Header Ads



முஸ்லிம் பெண் சட்டத்தரணிக்கு, ஏற்பட்ட அனுபவம்


கத்தியைக்கண்டதும் கழுத்தை நீட்டி படுக்கும் (பலியிடும்படி) ஒட்டகங்களை போல் எமது படித்த சமூகம் ஆகலாமா?

குண்டு வெடிப்பின் பின்னர் கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றில் (Chief Magistrate) சட்டத்தரணிகள் உட்பட ஆண்களை ஆண் போலீசாரும் பெண் சட்டத்தரணிகள் உட்பட பெண்களை பெண் பொலிசாரும் சோதனை செய்து உள்ளே அனுமதிப்பது நடைமுறையாகியுள்ளது . நீதிமன்றங்களின் பாதுகாப்பு முக்கியமானது அதற்கு நாம் ஒத்துழைப்பு கொடுத்தேயாகவேண்டும். அது எமது கடமையாகும்.

(03.05.2019) பாதுகாப்பு சோதனை நடை பெற்றுக்கொண்டிருக்கும் போது எனது மனைவி சட்டத்தரணி நுஸ்ராவும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட போது “head scarf” ஐ கலட்டி விட்டு போகும் படி இரு பெண் போலீசாரும் வற்புறுத்தியுள்ளனர். எனது மனைவி அதனை செய்ய மறுத்துள்ளார்.

“எல்லோருடைய தலையை மறைந்திருக்கும் எல்லாவற்றையும் கழட்டி திறந்த நிலையில் தான் உள்ளே அனுப்பும் படி, மேடம் (பிரதான நீதவான்)சொல்லியிருக்கிறார்.” கழட்டுங்கள் இல்லாவிட்டால் உள்ளே விடமாட்டோம் என்றுள்ளனர்.

எனது மனைவி “நான் முகத்தை மறைக்கவில்லையே !சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் முகத்தை மறைக்காமல் தலையை மறைத்து வரும் பெண்களுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கே ஏன் தொந்தரவு தருகிறீர்கள்! எனக்கேட்டதுடன் “உங்கள் மேல் அதிகாரியை சந்திக்க வேண்டும்” என கேட்டு உயர் அதிகாரியை சந்தித்து அவருக்கு சட்டநிலைமையை விளங்கப்படுத்தி தனது உரிமையை நிலைநாட்டியுள்ளார்.

அதன் பின்னர் நீதிமன்றத்திற்குள் Head scarf உடன் நுழைந்த எனது மனைவி ஏற்கனவே நீதிமன்றம் வந்த தனது சக முஸ்லீம் பெண்சட்டத்தரணிகளை அவதானித்த போது தாமே அர்ப்பணித்து (ஒட்டகங்களைப்போன்று) தலைகளை திறந்திருப்பதைக்கண்டு கவலையும் ஆத்திரமும் அடைந்துள்ளார்.

எனது மனைவியின் திறமையை விளம்பரப்படுத்துவதற்காக இதனை நான் போடவில்லை.

அல்லாஹுக்கு மாத்திரம் பயப்படும் படித்தவர்கள் எப்போதும் எந்த இடத்திலும் சமூகத்திற்கு முன்மாதிரியாக நடப்பதினூடாக அல்லாஹ் நமக்கு தந்த அமானிதமான கல்வியை சரியாக பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டிலிருந்து நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

சட்டத்தரணி சரூக் - கொழும்பு 0771884448

5 comments:

  1. குண்டு வைத்தவர்களும் எங்களுக்கு அல்லாஹ்வுக்கு மட்டும்தான் பயம் வேறு எந்த சட்டமும் எங்களைக் கட்டுப்படுத்தாது என்று கூறியவர்கள் தான். Mrs. சரூக் அவர்களின் துணிவுக்கும் சுயகெளரவத்தைப் பாதுகாப்பதற்கும் எடுத்த முயற்சிக்கு பல கோடி salutes செய்யலாம். அல்லாஹ்வுக்கு பயப்படுவது என்பது சட்டதிட்டங்களுக்கும் சேர்த்து பயப்படுவது தான். ஒரு சட்டத்தை வேண்டுமென்றே மீறி ஒருவர் மரணிப்பாராக இருந்தால் அவர் மரணத்தைத் தேடிப் பெற்றுக் கொண்டவர்கள் கூட்டத்தில் சேரமாட்டாரா? ஆனால் சட்டமில்லாத ஒன்றுக்கெதிராக நியாயம் பெற்றுக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் சுஹைப், இங்கு Mr.சரூக் அவர்கள் சொன்னது என்ன என்பதை நல்லபடியாக நினைத்து (வன்முறையற்ற முறையில்) சிந்திப்போம்,அல்லாஹ் போதுமானவன்.

    ReplyDelete
  3. இது தான் பெண் சுதந்திரம்,இதுதான் வீரம்,இதுதான் விவேகம்.இப்படியான பெண்கள்தான் சமூகத்துக்கு போற்றப்பட வேண்டும்.சில படித்த புளுக்கைள் நாம படித்தமட்டம் ,அறிவாளி என்றுகாட்ட உடளை காட்டவேண்டும் ஏன்று மடமையில் இருக்கிறார்கள்.அறிவாளி என்றால் இவரைபோல் அறிவை பயன்படுத்தி வெற்றிபெரு,உன் உரிமை இளக்காமல்.

    ReplyDelete
  4. Pity! AAL who can't protect themselves how will they defend their clients

    ReplyDelete

Powered by Blogger.