புர்காவை கழற்றாமல் வைத்திய பணியிலிருந்து, விலகியவருக்கு அல்லாஹ் நற்கூலி வழங்கட்டும்
ஹோமாகம வைத்தியாசாலையில் புர்காவை நீக்கி பணி செய்யுங்கள் என்று கூறியதற்கு இராஜினாமா கடிதம் கொடுத்த எமது வைத்திய சகோதரி ஒருவரின் செய்தியைக் கேட்டு அதிர்ந்து போனேன் ,
குறித்த சகோதரியின் முடிவுக்கு கிடைக்கும் வரவேற்ப்பை காணும் போதும் அதிர்ச்சியால் உடம்பெல்லாம் புல்லரித்து போகின்றது.
குறித்த சகோதரியின் எண்ணத்திற்கு அல்லாஹ் நற்கூலி வழங்க வேண்டும்.
இருந்த போதிலும் வைத்திய துறையில் இருக்கின்றவர்களோடும் , நாட்டின் புத்திஜீவிகளோடும் இன்னும் கலந்தாலோசித்த பின்னர் முடிவெடுத்திருக்கலாம்.
ஏனெனில்
1. ஈமானை இழக்கின்ற , நம்பிக்கை கோட்பாட்டையே பாதிக்கின்ற ஒரு விடயமன்று.
நிகாப் , புர்காவை அகற்றிவிடுவது என்பது ஈமானை பாதிக்கின்ற ஒரு விடயம் அல்ல என்பதில் எல்லோரும் உடண்படுவார்கள்.
நிகாபுக்கும் , புர்காவுக்கும் மார்க்கத்தில் எந்த சட்டநிலைப்பாட்டை கொடுப்பது என்பதிலையே சட்ட வல்லுனர்களுக்கிடையில் ஓர் உறுதியான நிலைப்பாடு கிடையாது , அரேபிய பாலைவனச் சூழ்நிலையில் குறித்த ஒரு சில தேவைகளுக்காக அணியப்பட்ட அரேபிய காலாச்சாரத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு அங்கி என்பதிலையே பல நவீன கால சட்ட வல்லுனர்கள் உடண்படுவது ஒரு பக்கம் ,
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் அமைதிக்கும் அச்சுறுத்தலாக அடையாளப்படுத்தப்பட்டு தற்காலிகமாக தடைசெய்யப்பட்டும் , நாட்டிலே அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கு குறித்த அங்கியை முறைகேடாக பயன்படுத்தியுள்ளமை மிகத் தெளிவாக தெரிகின்ற போதும் குறித்த அங்கியை தவிர்ந்திருப்பதே அறிவுடமை மாத்திரமல்ல, சன் மார்க்கக் கடைமையும் ஆகும் ,அகில இலங்கை ஜம்யதுல் உலமா இது தொடர்பான வழிகாட்டலை , அறிவூட்டலை இன்னும் விரிவுபடுத்த வேண்டும்.
2. மார்க்கத்தில் முன்னுரிமை படுத்தல் பற்றிய விளக்கமின்மை.
துறை சார்ந்த நிபுணர்கள் உருவாக்கப்படுவது என்பது ஓர் சமூக கடமை , அரசின் பல்வேறு துறைகளுக்கும் தேவையானவர்கள் புடம் போடப்பட்டு , அரசின் பல் வேறுபட்ட துறைகளில் நின்று நாட்டின் முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் தேசிய நீரோட்டத்தில் நின்று தேசிய பங்களிப்புச் செய்தல் என்பது இலங்கை முஸ்லீம் சமூகத்தின் முதன்மை கடமையாகும். என்பது மாத்திரமன்றி எதிர்கால முஸ்லீம் சமூகத்தின் இருப்பை கூட தீர்மானிக்கும் விடயமாகும். ……
இவ்வளவு முக்கியமான முதன்மை கடமையொன்றை நிறைவேற்றும் அந்த சகோதரி கடமை கூட இல்லாத அரேபியக் கலாச்சாரத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு அங்கிக்காக முதன்மைக் கடமையொன்றை தூக்கி போடவது என்பது மிகக் கவலைக்கிடமான ஒரு செயலாகும். (உயிரா? மார்க்கமா? என்று வந்தால் கூட போலியாக நடித்து உயிரை முற்படுத்துவதை (பலவீனமான சந்தர்பங்களில்) வலியுறுத்தும் மார்க்கம் இது)….. முன்னுருமைப்படுத்தும் மார்க்க அறிவு சம்பந்தமான தெளிவூட்டல் இன்னும் சமூகத்தில் பேசப்பட வேண்டும்.
