Header Ads



புர்கா கட்டாயமென்றால் வீட்டைவிட்டு வெளியே வராதீர், முகத்தை மறைக்க எதனையும் பயன்படுத்தாதீர்

இலங்கையின் தேசிய பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இஸ்லாமிய பெண்கள் அணியும் முகத்தை மறைக்கும் புர்கா உடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் சில பெண்கள் புர்காவுக்கு பதிலாக வேறுவிதமாக முகத்தை மறைத்து செல்வதால் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

வைத்திய தேவைக்காக பயன்படுத்தும் மாஸ்க் அணிந்து செல்வதால், பல பெண்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புர்காவுக்கு பதிலாக முகத்தை மறைப்பதற்கு வேறு எதனையும் பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

புர்கா கட்டாயம் அணிய வேண்டும் என நினைத்தால் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என இஸ்லாமிய பெண்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

நிலவும் சட்டத்தின் கீழ் தேசிய பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகவும், அனைவரையும் பாதுகாப்பதற்காகவும் இந்த சந்தர்ப்பத்தில் முடிந்தளவு ஆதரவை வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெருக்கடியான நிலையில் முகத்தை மூடி மறைக்க முயற்சித்தால், அது பாரிய குற்றமாக அமையும் என சட்டத்தரணி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.