Header Ads



டாக்டர் சாபி மீது, அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

சர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் மொஹமட் சாபி தொடர்பில் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வைத்தியரினால் சட்டவிரோமான முறையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் இருந்தால், குற்ற விசாரணை திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் பொலிஸார் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேகரித்தமை தொடர்பில் குருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் சியாப்தீன் மொஹமட் சாபி கைது செய்யப்பட்டார்.

குறித்த வைத்தியரினால் சட்டவிரேதமான சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுவரை 8000 அறுவகை சிகிச்சை செய்து கொண்டதாகவும் அதில் 4000 பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த வைத்தியருடன் இணைந்து பணியாற்றிய சில வைத்தியர்கள் சியாப்தீன் மொஹமட்டுக்கு ஆதரவாக தமது கருத்தினை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

1 comment:

  1. அப்படியென்ரால் ஏன் பாதிக்கப்பட்ட பெண்கள் பரிசோதனை மூலம் நிருபிக்க முன்வரவில்லை

    ReplyDelete

Powered by Blogger.