3. மிகமோசமான ஓர் முன் உதாரணம்
இஸ்லாமிய சட்ட வரம்புகளைப் பேணி தமக்குறிய ஆடை அணிகலன்களை அமைத்து கொள்வதற்கு இந்த நாட்டில் சட்ட பூர்வமான அங்கீகாரம் இருக்கும் போது இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு அப்பால் வருகின்ற ஒரு அங்கிக்காக பதவி துறப்பது என்பது , இது போன்ற பிரச்சினைகளை எதிர் கொள்கின்றவர்களுக்கு (மாணவிகள் , ஆசிரியர்கள்……) ஓர் மோசமான முன்ணுதாரனமாக அமைந்து விடக் கூடாது , அது சமூகத்தை இன்னும் பிற்போக்கான இக்கட்டான மிக மோசமான சூழ்நிலைக்கே கொண்டு போய் சேர்க்கும்.
4. நாட்டு சட்ட திட்டத்திற்கு முரணானவர்கள் அல்ல நாங்கள்
முஸ்லீம்கள் , நாட்டு சட்ட திட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் , சட்டத்தை மதிக்காதவர்கள் , என்ற விமர்சனத்தை யதார்த்தமாக்கும் வகையில் எமது செயற்பாடுகளும் முடிவுகளும் அமைந்து விடக்கூடாது.
எனவே குறித்த அந்த சகோதரியை உத்தியோக பூர்வமாகவும் , கண்ணியமாகவும் அணுகி குறித்த முடிவின் பாரதூரங்களை எடுத்துச் சொல்லி உள ரீதியாக தைரியமூட்டி தனது பணியை தொடர்வதற்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குவது சமூகக் கடமையாகும்.
@ஹுஸ்னி ஹனீபா (நளீமி)
Sir, Pls take this valuable duty on your shoulder and take steps to do necessary as mentioned above. May Almighty help you.
ReplyDeleteAllah may grant her Jannah, She is a legend for ladies who candle at Pansala
ReplyDeleteநிகாப் தொடர்பான இவரின் சொந்த கருத்தை மார்க்கத்தின் கருத்தாக திணிக்க முட்படுவது இவ் ஆக்கத்தின் கீழ்த்தரத்தை சுட்டிக்காட்டுகின்றது.
ReplyDeleteமேலும், தற்போதைய சூழலில் நிகாப் வாஜிபா,இல்லையா! என்ற வாதப்பிரதிவாதங்களுக்கு அப்பால், 1000க்கும் மேற்பட்ட முஸ்லீம்களின் வரலாற்றைக்கொண்ட இந்நாட்டில் முஸ்லீம்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியதே சமூகம் வேண்டி நிற்கும் கோரிக்கை,
விரும்பியவர் மறைக்கட்டும்,விரும்பியவர் மூடட்டும் ,அவர்களின் சுயவிருப்பம், ஆனால், மார்க்கத்திலுள்ள ஒரு விடயத்தை விட்டுக்கொடுத்து விட்டு இவ்வாறு முஸ்லீம்களின் பல உரிமைகளும் துண்டாடப்படுவதை ஈமானுள்ள எந்த முஸ்லீமாலும் ஏற்றுக்கொள்ள முடியாது,
மார்க்கத்தில் முற்படுத்துவதை பற்றி உங்களின் குறுகிய சிந்தனையில் பட்டதை எழுதியுள்ளீர்கள், ஆனால், முஸ்லீம்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக தன் வைத்தியத் தொழிலையும் கைவிட தயாராகிய அந்த பெண்மணியின் அழகிய செயலை வைத்து இன்று நாட்டின் பெரும்பான்மை சமூகம் முஸ்லீம்களின் மார்க்கப்பற்றையும்,முஸ்லீம்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனையே உருவாகியிருப்பதை மாற்றுமதத்தவர்களின் உரையாடலின் போது புரிந்து கொள்ள முடியும்.
