Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை கட்டுப்படுத்த, இதுவரை உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை

வடமேல் மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்த இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி பேராசிரியர் தீபிகா உடுகமவின் கையொழுத்துடன் பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் விஜயம் செய்து அப்பகுதியில் உள்ள பிரதேசவாசிகள், மதத்தலைவர்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரை சந்தித்திதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த கடிதத்தின் மூலம் வடமேல் மாகாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.