க வேண்டும். இனியும் கல்முனை கல்முனைக்குடி சாய்ந்தமருது மக்களை சந்தி சிரிக்க வைக்காதீர்கள்.
ReplyDelete