28 நாட்களின் முன் புதைத்த ஜனாஸா, வேறு பகுதியிலிருந்து மீட்பு - கலேவெலயில் பரபரப்பு
நிக்கவெஹெர பல்லேவெல பகுதியில் நபர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து புதைக்கப்பட்ட நிலையில், 28 நாட்களுக்கு பின் குறித்த ஜனாஸா காணாமல் போயுள்ள சம்பவம் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலேவெல பொலிஸாருக்கு இன்று கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய விசாரணை மேற்கொண்ட போது கவேவெல பல்லேவெல பகுதியில் முஸ்லிம் மயானத்தில் கடந்த 28 நாட்களுக்கு முன்னர் புதைக்கப்பட்டிருந்த ஜனாசாவே இவ்வாறு காணாமல் போயுள்ளது.
குறித்த ஜனாஸா தோண்டியெடுக்கப்பட்டுள்ள, அதே இடத்திற்கு அருகில் சடலங்கள் புதைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு குழிகளும் தோண்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காணாமல் போன குறித்த ஜனாஸா முருங்கை பயிர் செய்யப்பட்டிருந்த பகுதியில் மண்ணால் மூடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மர்மான ஜனாஸா , கலேவெல – பல்லேவெல பகுதியை சேர்ந்த 50 வயதான ஹபிபி லெப்பை மன்சூர் என்பவரின் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இதனை தோண்டி எடுத்தது யார்? எதற்காக தோண்டியெடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் இதுவரை அறியப்படவில்லை.
எனினும் இது தொடர்பில் மீளவும் நீதவான் நீதிமன்றத்திற்கு விளக்கம் அளிக்கப்பட்டு அடுத்தக்கட்ட விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட இடம் மற்றும் மயானத்திலும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Good governance!! Even dead body is not safe........ in the Banana Republic of SL
ReplyDelete