இந்நாடு (உங்கள் மனைவி, பெண்பிள்ளைகளை போல) முகத்தை திறந்து பக்குவமாக வீதியால் வலம் வரும் பெண்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல,
தன்னை முழுமையாக மறைத்து வாழ நினைக்கும் அந்த பெண்களும் இந்நாட்டு பிறஜைகள் என்பதை மனதில் பதிய வையுங்கள்.
மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அவசர கால சட்டத்தில் மாத்திரம் பெண்கள் தங்கள் முகத்தை மறைத்து நடமாடுவது தடைசெய்யப்பட்டுள்ள சட்டத்தை இன்று மதித்து செயற்பட்டு வரும் எம் பெண்களின் உரிமைகளை பாதுகாத்து ஒப்படைப்பது நாட்டின் அனைத்து பிறஜைகளின் பொறுப்பு என்பதை நினைவில் கொள்வோம்
Maarka aathaarangalin adippadaiyil niqab awashiyamillai endu kooruwathai pondrey... Maarka aathaarangalin adippadaiyil niqab awashiyam endra karuththum ullathu. Ethu sari, ethu migach sari enbathai Allahthaan qiyamaththil mudiweduppaan. Athuwaraikum matrawarin karuththukkum mathippalikkum samoohamaaha vaalvom.
ReplyDeleteஅந்த பெண் செய்தது 100% செரி இப்படி ஒவ்வொரு பெண்ணும் செய்ய வேண்டும்
ReplyDeleteVery good advice. Anyone please convince the doctor to re-join in the job
ReplyDeleteThis shows how wrong Muslim girls are in SL. What is wrong with these people. This tells us how some clerics have misguided our girls on this issues. While Saudi is opening up all for ladies..Cenima, driving licence and some face uncovering .. so many other issues Wahabi and Salafi stupid have imported Arab culture into SL. Now, look this radical doctor without any Islamic background knowledge ready to resign her job.. Let me remind her. How many lakh government has spent on you to make you a doctor? How will reply to Allah about this Amana of paying pack for public money.. you are educated by public money and yet, for this issue of covering or not covering face you are ready to give up your job.. what is wrong with you.. Have you consulted some good Muslim scholars not fake ones.. about this.? I could write volumes to say that you have taken wrong path on this issue. Why not make a migration to Saudi now.. Believe me in two month you will come back to SL saying Sri Lanka is better than Sauidi for their bad behaviours and manners. Allah made you for a reason in this Island.. So, go back to job and do your duty for public. it is public who spent money on you. it is an Amanah. It is more important than piece of cloth
ReplyDeleteI am not blaming, but naleemies studying only 25% of Islam & trying to give fatuwa. Please take advice from ulama before giving fatwa
ReplyDeleteWell said path of Allah n just
ReplyDeleteஆயிரம் ஆண்களுக்கு சமமான பெண் என்றே கூறவேண்டும்.
மார்க்க சட்டங்களை குர்ஆன்,ஹதீஸ் கூறும் விதத்தில் தான் எடுக்கவேண்டுமே தவிர மேற்கத்திய,பாரசீக நாகரீக சிந்தனைகளிலிருந்து சிந்திக்கும் நவீஈஈஈன உலர்கண்டங்களிலிருந்து அல்ல.
அப்படி என்றால் எல்லா பெண்களும் வீட்டில்தான் இருக்கனும்
ReplyDeleteShe should continue her service.
ReplyDeletePath way Allah.kky அவர்களின் பதில் மிக தெளிவான செய்தியை வழங்குகிறது.இவ்வாறான ஈமானிய செயல்கள் மாற்று மத த்தினரையும் சிந்திக்கத் தூண்டும்.சில வருடங்களுக்கு முன் ஓர் உலமா சொன்னது ஞாபகம் நீங்கள் இஸ்லாத்திற்காக ஏற்றுக் கொள்ளும் சிரமங்கள்தான் மாற்று சமயத்தினரிடம் அதன் பெறுமானத்தை உணர்ந்துள்ளனர் ஒழிய உங்கள் சொகுசான இஸ்லாத்தினால் அல்ல.
