இலங்கைக்கு 150 மெற்றிக் டொன் பேரீத்தம், பழங்களை வழங்கிய சவுதி அரசாங்கம்
சவுதி அரசாங்கம் வருடா வருடம் இலங்கை நாட்டுக்கு வழங்கி வரும் 150 மெற்றிக் டொன் பேரீத்தம் பழங்கள் சம்பிரதாய பூர்வாமாகக் கையளிக்கும் நிகழ்வு இன்று கொழும்பில் உ்ளள சவுதி அரேபியா நாட்டின் துாதுவா் அலுவலகத்தில் 18.06.2019ல் நடைபெற்றது.
படத்தில் சவுதித் அரேபியாவின் துாதுவா் அப்துல் நஸாா் பின் குஸ்னி அல் கரத்தி அவா்கள் தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சின ்செயலாளா் திருமதி எம்.எஸ் முகம்மதிடம் பேரீத்தம் பழங்களை அலுவலக ரீதியாக கையளித்தாா்.
கடந்த 2 மாதகாலமாக நாட்டின் நடைபெற்ற அமைதியின்மை காரமாண இந் நிகழ்வு பின்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் வைபவத்தின் அமைச்சின் மேலதிகச் செயலாளா் எம். முகைஸ் ,முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளா் எம்.ஆர்.எம் மலிக் மற்றும் சவுதி அரசா் சல்மான் மணிதபிமான உதவித்திட்டத்தின் நிதிப் பணிப்பாளா் மகுமூத் குரைசியும் கலந்து கொண்டனா்
(அஸ்ரப் ஏ சமத்)
அறிவில்லாத சவூதி , அறிவில்லாதவேணுஹலே , முஸ்லீம் மக்களுக்கு நடக்கும் கொடூரத்துக்கு லஞ்சமா குடுக்கேயெலா , மூடர் கூட்டம் சவூதி
ReplyDeleteஅதுசரி நோன்பு முடிஞ்சி 1 மாசம் இப்ப ஏத்துக்குமா இது
ReplyDeleteஇஸ்லாத்திற்கு முன்னும் பின்னும் அரபியர்கள் கொடுத்துதவும் பண்பாடு உள்ளவர்கள். இது அவர்களின் நற்குணங்களுள் ஒன்று
ReplyDelete