சிங்களவர்களை கோபமூட்ட வேண்டாம் - ஆசாத் சாலிக்கு எச்சரிக்கை
இந்த நாட்டில் இருக்க வேண்டியது ஒரு சட்டம் எனவும், அசாத் சாலி போன்றவர்கள் இந்த நாட்டில் தனியான சட்டம் உருவாக்கிக் கொள்ளப் போய்த்தான் இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் முன்னாள் மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இந்த நாட்டிலுள்ள விகாரையாக இருக்கலாம், முஸ்லிம் பள்ளியாக இருக்கலாம், கிறிஸ்தவ ஆலயமாக இருக்கலாம், எதனையும் பாதுகாப்புப் பிரிவுக்கு எந்த நேரத்திலும் சென்று சோதனையிட முடியும். இதற்கு தனியான சட்டங்களை கொண்டு வர முடியாது.
சிங்கள இன மக்களைக் கோப மூட்டக் கூடியவாறு அறிவிப்புக்களை விடுக்க வேண்டாம் என அசாத் சாலி ஆளுநரிடம் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். மினுவாங்கொட வன்முறைச் சம்பவம் குறித்து அசாத் சாலி விடுத்த அறிவித்தலின் மூலம், சிங்கள மக்கள் மீண்டும் கோபம் கொண்டுள்ளனர்.
ஆளுநர் அசாத் சாலி இனவாதத்தை தூண்டும் விதத்தில் கருத்துத் தெரிவித்து வருவதாகவும் பிரசன்ன ரணதுங்க இன்று ஊடகங்களிடம் மேலும் குறிப்பிட்டார். DC
பிரசன்ன ரனதுங்கவிடம் நாங்கள் கேட்கவிரும்புவது, முஸ்லிம்களாகிய நாங்கள் சிங்களவர்களின் எத்தனை பன்சலைகளை உடைத்திருக்கிறோம் எத்தனை வர்த்தக நிலையங்களையும் கடைகளையும் தீயிட்டு கொழுத்தியிருக்கிறோம் எத்தனை சிங்கள வீடுகளை நாசமாக்கியிருக்கிறோம் எத்தனை கோயில்களை உடைத்திருக்கிறோம் என்றும் எத்தனை ராணுவத்தை அல்லது பொலிசாரை கொண்டிருக்கிறோம் என்றும் கூற முடியுமா?
ReplyDeleteஇலங்கை முஸ்லிம் தலைவர்கள் ஒருபோதும் இனவாதத்தை தூண்டியவர்கள் அல்ல.பயங்கரவாதம் புறியச் சொன்னவர்களுமல்ல புறிந்தவர்களுமல்ல. மேலும் தமிழீள விடுதலை புலிகளைப் போன்றோ அல்லது சிங்களஜே வி பி கலகக்காரர்களைப் போன்றோ பொதுச் சொத்துக்களை நாசமாக்கி நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து நாட்டையும் மக்களையும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளியவர்களுமல்ல. இன்னும் அரசியல் தலைவர்களையும் மதகுருமார்ளையும் தொழுகையில் ஈடுபட்டவர்களையும் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்களையும் கொத்துக்கொத்தாக வெட்டியும் கொத்தியும் சுட்டும் கொன்று குவித்தவர்களுமல்ல என்பதை நல்ல அரசியல்வாதியான ரெஜிரணதுங்கவின் மகன் பிரசன்ன போன்ற இனவாதிகள் புறிந்துகொள்ள வேண்டும்.
உலக இஸ்லாமிய எதிர்ப்புவாதிகளான இஸ்ரேலின் மொஸாட்டினால் ஆரம்பிக்கப்பட்ட மனிதபடுகொலை இயந்திரமான ISIS தீவிரவாதிகளின் பொறிக்குள் சிக்கிக்கொண்ட முஸ்லிம் பெயர்தாங்கிகள் சிலர் செய்த ஒரு காரியத்துக்காக ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் அடக்கி ஒடுக்க நினைப்பது முட்டாள் தனமாகும்.இலங்கை முஸ்லிம்கள் அன்று முதல் இன்றுவரை சமாதானத்தையும் சகவாழ்வையும் விரும்பி வாழ்பர்கள். அதனால்தான் ஸஹரானியவாதிகளை ஏப்ரல் 21 முதல் இன்றுவரை பொலிசாருக்கும் ராணுவத்தினருக்கும் காட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் முஸ்லிம் எதிர்ப்புவாதிகள் புறிந்து கொள்ள வேண்டும்.
எனவே புனித வணக்கஸ்தளமான பள்ளிவாசலுக்குள் ராணுவத்தையும் நாய்களையும் அனுப்பி சோதனை என்ற பெயரில் அசிங்கப் படுத்தாமல் முஸ்லிம்களின் ஒத்துளைப்பை பெற்று பயங்கறவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் துடைத்தெறிவதற்கு சிங்கள மற்றும் தமிழ் தலைவர்கள் முஸ்லிம் தலைவர்களுடன் இணைந்து செயலாற்ற முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
இந்தக் கட்டுரையை முடிந்தவர்கள் சிங்களத்திலும் மொழிபெயர்த்து ஏனைய இலத்திரணியல் ஊடகங்களிலும் பிரசுரிக்குமாறு அன்பாய் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி
மலேசியாவிலிருந்து தீன் முஹம்மத்