Header Ads



முஸ்லிம் தரப்புக்கும், ஜனாதிபதிக்கும் இன்று முக்கிய சந்திப்பு - பேசப்பட்ட விடயங்கள் என்ன...?


- AAM . Anzir -

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முஸ்லிம் தரப்புக்கும் இடையிலான முக்கிய சந் திப்பொன்று இன்று திங்கட்கிழமை,  6 ஆம் திகதி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது முஸ்லிம் தரப்பினர் அண்மைய காலங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் நெருக்குவாரங்கள் மற்றும் அத்துமீறல்கள் பற்றி விலாவாரியாக ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறியுள்ளனர்.

குறிப்பாக முஸ்லிம் பெண்கள், முகம் மூடுவதை தற்போது தவிர்த்து வருகின்றனர். எனினும் பொது நிறுவனங்களில் தலையை மறைப்பதற்குகூட அனுமதிக்கப்படுகிறார்கள் இல்லை. இதனால் முஸ்லிம் சமூகம் பெரும் கவலையடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கு உடனடியாகவே களத்தில் இறங்கியுள்ள மைத்தரி, தனது செயலாளருக்கு விடுத்த பணிப்புரைக்கமைய புதிய சுற்றுநிருபம் தயாரிக்கப்பட்டு அதாவது, முஸ்லிம் பெண்கள் தமது தலையை மறைப்பதற்கு பொது நிறுவனங்களில் அனுமதிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நீர்கொழும்பில் நடந்த வன்முறைச் சம்பவத்தினால், முஸ்லிம்களுக்கு சொத்து இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதிக்கு இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்து மைத்திரிபால இது திட்டமிட்ட கலவரம் அல்ல என்றும், குடிபோதையினால் ஏற்பட்ட குழப்பமே எனவும் விபரித்துள்ளார்.

அத்துடன் முஸ்லிம்கள் எவரேனும் தீவிரவாதத்தினால் கவரப்பட்டவர்களாக இருப்பின், அவர்களுக்கு மன்னிப்புக்காலம் வழங்கப்பட்டு, அவர்கள் சரணடைய வாய்ப்பு வழங்கும்படியும்  முஸ்லிம் தரப்பினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் ஜனாதிபதியிடமிருந்து இதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை.

கூடவே முஸ்லிம்களின் வாள்கள் கத்திகள் மீட்கப்படுகின்றமை பற்றியும், அதற்கு முக்கியத்துவத்தை வழங்கி சிங்கள ஊடகங்கள் தேவையற்ற பதற்றத்தை உருவாக்குவதாகவும் முஸ்லிம் தரப்பினர் ஜனாதிபதியிடம் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி பொதுவாக எல்லா வீடுகளிலும் பாதுகாப்புக் கருதி வாள் இருப்பதாகவும், எனினும் அதுனுடன் முஸ்லிம்களை மாத்திரம் தொடர்புபடுத்துவது சரியல்ல என பதில் வழங்கியுள்ளார். 

எனினும் தாம் ஊடக உரிமையாளர்களை இதுதொடர்பில் அறிவுறுத்துவதாகவும், எல்லா முஸ்லிம்களையும் பாதுகாப்புக்கு குந்தகமானவர்கள் என அடையாளப்படுத்துவதிலிருந்தும் தவிர்ந்து கொள்ளவது சரியல்லஎனவும் எனவும் சுட்டிக்காட்டி, எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர். பயங்கரவாதிகள் ஒரு சிறு குழுவினரே என்பதே தமது நிலைப்பாடு எனவும் அறிவித்துள்ளார்.


5 comments:

  1. Unfortunately Meadia Terorist becoming uperhand in Sri Lanka.

    ReplyDelete
  2. எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகளில்லை என்று மைத்திரி, ரனில் சொல்லுவது மீடியாமட்டதில் மட்டுமே உலாவுகிறது தவிர பொருப்புவாய்ந்த படையிணருக்கு அவைகள் காதுவரை எட்டவில்லை.
    எப்படியோ, இச் சந்தி ப் பை யி ட் டு மகிழ்ச்சி, குழுவினருக்கும் நன்றி.

    ReplyDelete
  3. yes brother you are correct

    ReplyDelete
  4. இத முதல் நிருத்த சொல்லுங்கள். எல்லா முஸ்லிமும் தீவிரவாதி இல்லை குறிப்பிட்ட சிலரே.இந்த வார்த்தை தான் மிகப்பெரிய இனவாத வார்த்தை.
    இஸ்லாம் பெயரில் மட்டும் உள்ள தீவிராவாதிகள்.எப்படி புத்த பெயரில் ,ஹிந்து பெயர்களில் சில தீவிரவாதிகள் உள்ளார்கலோ அவர்களைப்போல.

    ReplyDelete
  5. முதலில் மைத்திரி மாமாட வெளிப்படையா சொல்லுங்க ராணுவம் வேடிக்கை பார்த்து முஸ்லிம் சொத்துக்களுக்கு அடிக்கும் போது சாதாரண ஓருவன் கூட வருங்காலத்தில் ராணுவத்துக்கு எதிராக மாறலாம். இன்று ... ஓடுக்க பிரதான காரணம் முஸ்லிம்களின் ஆதரவு ராணுவத்தின் பக்கம் என்பதாலே. சிவில் பாதுகாப்பு நீயாயமானதாக இருந்தாலே போதும் நாடு அமைதி பூங்காவாக மாறிவிடும்.

    ReplyDelete

Powered by Blogger.