Header Ads



ஜும்ஆ பிரசங்க ஒலிப்பதிவை முஸ்லிம், சமய திணைக்களத்திற்கு அனுப்புமாறு பணிப்புரை

நாட்­டி­லுள்ள அனைத்து ஜும்ஆ பள்­ளி­வா­சல்­க­ளிலும் வாராந்தம் நிகழ்த்­தப்­படும் ஜும்ஆ பிர­சங்­கங்கள் ஒலிப்­ப­திவு செய்­யப்­பட்டு அவை தொடர்பில் ஆராய்­வ­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட வேண்­டு­மென அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­க­ளுக்கு அறி­வு­றுத்தல் வழங்­கி­யுள்ளார்.

அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அனைத்து ஜும்ஆ பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் அனுப்பி வைத்­துள்ள அறி­வு­றுத்தல் கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

*நாட்டில் இடம்­பெற்ற தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளுக்கு ஒரு சில தீவி­ர­வா­தி­களே காரணம். பள்­ளி­வா­சல்­களில் எந்­தவோர் அடிப்­ப­டை­வாத பிர­சா­ரத்­துக்கும் இட­ம­ளிக்கக் கூடாது.

*சமூ­கத்தில் ஊடு­ரு­வி­யுள்ள பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்கும், நாட்­டி­னதும், நாட்டு மக்­க­ளி­னதும் பாது­காப்­பினை உறுதி செய்­வ­தற்கும் பாது­காப்பு பிரி­வி­ன­ருக்கும் பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்க வேண்டும்.

*சட்ட விரோ­த­மான தீவி­ர­வா­தத்­துக்கு ஆத­ர­வாக எந்­த­வொரு செயற்­பா­டு­களும் பள்­ளி­வா­சல்­க­ளுக்குள் இடம்­பெ­றக்­கூ­டாது. இட­ம­ளிக்­கவும் கூடாது.

*தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­வர்கள் அச்­சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் இஸ்­லாத்­துக்கு எதி­ரா­ன­வர்கள். இஸ்­லாத்­துக்கு எதி­ரான செயற்­பாட்­டினைக் கொண்­ட­வர்கள். அவர்கள் முஸ்­லிம்கள் அல்ல.

ஒரு அப்­பா­வியைக் கொலை செய்தால் அவர் முழு சமூ­கத்­தையும் கொலை செய்­த­தற்கு பொறுப்­பாவார் என இஸ்லாம் தெரி­வித்­துள்­ளது என்­பதை ஒவ்­வொ­ரு­வரும் நினைவிற் கொள்ள வேண்டும்.

*-பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் ஏனைய இன மக்­க­ளுடன் நல்­லி­ணக்­கத்தைப் பேணவும், நல்­லு­ற­வினைப் பலப்­ப­டுத்­தவும் திட்­டங்­களை வடி­வ­மைத்து செயற்­ப­டுத்த வேண்டும். இது நிர்­வா­கத்தின் பொறுப்­பாகும். சமூகங்களுக்கிடையில் பொதுவான கருத்துகளை பரிமாறிக் கொள்வதுடன் உறவினைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனைய மதத்தினரை பள்ளிவாசலுக்கு அழைத்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 comments:

  1. எல்லாவற்றையும் ஒலிப்பதிவு செய்வார்கள் என்பது என்ன நிச்சயம்?
    எனவே ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் இரு தமிழர்களை வேலைக்கு அமர்த்தி கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு சம்பளமும் பள்ளிவாசல்கள் வழங்கவேண்டும்

    ReplyDelete
  2. இது சிறந்த ஏற்பாடு.
    பெரும்பாலும் TJ பள்
    ளிகளின் கொத்பா
    பிரசங்கங்கள் சமூகத்
    தினுள் கடும்போக்கை
    யும் குழப்பத்தையும்
    உண்டுபண்ணும்
    வகையிலேயே தயா
    ரிக்கப்படுகின்றன.
    பயங்கரவாதத்தின்
    ஆரம்ப உணர்வலை
    களை தூண்டுபவை
    யாகவே அவை இரு
    க்கும். இவற்றை
    தடைசெய்வதற்கான
    மேற்குறித்த ஏற்பாடு
    நாட்டுக்கு பயனுடை
    யது.

    ReplyDelete
  3. கேவலமான பணிப்புரையும் ஆலோசனையும். நோன்பு காலமொரு அரியவாய்ப்பு தினமும் நோன்புடன் அவரவர் தனியாக இப்படியான இக்கட்டான சூழலை விட்டும் பாதுகாப்புப்பெற துஆ கேளுங்கள்.

    ReplyDelete
  4. நோன்பு காலத்தில் நீங்கள் விரும்பியதெல்லாம் பேசலாமோ?

    ReplyDelete

Powered by Blogger.