Header Ads



முஸ்லிம் வைத்தியர்கள் தமது, தொழிலில் கண்ணியமாகவே இருக்கின்றனர் - DR. Grey

இஸ்லாமிய கொள்கைகளிள் இறுக்கமாக இருந்தாலும் முஸ்லிம் வைத்தியர்கள் தமது தொழிலில் கண்ணியமாகவே இருக்கின்றனர்... தொழில் சம்மந்தமாக எந்தவொரு பாகுபாடோ பிரிவினையோ அவர்கள் மேற்கொள்ளவில்லை.

அனைவருக்கும் சமனான மருத்துவமே வழங்கப்பட்டது..அதற்கு நானே சாட்சி..தமிழ் மக்கள் கொழும்பு வைத்தியசாலையில் மொழிப்பிரச்சனையால் அவதிபடும்போது உதவுவதும் அவர்களே.....சிங்களம் தெரியாமல் internship இல் நாம் தடுமாறுகையில் எமக்கு பக்கபலமாக இருந்து உதவிசெய்ததும் முஸ்லிம் வைத்தியர்களே.

இந்த கருத்தடை கதை எல்லாம் என் அறிவுக்குட்பட்டவரை கட்டுக்கதையாகவே இருக்கும்...தொழிற்போட்டிகாரணமாகவோ இனத்துவேசம் காரணமாகவோ புனையப்பட்ட கதை என்றே நான் எண்ணுகின்றேன்..காரணம் LRT(நிரந்தர கருத்தடை) செய்யவேண்டும் எனில் அதற்கு concent form எனப்படும் சம்மதம் தெரிவிக்கும் படிவத்தில் கையெழுத்து இடவேண்டும்...அதை உறுதிப்படுத்திய பின்னரே மயக்கமருந்து வழங்கும் வைத்தியரும் ஆப்பரேசன் செய்யும் வைத்தியரும் தமது வேலையை ஆரம்பிப்பர்.

கான்செண்ட் இல்லைஎனில் மயக்க மருந்து வைத்தியர் மயக்க மருந்தை கொடுக்கமாட்டார்..ஆப்பரேசன் செய்யும் வைத்தியர் கையை கட்டிகொண்டு இருக்க வேண்டியது தான்..அதாவது இந்த ஆப்பரேசன் தனியே ஒரு மகப்பேறு விடுதியில் இருக்கும் வைத்தியருடன் சம்மந்தபட்டது அல்ல,.அடுத்து இந்த consent எனும் விடயமும் சாதரணமானது அல்ல.

நிரந்த கருத்தடைக்கு ஒரு பெண் நினைத்த மாத்திரத்தில் கான்செண்ட் கொடுக்க முடியாது...elective LRT என்றால் முதலில் அவளது கணவன் சம்மதம் தெரிவிக்க வேண்டும் (பெண்ணியவாதிகள் கடுப்பாக வேண்டாம்)

பெண்ணுக்கு 3 பிள்ளைகள் இருக்க வேண்டும்..வயது கூட 35க்கு மேற்பட்டிருக்க வேண்டும் என் ஞாபகம்..வயது விடயம் எனக்கு நிற்சயம் இல்லை

இவ்வளவுவிடயமும் அடையபெற்றாலே ஆப்பரேசன் நடக்கும்..

அல்லது 3 தடவை சிசேரியன் செய்தாலோ அல்லது இருதய வியாதிகள் போல கருத்தரிப்பதற்கு கான்ராஇண்டிக்கேசன் இருக்கும் இடத்தில் தாயின் கான்செண்டுடன் LRTசெய்யலாம்...

ஆக மொத்தத்தில் LRT என்பது நினைத்தவுடன் கொட்டாவிவிடுவது போல இலகுவான விடயம் அல்ல..

ஆனாலும் சிசேரியன் செய்யும் பொழுது யாருக்கும் தெரியாமல் குழந்தைய எடுத்தவுடன் LRT செய்துவிடக்கூடிய சந்தர்ப்பர் இருக்கின்றது என்பது மறுப்பதற்கில்லை..but that doctor will have to face medico legal proceedures and will be paying a big compansation to the victim if he's been caught redhanded 

medico-legal பிரச்சனைகளை சந்திக்க எந்த வைத்தியரும் விரும்பவும் மாட்டார்கள்..எனவே மருண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல என்ன நடந்தாலும் அதற்கு முஸ்லிம்களை குறைசொல்வது ஆரோக்கியமான விடயம் அல்ல,அடிப்படைவாதம் தீவிரவாதம் இரண்டையும் நாம் மூர்க்கமாக எதிர்ப்போம்..கற்பனை செய்திகளை நம்பி ஏற்கனவே கவலையில் வாடும் அவர்களை இன்னும் வாட்டாமல் இருப்போம்..

இந்த இடத்தில் ஒரு ஜோக் எனக்கு நினைவுக்கு வருகின்றது..

முருகேசன் எனும் ஒருவன் குடும்பக்கட்டுபாடு ஹாஸ்பிடலுக்கு போனான்

இவனை பார்த்ததும் டாக்டர் கேட்டார்.

யோய் நீ போன வருசம் தானேயா ஆப்ரேசன் பண்ணிட்டு போனன்னு

என்ன ஆப்ரேசன் பண்ணி என்ன புண்ணியம், திரும்ப என் பொண்டாட்டி மாசமா இருக்கான்னு சொன்னான் முருகாசன் சலிப்புடன்..

DR.Grey

1 comment:

  1. வியாபார போட்டிதான் அனைத்து தரப்புகளும் எம் மீது கக்குகின்ர இனவாதமாகும்.வியாபாரத்தில் எம்மோடு போட்டி போட முடியாத கோழைகல்,இனவாதத்தை கையில் எடுதுல்லார்கல்

    ReplyDelete

Powered by Blogger.