Header Ads



பொது இடங்களில் முகத்தை மறைப்பதற்கு எதிரான வர்த்தமானி, ஜனாதிபதியின் கையெழுத்துடன் வெளியானது


பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ்  இந்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம், ஏதாவது ஆடை, உடுப்பு அல்லது துணிகள், ஒருவரை அடையாளம் காண ஏதேனும் வகையில் சிரமமாக்கும் வகையில்,  முழு முகத்தையும் மறைக்கும் வண்ணம்  பொது இடத்தில் அணியப்படல் ஆகாது.

இவ்வாறு அணிபவர்கள், இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, பொலிஸ் அதிகாரிகள் அல்லது சிவில் பாதுகாப்பு படை உறுப்பினர்  உத்தரவுக்கமைய, ஒருவரை அடையாளம் காண, காதுகள் உட்பட  முழு முகத்தை மறைக்கும் எந்த ஒன்றினையும் அகற்ற வேண்டி நேரிடும்.

இங்கு முழு முகம் என குறிப்பிடப்படுவது, நெற்றியில் இருந்து வாய்க்கு கீழுள்ள நாடி வரைஎன்பதாகும். இங்கு காதுகள் உள்ளடங்காது எனவும் குறித்த வர்த்தமனையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

3 comments:

  1. அ.இ.ஜ.உ.சபையோ முஸ்லிம் திணைக்களமோ செய்ய வேண்டிய வேலையை நேரத்திற்கு செய்யாது விட்டமையால் அதனை வர்த்தமானி செய்கிறது. பிறைகாணும் விடயம் தொடக்கம் காதி நீதிமன்றம் வரை இன்னும் பல வர்த்தமானிகள் எதிர்காலத்தில் வெளிவரலாம். காலம் அறிந்து நேரம் அறிந்து வாழ முடியாது போனால் வர்த்தமானிகள் மூலம் வாழ்க்கை செப்பனிடப்படும்.

    ReplyDelete
  2. அதுசரி. ஆனால் இனிமேல் சுவாச நேரயுள்ள கூலித்தெரழிலாலிகள் தங்கள் வேலைகளை பெரது இடங்களில் செய்ய நேரிட்டால் தூசு துனிக்கைகளில் இருந்து பாதுகாக்ககூட இனிமேல் கைக்குட்யைை கூட இனி முகத்துக்கு அணியமுடியாது. பாவம் அவர்களின் நிலை.

    ReplyDelete
  3. பயங்கரவாதம் முஸ்லிம்களிடத்தில் இருந்த முளைவிட்டதால் அவர்களின் உடையில் கைவைத்துவிட்டார்கள் - இது ஆரம்பமே. இது எதில் முடிவடையும் ?

    சிங்களவர்களில் சிலர் பயங்கரவாதிகளாக செயல்பட்டார்கள் - ஆனால் அவர்களின் கலாச்சாரம் பாதிக்கப்படவில்லை.

    அதேபோல் தமிழர்கள். ஆயினும் அவர்களின் கலாச்சாரத்தில் கைவைக்கப்பட்டதா ?

    போத்க்குறைக்கு மத்ரசாவிலும் கைவைக்கத் துவங்கிவிட்டார்கள். இன்னொருபுறம் இனவாதிகள் சொத்து மற்றும் உயிர் அழிப்பில் இறங்கிவிட்டார்கள்.

    இனி நமக்காக எது மிஞ்சுமோ தெரியாது ?

    ReplyDelete

Powered by Blogger.