காட்டுப் பகுதியில் IS தீவிரவாதியான சஹரானினால் பாரிய முகாம் அமைக்க திட்டமிடப்பட்ட பகுதி கண்டுபிடிப்பு
மட்டக்களப்பு பொலன்னறுவை மாவட்டக்களின் எல்லைப் பகுதியான ரிதிதென்னை ஓமடியாமடு காட்டுப் பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியான சஹரானினால் பாரிய முகாம் அமைப்பதற்காக திட்டமிடப்பட்ட பகுதியொன்றை இன்று திங்கள்கிழமை புலனாய்வு பிரிவினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.
மகாவலி அதிகார சபைக்குரிய 25 ஏக்கர் அரச காணியை தனி நபர் ஒருவரின் பெயரில் கொள்வனவு செய்து குறித்த இடத்தில் முகாம் அமைப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரனைகளில் தெரிய வந்துள்ளது.
சஹரானின் சாரதியினை கைது செய்து விசாரனைகள் இடம் பெற்று வரும் நிலையில் அவரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய அவரது மிக நெருங்கிய நபரொருவர் நேற்று ரிதிதென்னையில் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து 187 ஜெனட் ரேட்டர் குச்சிகள் கைப்பற்றப்பட்டதுடன், வெடிமருந்து பயன்படுத்தும் ஸ்பிரிட் வகை திரவம் 25 லீட்டர் கலன் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஜெனட் ரேட்டர் குச்சிகள் யாவும் பிளாஸ்டிக் குளாய்களில் மறைத்துவைத்த நிலையிலயே புதைக்கப்பட்டிருந்ததாகவும் குறித்த இடத்தில் பாரிய பதுங்கு குளிகள் அமைப்பதற்காக திட்டமிடப்பட்டிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன்
இலங்கையின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்ட குண்டுப் பொதிகள் அனைத்தும் குறித்த இவ்விடத்திலேயே பொதி செய்யப்பட்டமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், தொடர் விசாரனைகளை விசேட அதிரடிப்படையினரும் , புலனாய்வு பிரிவினரும் இணைந்து மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(எஸ்.எம்.எம்.முர்ஷித் -
Post a Comment