Header Ads



வகாபிசத்தை விட, சலபிக் கோட்பாடு மிகவும் ஆபத்தானது - ஞானசார

இஸ்லாமிய வகாபிஷம் மற்றும் அடிப்படைவாதிகள் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளிடம் தாம் கையளித்திருந்த ஆவணங்களை அடுத்தவாரம் வெளிப்படுத்தவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.  

சிலோன் தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் அப்துல் ராஷிக், தகவல்களை வழங்கும் போர்வையில் பாதுகாப்புத் தரப்பினரை தவறாக வழிநடத்துகிறார் என்றும் தெரிவித்த ஞானசார தேரர், அமைப்பின் தலைவர் அப்துல் ராஷிக்கை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். 

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.   அவர் இங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், 

சிறைவாழ்க்கை எனக்குப் பட்டப் பின்படிப்பை போன்றிருந்தது. எவரது விமர்சனமும் எனக்கு அவசியமற்றது. எனது தலைவர் புத்தர்தான். வகாபிஷத்தைவிட சலபிக் கோட்பாடு மிகவும் மோசமானது. சலபிக் கோட்பாடு மற்றும் வகாபிஷத்தால் முஸ்லிம்கள் மோசமாக ஆக்கிரமித்துள்ளதாகவும், அதிலிருந்து எம்மை காப்பாற்றுமாறும் முஸ்லிம்கள்தான் எம்மிடம் கூறியிருந்தனர்.  

2013ஆம் ஆண்டில் சஹரான் என்பவரால் கிழக்கு மாகாணத்தில் வகாபிஷம் போதிக்கப்படுவதாக நான் தெரிவித்திருந்தேன். 2013ஆம் ஆண்டு வகாபிஷவாதிகள் தொடர்பில் நான் நாட்டுக்கு தகவல்களை வெளிப்படுத்தியிருந்தேன். ஆனால், அதற்கு முன்னரே முன்னாள் அமைச்சர் அலவி மௌலான இவர்கள் தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்.  

இது தொடர்பில் கதைத்தமையால் எனக்கு எதிராக ஆறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாரத்துக்குள் சிலோன் தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் அப்துல் ராஷிகை கைதுசெய்ய வேண்டும். அவரிடம் அனைத்துத் தகவல்களையும் பெறலாம். இந்த விவகாரம் தொடர்பில் நான் ஐ.நாவிடமும் தகவல்களை வழங்கியுள்ளேன். அடுத்தவாரம் இந்த ஆவணங்கள் அனைத்தையும் வெளிப்படுத்தவுள்ளேன் என்றார். 

(சுப்பிரமணியம் நிஷாந்தன்)  

1 comment:

  1. சூபிசம் குளிர்காய்கிறது...

    ReplyDelete

Powered by Blogger.