Header Ads



டாக்டர் சபீக் கைதானதன், இனக்குரோத காரணம் வெளியானது

பௌத்த தாய்மார்கள் 4000பேருக்கு கருத்தடை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள குருணாகல் வைத்தியர் மருத்துவர் சபீக் கோடிக்கணக்கு பெறுமதியான கட்டிடம் ஒன்றை வாங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் குறித்த வைத்தியர் குருணாகல் பகுதியில் கட்டிடம் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார்.

இந்த கட்டிடத்தை விலைக்கு வாங்குவதற்கு இன்னுமொரு தரப்பினர் வந்துள்ளனர்.அவர்கள் குருணாகல் சிங்கள வர்த்தக சங்கத்தை சேர்ந்தவர்கள்.

கட்டிடத்தை விலைக்கு வாங்குவதற்கு இருசாராரும் போட்டிபோட்டுள்ள நிலையில் 13 கோடி ரூபாவுக்கு சர்ச்சைக்கு உரிய வைத்தியர் விலைக்கு வாங்கியுள்ளார்.

இதற்காக குறித்த வைத்தியரை பழிவாங்கும் எண்ணத்தில் குருணாகல் சிங்கள வர்த்தக சங்கத்தை சேர்ந்தவர்கள் குருணாகல் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் ஒத்துழைப்பை கேட்டுள்ளனர்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இதற்க்கு இணக்கம் தெரிவித்துள்ளதுடன், கணக்கில் காட்ட முடியாத வகையில் சொத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்வதில்லை. சொத்து குவிப்பு தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பொறுப்பாகும். 

இந்த குற்றச்சாட்டுகளின் கீழ் நபரொருவரை கைது செய்யும் உரிமை குறித்த ஆணைக்குழுவிற்கே உள்ளது. 

4000 கதை உருவாக்கம்

இதற்கமைய குறித்த வைத்தியரை இருக்குவதற்கு எவ்வித முறைபாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. விசாரணை செய்யப்படாத 4000 சிங்கள பௌத்த தாய்மார்கள் கருத்தடை குற்றச்சாட்டை திவயின பத்திரிகை மூலம் சமூகத்தில் உலாவவிட்டு சமூகத்திடையில் பிரச்சனையை உருவாக்கியது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் ஆர்வலர்களான பேராசிரியர் சன்ன ஜயசுமன மற்றும் மருத்துவமனை இயக்குனர் சரத் வீர பண்டார.

இந்த விடயம் தொடர்பாக தீவிர சந்தேகத்தை எழுப்பி, ஊடகங்களின் மூலம் மக்களை கொந்தளிக்க வைத்த நிலையில் இந்த இரண்டு நாட்களில் குறித்த வைத்தியருக்கு எதிராக 51 முறைப்பாடுகள் மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளது.4000 பேருக்கு கருத்தடை மற்றும் குடும்பக்கட்டுப்பாடு செய்ததாக கூறப்படும் கதை பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியர் மோசடிச் செயல்களையோ அல்லது வேறு குற்றங்களையோ செய்திருந்தால் கண்டிப்பாக அவர் தண்டிக்கப்படவேண்டும். அதில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும் இந்த முழுமையான கதையும் வர்த்தக பொறாமை மற்றும் இனவாதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

இவை அனைத்தையும் லங்கா நியூஸ் வெப் ஆகிய நாம் வெளியிடுவது பொறுப்பான ஊடகம் என்ற ரீதியிலாகும். இனவெறி வேகத்தை நோக்கி நகர்ந்து செல்வது எளிதானது மற்றும் மிகவும் பிரபலமானது. சிந்தித்து செயற்பட்டால் பாரதூரமான விடயங்களில் இருந்து வெளிவரலாம்.

KK

4 comments:

  1. Doctor Shafi ippothu Shafeek aahivittar.
    veru peyarkalai poruthu parpom.

    ReplyDelete
  2. என்வே அந்த தாய்மார்களினை மருத்துவ பரிசோதனை செய்தால் தெரியும் இவை உண்மையா அல்லது கட்டுக் கதையா என.ஏன் இன்னும் அதர்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை

    ReplyDelete
  3. கைது செய்யப்பட்ட பின்னர் முறைப்பாடு செய்யக் குறுவது புதுவமையிலும் புதுமை. கருத்தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தாய்மார்கள் மாத்திரமல்ல தந்தையின் DNA யும் பரிசோதிக்கப்படவேண்டும்



    ReplyDelete
  4. Bro. Rizard கொம்ப்ளைன் செய்த தாய்மார்கள் அனைவரையும் சும்மா இரகசியமாக செக் பண்ணக்கூடாது. அவர்களது மீள் Operation நடவடிக்கைகளை Live Telecast மூலம் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்போது தான் காவிகளினதும் காடயர்களினும் அட்டகாசம் அடங்கும் இந்த விடயத்தை Dr. Shafi விசாரணயாளர்களிடம் அறிவுறுத்த வேண்டும் அவர் உண்மையானவராக இருந்தால்.

    ReplyDelete

Powered by Blogger.