புவக்பிட்டிய தோட்ட, தமிழ் சகோதரர்களுக்கு சமர்ப்பணம் 🙈
அது 1977ம் ஆண்டு, ஏழு வருட சாபம் என்றழைக்கப்பட்ட சிரிமாவோ பண்டாரநாயகவின் பட்டினி ஆட்சியை கவிழ்த்து, 1/5 என்ற பெரும்பான்மையினால் ஜேஆரின் ஐதேக ஆட்சியமைத்து சில மாதங்களே இருக்கும், சிங்கள, தமிழ் மோதலினால் ஏற்பட்ட வன்செயலில், எமது ஊரிலிரிருந்து 2 மைல்கள் தொலைவில் இருக்கும் வத்தேகம நகரத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்களின் கடைகள் வீடுகள் உடைத்து எரிக்கப்படுகிறது,
“V S நாடார் என்ற அந்த விசாலமான கடைக்குள் இருந்த ஒருவர் உயிரோடு எரிக்கப்படுகிறார்”
மடவளை மதீனாவில் கல்வி கற்பிக்கும்,
எனக்கு நினைவு தெரிந்து,
கந்தப்பு சேர், (பக்கர் நானா வீட்டில் கூலிக்கு இருந்தார்கள்) கணபதிப்பிள்ளை டீச்சர் போல இன்னும் 10-15 பேர் கொண்ட ஆசிரியர் குழாம் இங்கு மடவளையில் பதறுகின்றனர்,
“அவர்களுக்கு உடனே யாழ்ப்பாணம் புறப்படணுமாம்”
எனது தாயார் தலைமையில் ஒரு பெண்கள் குழு உடனடியாக ஸ்தலத்திற்கு போய் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல,
“அவர்களோ வடக்கில் எங்களை கொண்டுபோய் சேருங்கள்” என அடம்பிடிக்க,
உடனடியாக டீச்சர்மாருக்கு முஸ்லிம்களை போல சேலை அணிவிக்கப்பட்டு, நெற்றியில் ஜொலிக்கும் குங்குமப்பொட்டு அழிக்கப்படுகிறது,
‘முக்காடு போட்ட மிசிஸ் கந்தப்பு’ வித்தியாசமான கெட்டப்பில் ..
ஒருநாள் முதல்வர் போல ஒருநாள் பாத்திமாக்கள் உருவானார்கள்.
குத்தூஸ் நானாட ‘தஹரா’ என்ற பேரில் இயங்கும் சில்வர் லைன் பஸ் மூலமாக யாழ்தேவியில் ஏற்றப்பட்டு பத்திரமாக தத்தமது ஊர்களை நோக்கி அனுப்பப்படுகிறார்கள். (அப்போது இந்த ப்ரைவேட் பஸ் இல்லை, சில்வர் லைன் என்பது SWRD பண்டாரநாயகவினால் விரட்டப்பட்ட வெள்ளைக்கார கம்பனி பஸ்கள்)
“இந்த பஸ்ஸில் உம்மாவோடு இன்னும் சில தாய்மார்களும் பாதுகாப்புக்காக தமிழ் டீச்சர்மாரோடு சென்றார்கள் என்பது கொசுருச் செய்தி”
இந்த ‘வரலாற்றில் ஓர் ஏடு’ பதிவுக்கும் ‘ஷண்முகா முஸ்லிம் உடை’ போராட்டத்துக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என இத்தாள் ச்சை டைம்லைன் மூலமாக அறியத்தருகிறேன்,
டொட்.
(இதுபோல நெறைய சம்பவங்கள் இருக்கு எழுத)
-மீள்பதிவு-
ரிஸ்வான் ஷஹீத் 09/05/2019
1988 கலவரத்தில் என் ஜப்பான் தோழியோடு எனக்கு தொப்பி அணிவித்து சிங்கபூர் தம்பதிகள் என்று சொல்லி மல்வானையில் இருந்து கொழும்புக்கு முஸ்லிம் நண்பர்கள் அழைத்துச் சென்றார்கள். கடந்த காலங்களில் 1958 1977 1983 கலவரங்களில் இலங்கை தமிழர்களையும் மலையக தமிழர்களுக்கும் முஸ்லிம்கள் பெரிய அளவில் உதவியிருபதை நினைத்து செயல்பட வேண்டிய காலம். உயிர்த்த ஞாயிறன்று மட்டக்களப்பு தேவாலத்தில் இலங்கை தமிழரும் கொச்சிக்கடையில் இந்திய வம்சாவழி தமிழரும் நீர்கொழுமொஇல் சிங்களவரும் கொல்லபட்டது பற்றி கலங்காத முஸ்லிம்கள் யாருமில்லை இல்லை. வரலாற்று ஐக்கியத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய காலமிது.
ReplyDeleteமேலேயுள்ள சம்பவத்துக்கும் விட இன்னும் நிறைய சம்பவங்கள் இருக்கின்றன தமிழர்களை முஸ்லிம்கள் காப்பாற்றப்பட்டதுக்கு எங்கள் முஸ்லீம் ஊரில் நூற்றுக்கு நூரு முஸ்லிம்கள் அந்த காலத்தில் இருந்தார்கள் அப்போது நாங்கள் நிறைய தமிழ் சகோதர்களை ஊருக்கு அழைத்து வந்து அவர்களை பலவருடங்களாக பாதுகாத்து வந்தோம்.
ReplyDeleteஇதையெல்லாம் வாசிக்க எனக்கு பெருமூச்சுதான் வருகின்றது. என்ன செய்யலாம்.
ReplyDeleteதமிழன் நன்ரிகெட்டவன் என எங்களுக்கு பரம்பரையாக தெறியும் எனவே இவுகலபற்றி விவரிப்பதே அறுவருப்பு
ReplyDeleteComments like unknown should not be published at this juncture. Tx Zuhair
ReplyDelete1983 Nallia n family came to Mawanella and stayed with our home around one year, after that we have arranged English classes for their income more than five years they were with us and went to Colombo
ReplyDeletegood people are in billions and racists like these puwakpitiya idiots are not even ten. we must follow people like JEYABALAN SIR. still we are the winners.
ReplyDelete