ReplyDeleteஒரு துருக்கித் தொப்பிக்கே போராடிய சமூகம் இது. நீங்கள் எழுதியதில் பிழையில்லை. ஆனால் அபாயாவையும் கழட்டி விட்டு வரும்படி எத்தனையோ வைத்தியசாலைகள், அரச திணைக்களங்கள் வேண்டி நிற்கும்பொழுது ஏன் நீங்கள் வாயை மூடி நிற்கிறீர்கள்? அல்லாஹ் நம் எல்லோருக்கும் குறிப்பாக அந்த வைத்தியருக்கும் அருள்பாலிப்பானாக.
ReplyDeleteGood advice and we have to agree with Jammiyathul ulama decision.
ReplyDeleteஉன்மையை சொன்னீர்கள்...
ReplyDeleteபல்லின சமூகத்தின் மத்தியில் வாழும் நாம் கடைப்பிடிக்க வேண்டிய அகீதாக்கள் ஆயிரம் இருக்கு... தெளிவுபடுத்தல் மிக அவசரமாக செய்யப்பட்ட வேண்டும்...
அனைவரும் நண்றாக சிந்தியுங்கல் உலகின் எத்தனயோ நாடுகளில் Muslim கள் வாழ்கின்ரனர்.ஆங்காங்கே தட்ப வெட்ப மற்றும் காலாசாரம் இவைகளால் உணவு,உடை என்பன வேறுபாடுகள் உள்ளன.அபாயா,அனிந்து தலயை மூடினால் போதும் ஆனால்,புர்க்கா,நிகாப்பை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எமது பெண்கள் சில காங்கலுக்கு கை விடுவது சிறந்தது.அறபு மொழியை தாய் பொழிதயாக பேசுகின்ர ஏன் அராபிய உணவையே உன்னுகின்ர எகிப்து,சிரியா,ஜோர்தான்,லெபனான்,ஈராக்,பலஸ்தீன்,இன்னும் சில Muslim நாட்டு பெண்கள் கூட 80% மானோர் டீசேட்,ஜீன்க்ஷ் ரவுசர் போட்டு தலையினை மூடிக் கொல்கின்ரனர்.ஏனெனில் அவர்கள் அரபு மொழி பேசினாலும் அரபு கலாசர உனவை அருந்தினாலும்,அவர்கள் வாழும் இடத்தின் ஆடை கலாசாரம் அது.எனவே அதில் எந்த தவறும் இல்லை.இப்பட் நிலமை இருக்க எமது சமூகத்தில் உல்லோரில் சிலரின் வறட்டு விடாப்பிடியும்,படித்திருந்தும் கிணத்து தவளை போல் போது அறிவு குறைபாடும் குராஆனில் சொல்லப்படாத சில நாடுகளின் கலாச்சார ஆடையை மார்க்கத்தினுல் புகுத்தி விட்ட சில பணத்துக்காக வேலை செய்கின்ர தவ்ஹீத் அமைப்புகள் சிலதின் மோசமான நடவடிக்கைகலுமே இந்த நிலமைக்கு எமது மக்களை தள்ளிவிட்டது என்பதே யதார்த்தம்.எனவே இனியாவது எமது அறிவை பயன்படுத்தி எது Islam தில் உள்ளது எது சில நாடுகளில் வாழும் Muslim கலின் கலாச்சாரம் என்பதை பிர்த்து அதற்கேற்ற வகயில் வீண் விதண்டா வாதங்களை தூக்கி வீசி விட்டு வாழுங்கள்.
ReplyDeleteஹீஸ்னி ஹலிபா இதுக்கு மேல என்ன இருக்கு முஸ்லிம் சமூகம் இழக்க .உரிமைகள் இழக்கும் போது அதுக்கு என்ன செய்திங்க? நம் பெண்களுக்கு இருக்கின்ற வீரம் கூட நமக்கு இல்லாம இருக்கு என்பது வெட்கம்.கேவலம் கேட்ட எந்த பயனும் அற்ற கல்வியைவிட மார்க்கம் தான் உயர்வு.இப்படி பட்ட வீர பெண்களை உங்கள் ஆணாதிக்கத்தாள் கோளைகளாக மாற்றவேண்டாம்.
