மட்டக்குளி தொடர்மாடி வீட்டு வாடகை, குடியிருப்பாளர்களை உடனடியாக வெளியேற உத்தரவு
கொழும்பு, மட்டக்குளி, ஹேனமுல்ல தொடர்மாடி குடியிருப்பில் வாடகைக்கு வசிக்கும் அனைவரையும் உடனடியாக வெளியேற வேண்டுமென வீடமைப்பு அதிகார சபை (யூ.டி.ஏ) உத்தரவிட்டுள்ளதால், இம்மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
பாதுகாப்பு காரணங்களைக் கூறி தங்களை வெளியேறுமாறு வீடமைப்பு அதிகாரசபை கோரியுள்ள போதிலும் திடீரென நாங்கள் எங்கே போவதென அந்த மக்கள் கேள்வியெழுப்புகின்றனர். சம்பவம் குறித்து குடியிருப்பில் வாடகைக்கு வசிக்கும் குடும்பத் தலைவர் ஒருவர் தினகரன் வாரமஞ்சரிக்கு நேற்று கருத்து வெளியிடுகையில், மட்டக்குளி, ‘ரன்திய உயன’ என்ற தொடர்மாடி குடியிருப்பில் நாங்கள் வாடகைக்கு வசிக்கின்றோம். இந்தக் குடியிருப்பு வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமானது. என்றாலும், வீட்டு உரிமையாளருடன் சட்டத்தரணி ஒருவர் ஊடாக முறையாக ஆவணக் கைச்சாத்தின் பின்னரே இங்கு வாடகைக்குக் குடியேறினோம்.
வீட்டு உரிமையாளர் எம்மை வெளியேறுமாறு கோரவில்லை. நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் காரணமாக நாங்கள் வெளியேற வேண்டுமென வீடமைப்பு அதிகார சபையே கோருகிறது.
நேற்றுமுன்தினம் மாலை இதுதொடர்பிலான அறிவிப்பை எமக்கு வழங்கியிருந்தனர்.
அதற்குப் பதிலளிப்பதற்கு முன்னர் நீர் விநியோகத்தை துண்டித்துவிட்டனர்.
இரண்டு பிள்ளைகளுடன் நான் வசிக்கின்றேன். எவ்வித முன்னறிவிப்புமின்றி நீரை துண்டித்துள்ளதால் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளோம். கடையில்தான் தண்ணீரைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
உடனடியாக வெளியேறுமாறு கூறினால், பிள்ளைகளுடன் நாங்கள் எங்கே போவது?. இந்தக் குடியிருப்பில் தமிழ்,சிங்களம், முஸ்லிம் என அனைத்தின மக்களும் உள்ளனர். இதுகுறித்து உரிய தரப்பினர் பதிலளிக்க வேண்டும். நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படும் சூழலில் உடனடியாக நாங்கள் எங்கே போவது? எனக் கேள்வியெழுப்பினார்.
இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசனிடம் வினவிய போது, அவ்வாறு தான் எதனையும் இதுவரை அறிந்திருக்கவில்லையென்றும் விசாரணை செய்வதாகவும் கூறினார்.
இது முற்றிலும் உண்மை இதில் நாணும் பாதிக்க பட்டுள்ளேன்
ReplyDeleteVery Sad Situation .. At this time where they will go.... Disconnecting the water connection unacceptable... Very Bad.
ReplyDelete