ReplyDeleteயாருக்கும் நோய்வாய்பட்டால் நிச்சயம் அவரால் முடிந்ததை செய்வார்.நாம யாரும் நோய்வந்தஉடன் ஆம்புள வைத்தியரா இல்ல பொம்பள வைத்தியரா என்று பார்க்கமா, இல்லை சுகமான போதும் என்று யோசிப்போமா? சும்மா எதாவது எழுதி ஆறிவு மட்டம் என்று காம்புசுத்தாம இதுக்கு ஒரு முடிவ எத்த பாருங்க.என்ன பொருத்தமட்டில் எல்லா இனவாதிகளுக்கும் பயம் வந்து இருக்கும் முஸ்லிம் பெண்களுக்கு கைவைத்தால் பெண்களே அவர்களுக்காய் போராடுவார்கள் நாம் பார்த்த முஸ்லிம் ஆண்கள் இல்லை.
Ippadi ponal vaiththiyaththuraiyil irukkum sotpa muslimgalaiyum naam ilakka neridum. Not a good decision.
ReplyDeleteவைத்தியத்துறையுடன் சேர்த்து அவர் மார்க்கத்தையும் சரியானமுறையில் கற்றிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது, தொடர்ந்தது அவர் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல இலங்கைய்யர்களுக்கும் பிரயோசனமான ஒரு வைத்தியராகவே இருந்திருக்கலாம்
ReplyDeleteதலையங்கத்தையும் உள்ளே அடங்கியிருக்கும் கருத்தையும் பார்க்கும் பொழுது
ReplyDeleteஇதைத்தான் தடவி குட்டுறது என்பார்கள்.
இதுபோன்ற கருத்துள்ளவர்களால் தான் முஸ்லிம்கள் இன்று தன் மத உருமாள்களை இழக்கின்றனர்.
இதுபோன்ற நவீன அறிஞர்கள் தன் விரலால தன் சமூகத்தின் கண்ணை குத்துகிறவர்கள்
சகோதரி தான் அணியும் ஆடையை அணியட்டும் அவருக்கு மார்க்கம் என்பதற்கு அப்பால் அவருடைய சுய கௌரவம் என ஒன்றுட்டு அது உயிரினும்மேலானது. குண்டில் வெடித்து சிதறியவனின் மனைவி மறைப்பே இல்லாமல் தொடர்பு சாதனங்களில் புகைப்படம் போடப்பட்டதைப் போல் எல்லாப் பெண்களுக்கும் ஏற்படாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியப்பாட்டை இக்கட்டுரை விளக்குகின்றது. பயங்கரவாதச்செயற்பாடுகள் அதிகரித்துச் செல்லுமாயின் சவூதியிலும் முகம் திறக்கும் சட்டம் மிக விரைவில் வரும். முகம் மூடுவதில் கடுமையாக இருப்போரின் மனைவிமார் கைமாறிப் போகும் நிலை ஏற்படும் போதும் அவர்கள் நிதானம் அடைவர். குறிப்பிட்டவர்கள் மாற்றார் மனைவிமாரை அனுபவிப்பதற்கு முகம் மூடாமல் இருப்பது தடையாக இருக்கின்றதோ தெரியாது. அல்லாஹ் ஒருவிடயத்தில் சலுகை வழங்கியிருக்கின்றான் என்றால் இச் சமூகத்தை அழிவிலிருந்து பாதுகாப்பதற்கே.
ReplyDeleteWomen no need to cover her face in any situation. please stop supporting her and dont create unwanted problem in Srilanka. There are many Muslim Doctors working in the hospitals with Hijab. That's more than enough. Dont understand why we have to follow Arab culture here. It is up to her to continue her service or not.
ReplyDeleteAbdul Rahman சரியாகத்தான் சொன்னிங்க. முதலில் இந்தக் கோடாரிக் காம்புகளைக் களைய வேண்டும்.
ReplyDelete